வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: கருங்குழியில் தமிழ் புத்தாண்டிலும் ஓயாமல் உழைத்த பேரூராட்சி ஊழியர்கள் | Karunguzhi Town Panchayat Tamil New Year Works | Vil Ambu News
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Wednesday, April 15, 2020

கருங்குழியில் தமிழ் புத்தாண்டிலும் ஓயாமல் உழைத்த பேரூராட்சி ஊழியர்கள் | Karunguzhi Town Panchayat Tamil New Year Works | Vil Ambu News

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், கருங்குழி பேரூராட்சியில் நேற்று தமிழ்புத்தாண்டு விடுமுறை தினம் என்றாலும், தொடர்ந்து 21நாட்கள் விடுப்பு ஓய்வின்றி பேரூராட்சியின் செயல் அலுவலர் ம.கேசவனுடன் இணைந்து அலுவலக பணியாளர்கள் அனைத்து பணிகளையும் மேற்கொண்டனர்.
பொதுமக்கள் வீட்டிலேயே  இருக்க வேண்டும் என்பதாலும், கொரோனா நோய் பரவலை தடுக்க வேண்டும் என்பதாலும், மக்களுக்கு அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து தருவது தங்களது கடமை என்பதை எண்ணிய கருங்குழி பேரூராட்சி செயல் அலுவலர் தனது ஊழியர்களுடன் இணைந்து சிறிதும் சோர்வின்றி மக்களின் மனநிறைவுடன் பணிசெய்தனர்.
மக்களுக்கு தேவையான முக்கிய மளிகை பொருட்களை வீடுதேடி வழங்கும் பணியை வணிகர்களுடன் இணைந்து டோர்டெலிவரி சேவையினை துவக்கியுள்ளனர்.
காய்கறி மட்டுமின்றி மளிகை பொருட்களான, மஞ்சள் தூள், குழம்பு தூள், மல்லி தூள், மிளகு, டீ தூள், ரவை, கோதுமை மாவு, சன்பிளவர் ஆயில், அரிசி, நொய், கடலைப்பருப்பு, துவரம்பருப்பு, உளுத்தம்பருப்பு, பச்சபருப்பு, உடைத்தகடலை, பூண்டு, காய்ந்த மிளகாய், புளி, கடுகு, சீரகம், உப்பு, சேமியா, மற்றும் தேங்காய் தேங்காய் அடங்கிய தொகுப்பு பொருட்களும் வீடு தேடி மக்களுக்கு வழங்கியதால் பேரூராட்சி மக்கள் மிகவும் மகிழ்ச்சியாக தமிழ்ப் புத்தாண்டை எவ்வித சிரமமின்றி கொண்டாடி மகிழ்ந்தனர்.

No comments:

Post a Comment