வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: மரம் முறிந்து விழுந்ததில் இறந்த பெண் காவலருக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கி உத்தரவிட்டார் முதல்வர் ஸ்டாலின் | Lady Police died due to Tree breaking in Chennai | Vil Ambu News | வில் அம்பு செய்திகள்
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Wednesday, November 03, 2021

மரம் முறிந்து விழுந்ததில் இறந்த பெண் காவலருக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கி உத்தரவிட்டார் முதல்வர் ஸ்டாலின் | Lady Police died due to Tree breaking in Chennai | Vil Ambu News | வில் அம்பு செய்திகள்

சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் தனிப்பிரிவு அருகே மரம் சரிந்து விழுந்ததில், முத்தியால்பேட்டை காவல் நிலைய போக்குவரத்து போலீஸ் கவிதா என்பவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

பெண் போலீஸ் கவிதா குடும்பத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவிட்டு உள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் தனிப்பிரிவு அருகேயுள்ள மரம் வேரோடு சாய்ந்து விழுந்ததில் பெண் போலீஸ் கவிதா உயிரிழந்தார். மற்றொரு போலீஸ்காரர் முருகன் லேசான காயங்களுடன் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அரக்கோணத்தை சேர்ந்த கவிதா 2005-ம் ஆண்டு பணியில் சேர்ந்துள்ளார். தண்டையார்பேட்டை போலீஸ் குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். மரம் விழுந்ததில் பலியான கவிதாவுக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளார்கள்.

23 வயதான அருண்குமார் சேலம் மகேந்திரா கல்லூரியில் படித்து வருகிறார். 18 வயதான அவரது மகள் சினேகா பிரியா பிஎஸ்சி நர்சிங் முதலாமாண்டு படித்து வருகிறார். மேலும் இளைய மகன் விஷால் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

உயிரிழந்த பெண் போலீஸ் கவிதாவின் குடும்பத்திற்கு ரூ. 10 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார். பணியின்போது உயிரிழந்த காவலரின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment