வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: திருக்கழுக்குன்றத்தில் பாஜக சார்பில் கோவில் பணியாளர், பேரூராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட நிவாரணம் | Corona Relief Given by BJP at Thirukazhukundram

எங்களது பிற செய்திகளை இங்கு தேடவும்

எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Wednesday, April 29, 2020

திருக்கழுக்குன்றத்தில் பாஜக சார்பில் கோவில் பணியாளர், பேரூராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட நிவாரணம் | Corona Relief Given by BJP at Thirukazhukundram


கொரோனா நோய் பரவாமல் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர்
இந்நிலையில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில இளைஞரணி தலைவர் வினோஜ் தலைமையில் மாநில இளைஞரணி செயலாளர் துரை தனசேகரன் ஏற்பாட்டில் செங்கல்பட்டு மாவட்ட பா.ஜ.க. தலைவர் பலராமன்திருக்கழுக்குன்றம் காவல் ஆய்வாளர் முனிசேகர், அகஸ்திய கிருபா அன்புச்செழியன் ஆகியோரின் முன்னிலையில் அருள்மிகு வேதகிரீஸ்வரர் திருக்கோவில் அர்ச்சகர்கள், பணியாளர்கள் மற்றும் பேரூராட்சியில் பணி புரியும் தூய்மை பணியாளர்கள் என 200 குடும்பங்களுக்கு சமூக இடைவெளியை கடைபிடித்து அத்தியாவசிய பொருட்களான அரிசி பருப்பு காய்கறிகள் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டது.
இதில் இந்து முன்னணி அமைப்பின் காஞ்சி மாவட்ட தலைவர் ஆர்.டி.மணி, துணை தலைவர் மணிகண்டன், திருக்கழுக்குன்றம் ஒன்றிய தலைவர் ஆறுமுகம், பொறுப்பாளர் சரவணன் உள்பட பாஜக நிர்வாகிகள், தனசேகர பாண்டியன், மதன்குமார், மணிகண்டன் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் அனைவருக்கும் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

No comments:

Post a Comment