வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: கருங்குழியில் ஆய்வு நடத்திய ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் அதிகாரிகள் | Corona Zonal Officer inspecting at Karunguzhi Town Panchayat
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Wednesday, April 15, 2020

கருங்குழியில் ஆய்வு நடத்திய ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் அதிகாரிகள் | Corona Zonal Officer inspecting at Karunguzhi Town Panchayat

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், கருங்குழி பேரூராட்சியில் கொரோனா வைரஸ் தடுப்பு பணிகள் குறித்து ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் அதிகாரிகள் அடங்கி குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். 
மண்டல கண்காணிப்பு அலுவலர் உதயசந்திரன் இ.ஆ.ப., காவல்துறை ஐஜி.நாகராஜன், இ.கா.., செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஜான் லூயிஸ், இ.ஆ.ப., மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணன், மாவட்ட வருவாய் அலுவலர், சுகாதார இணை இயக்குனர், மதுராந்தகம் வருவாய் கோட்டாட்சியர் லட்சுமி பிரியா ஆகியோர் கருங்குழி பேரூராட்சி பகுதிகளில் கொரோனா தடுப்பு பணிகளை ஆய்வு செய்தனர். பின்னர்  கருங்குழி பேரூராட்சி அலுவலகத்தில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
மேலும், மேலவலம்பேட்டை பகுதியில் கொரோனா பாதிக்கப்பட்டவர் இருந்த  இடத்திற்கு முறையான பாதுகாப்பு வேலிகள் அமைக்கப்பட்டு உள்ளதா என்பதை கேட்டறிந்தார். கருங்குழி பேரூராட்சி மற்றும் மதுராந்தகம் நகராட்சி பகுதிகளுக்கு காய்கறிகள் விநியோகம் செய்வதைப் பற்றி கருங்குழி பேரூராட்சி செயல் அலுவலர் ம.கேசவன் மற்றும் தோட்டக்கலை அலுவலர் ஆகியோர் விரிவாக எடுத்துரைத்தனர். 
 


 


 


 


 


 


No comments:

Post a Comment