வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: தினந்தோறும் தொகுதி மக்களின் கோரிக்கைகளை பெற்று நடவடிக்கை மேற்கொள்ளும் மதுராந்தகம் எம்.எல்.ஏ | Madurantakam MLA Latest News | Vil Ambu News

எங்களது பிற செய்திகளை இங்கு தேடவும்

எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Thursday, November 12, 2020

தினந்தோறும் தொகுதி மக்களின் கோரிக்கைகளை பெற்று நடவடிக்கை மேற்கொள்ளும் மதுராந்தகம் எம்.எல்.ஏ | Madurantakam MLA Latest News | Vil Ambu News

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள பொதுமக்கள் தினந்தோறும் தங்கள் பிரச்சனைகள் குறித்து மதுராந்தகம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சு.புகழேந்தியை நேரில் சந்தித்து கோரிக்கை மனுக்களாக அளித்துவருகின்றனர்.

அதுமட்டுமல்லாமல் பொதுமக்களின் பகுதிகளுக்கே சென்று குறைகளை கேட்டறிந்து மனுக்களைப் பெற்று அந்தந்த மனுக்களை துறைசார்ந்த அதிகாரிகளை நேரில் சந்தித்து, உரிய நடவடிக்கைகளை மதுராந்தகம் எம்.எல்.ஏ மேற்கொண்டுவருகிறார்.

அதன்படி, கடந்த 09.11.2020 அன்று தொகுதி மக்களின் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக செங்கல்பட்டு மாவட்ட திட்ட இயக்குநரை நேரில் சந்தித்து தொகுதியின் தேவைகள் தொடர்பான மனுவினை அளித்தார்.

மேலும், தாய் தந்தையை இழந்த ஆதரவற்ற பட்டதாரி பெண்ணிற்கு திருமண உதவித் தொகை வழங்க சான்றிதழ் வழங்கினார். பின்னர், எலப்பாக்கம் ஊராட்சி ஈச்சங்காடு பகுதி மக்களின் நிலம் சார்ந்த பிரச்சனைகள் தொடர்பாக கடந்த 10.11.2020 அன்று கோரிக்கை மனுவை பெற்று துறைசார்ந்த அதிகாரிகள் மூலமாக உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதியளித்தார்.

No comments:

Post a Comment