வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: கடமலைபுத்தூரில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி நன்றி தெரிவித்த உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற்ற தி.மு.க நிர்வாகிகள் | Kadamalaiputhur Councilor Area | Vil Ambu News
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Thursday, October 28, 2021

கடமலைபுத்தூரில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி நன்றி தெரிவித்த உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற்ற தி.மு.க நிர்வாகிகள் | Kadamalaiputhur Councilor Area | Vil Ambu News

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், அச்சிறுபாக்கம் ஒன்றியத்திற்குட்பட்ட கடமலைபுத்தூர் ஊராட்சியில், நடைபெற்று முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற அச்சரப்பாக்கம் ஒன்றியக்குழு பெருந்தலைவரும், தி.மு.க-வின் அச்சிறுபாக்கம் தெற்கு ஒன்றிய செயலாளருமான கே.கண்ணன், செங்கல்பட்டு மாவட்டத்தின் 13-வது வார்டு மாவட்டக்குழு உறுப்பினர் வசந்தா கோகுலக்கண்ணன், அச்சிறுப்பாக்கம் ஒன்றியத்தின் 14-வது வார்டு ஒன்றியக்குழு உறுப்பினர் பொன்மலர் சிவக்குமார் ஆகியோர் வாக்காளப் பொதுமக்களுக்கு தங்களின் நன்றிகளை தெரிவித்தனர்.

 

அப்போது ஊராட்சியில் உள்ள கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு மேளதாளங்கள் முழங்க, பட்டாசுகள் வெடித்து வெற்றி பெற்றவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

வெற்றி பெற்ற உள்ளாட்சி பிரதிநிதிகள் மூவரும் வாக்காளர்கள், பொதுமக்கள், கழக நிர்வாகிகள் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர். அப்போது ஒன்றிய பெருந்தலைவர், மாவட்ட குழு உறுப்பினர், ஒன்றிய குழு உறுப்பினர் ஆகியோரிடம் பொதுமக்கள் பல்வேறு கோரிக்கை மனுக்களை வழங்கினர்.

அதனை பெற்று கொண்ட உள்ளாட்சி பிரதிநிதிகள், மனுக்களை பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை விரைந்து எடுக்கபடும் என பொதுமக்களுக்கு உறுதி அளித்தனர்.

பின்னர், ஒன்றியக்குழு உறுப்பினர் பொன்மலர் சிவக்குமார், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி நன்றியை தெரிவித்துக் கொண்டார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட, ஒன்றிய, கிளை கழக நிர்வாகிகள் மற்றும் கழக தொண்டர்கள் பலர் ஆகியோர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

No comments:

Post a Comment