வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: பாலைவனப்பகுதிகளில் மட்டுமே விளையக்கூடியது என கூறப்பட்டு வந்த பேரீட்சையை நமது மண்ணிலும் விளைவிக்க முடியும். விவசாயிகள் ஆர்வம்.. | Dates crop in our state | Vil Ambu News
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Sunday, August 01, 2021

பாலைவனப்பகுதிகளில் மட்டுமே விளையக்கூடியது என கூறப்பட்டு வந்த பேரீட்சையை நமது மண்ணிலும் விளைவிக்க முடியும். விவசாயிகள் ஆர்வம்.. | Dates crop in our state | Vil Ambu News

தர்மபுரி மாவட்டம் கிருஷ்ணாபுரம் பகுதியில் விவசாய தோட்டத்தில் பேரீட்சை சாகுபடியில் 3 ஆயிரத்திற்கும் அதிகமான ரகங்கள் இருந்தாலும் அதில் தரமான கண்டறியபட்ட பர்ரீ, அஜ்ஜூவா, கனீஜி, அலூவி, மெட்சூல், இலைட் போன்ற ரகங்களை தேர்வு செய்து ஒன்றரை ஏக்கர் நிலத்தில் தென்னை மரங்களுக்கு இடை இடையே பேரிட்சையை நடவு செய்துள்ளனர் அப்பகுதி விவசாயிகள். 

நடவு  செய்த மூன்று வருடத்திலேயே தற்போது முதல் அறுவடையாக பேரீட்சை பழங்கள் அறுவடைக்கு வரத்தொடங்கியுள்ளன. ஜனவரியில் பேரீட்சை மரங்களில் பூக்கள் பிடித்து ஜீன், ஜீலை மாதங்களில் பழம் அறுவடைக்கு வந்துவிடுவதாகவும், வருடத்திறகு ஒரு முறை பலன் தரக்கூடிய இந்த பேரீட்சையை மற்ற விவசாயாகளும் நம்பிக்கையோடு பயிர் செய்து வருமானம் ஈட்டலாம் என்கிறார்.

அரியக்குளம் கிராமத்தில் பல வருடமாக பேரீட்சை சாகுபடியில் ஈடுபட்டு வரும் அனுபவம் பெற்ற விவசாயியான நிஜாமுதின், ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல்களின் பேரிலும், அவரிடமே வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யபட்ட பேரீட்சை மரக்கன்றுகளை விலைக்கு வாங்கி நடவு செய்து வருகின்றனர்.

ஆண்டுக்காண்டு பருவ மழை குறைந்து விவசாயிகள் விவசாயத்தை விட்டு மாற்றுத்தொழிலை நாடி செல்லும் நிலையில், இருக்கின்ற தண்ணீரையே சிக்கனமாக பயன்படுத்தி பேரீட்சை சாகுபடி செய்து மற்ற விவசாயிகளும் வருமானம் ஈட்ட முடியும் விவசாயிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment