வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: Thiruporur Block Latest News
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...
Showing posts with label Thiruporur Block Latest News. Show all posts
Showing posts with label Thiruporur Block Latest News. Show all posts

Tuesday, April 28, 2020

மாமல்லபுரம் அடுத்த பட்டிபுலம் ஊராட்சியில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வழங்கிய கொரோனா நிவாரண உதவிகள் | Pattipulam Congress Persons Giving Corona Relief

144 தடை உத்தரவால் வீட்டுக்குள்ளேயே வருமானம் இன்றி முடங்கி கிடக்கும் பொதுமக்களுக்கு பல்வேறு தரப்பினர் நிவாரணப்பொருள் வழங்கி வருகின்றனர். 


இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அடுத்த பட்டிபுலம் ஊராட்சியில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பன்னீர்செல்வம் தலைமையில் சுமார் 1500 குடும்பங்களுக்கு 3 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது. 


இதில் கலந்து கொண்டு இருளர் இன மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கி துவக்கி வைத்த காங்கிரஸ் கட்சியின் காஞ்சிபுரம் முன்னாள் நாடாளுமன்ற  உறுப்பினர் பெ.விஸ்வநாதன் தமிழக அரசால் வழங்கப்பட்ட 1000 ரூபாய் நிவாரண தொகை அவர்களுக்கு போதுமானதாக இல்லை. 

எனவே அதனை உயர்த்தி ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் 5000 ரூபாய் வழங்கிடவேண்டும் எனவும் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் தமிழக அரசு தனிக்கவனம் செலுத்த வேண்டும் என்றும் போர்க்கால அடிப்படையில் கொரோனாவை ஒழிக்க மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

நிகழ்வில் சிவராமன் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் சிவராமன், திருப்போரூர் வட்டார மீனவரணி தலைவர் தனசேகர், திருப்போரூர் தெற்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர். பன்னீர்செல்வம் ஆகியோருடன் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

Monday, December 30, 2019

மாமல்லபுரம் அருகே கார் மோதி முதியவர் பலி | Old man died in Mahabalipuram Car Accident

மாமல்லபுரம் அருகே, கார் மோதி, முதியவர் இறந்தார்.மதுராந்தகம் அடுத்த, கே.கே.புதுாரைச் சேர்ந்த, வேதநாயகம் மகன் ஆசிர்வாதம், 55. மாட்டுக்கறி வியாபாரி.



நேற்று மாலை, மாமல்லபுரம் அடுத்த, கிருஷ்ணன்காரணை பகுதியில், மாடு வாங்க வந்தார்.மாலை, 5:30 மணிக்கு, கிழக்கு கடற்கரை சாலையை கடந்ததாக கூறப்படுகிறது. புதுச்சேரியிலிருந்து, சென்னை சென்று கொண்டிருந்த கார், அவர் மீது மோதியதில் அவர், சம்பவ இடத்திலேயே இறந்தார். மாமல்லபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Monday, April 15, 2019

தையூர் ஊராட்சியில் கழிவுநீர் தேக்கம் : புகார் மீது அதிகாரிகள் அலட்சியம்




திருப்போரூர்: சென்னை கேளம்பாக்கம் அருகே தையூர் ஊராட்சி வளர்ச்சி அடைந்துவந்ததாலும் அதற்கேற்ப உள்கட்டமைப்பு வசதிகள் செய்யப்படவில்லை. தையூர், கேளம்பாக்கம் ஊராட்சியில் உள்ள வீடுகள், ஓட்டல்கள் மற்றும் திருமண மண்டபங்களில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர், முறையான வடிகால் வசதி இல்லாததால் சாலையோரம் உள்ள மழைநீர் கால்வாய்கள் வழியாக பழைய மாமல்லபுரம் சாலையை ஒட்டி குட்டை போல் தேங்கி நிற்கின்றன. 



இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி மக்களுக்கு பல்வேறு உடல்உபாதைகள் ஏற்படுகிறது. கழிவுநீர் பாதிப்பில் இருந்து மக்களை பாதுகாக்க வேண்டும் என்று மக்கள் கூறுகின்றனர். ஆனால் கழிவுநீர் அகற்றி, உள்கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ள கேளம்பாக்கம் மற்றும் தையூர் ஊராட்சி நிர்வாகத்தில் போதிய நிதி ஆதாரம் இல்லை’’ என சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கூறுகின்றனர். 



இதுகுறித்து சாத்தாங்குப்பம் குடியிருப்போர் சங்க நிர்வாகிகள் கூறுகையில், ‘’எங்கள் குடியிருப்போர் நலச் சங்கத்தின் சார்பில் தையூர், சாத்தங்குப்பம், கேளம்பாக்கம் பகுதிகளில் மழைநீர் கால்வாய், கழிவுநீர் கால்வாய், சாலைகள் அமைத்து தர வேண்டுமென மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை விடுத்தோம். இப்பகுதிகளில் அரசு கூடுதல் நிதி கொடுத்து, இங்கு பாதாள சாக்கடை திட்டத்தைநிறைவேற்றித் தரவேண்டும்’’ என்றார்.