வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: உத்திரமேரூரில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு - குளோரின் கலந்த பாதுகாப்பான குடிநீர் வழங்க வேண்டும் | Uthiramerur Flood Inspection by Collector | Vil Ambu News | வில் அம்பு செய்திகள்
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Monday, November 29, 2021

உத்திரமேரூரில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு - குளோரின் கலந்த பாதுகாப்பான குடிநீர் வழங்க வேண்டும் | Uthiramerur Flood Inspection by Collector | Vil Ambu News | வில் அம்பு செய்திகள்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த ஒரு மாத காலமாகவே வடகிழக்கு பருவமழை மற்றும் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தொடர் கனமழை பெய்து வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் 95 சதவீத பொதுப்பணித்துறை ஏரிகள் முழுமையடைந்து உபரி நீர் வெளியேறி வருகிறது.

இந்நிலையில் தற்போது உருவாகியுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த இரண்டு நாட்களாக காஞ்சிபுரத்தில் தொடர் மழை பெய்து குடியிருப்பு பகுதிகள் , சாலை துண்டிப்பால் பொதுப் போக்குவரத்து பாதிப்பு உள்ளிட்ட பிரச்சினைகளை மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இன்று காஞ்சிபுரம் மாவட்ட வெள்ள தடுப்பு நடவடிக்கை சிறப்பு கண்காணிப்பு அலுவலரும் , தமிழ்நாடு டாஸ்மாக் மேலாண்மை இயக்குனருமான சுப்பிரமணியம் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மா. ஆர்த்தி உடன் இணைந்து காஞ்சிபுரம் மாவட்டத்தில் உத்திரமேரூர் வட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு மேற்கொண்டார். அங்கிருந்த பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

பெருநகர் அடுத்த அனுமந்தண்டலம் பகுதியுள்ள தடுப்பணையில் ஆய்வு மேற்கொண்டு செய்யாற்றில் செல்லும் நீரின் அளவு மற்றும் சுற்றியுள்ள கிராமங்களுக்கு செல்லும் பாசன கால்வாய் நீர் குறித்து கேட்டறிந்தார். இதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம் உத்திரமேரூர் சாலையில் அமைந்துள்ள செய்யாறு தரை பாலத்தில் சேதமடைந்த பகுதிகளை பார்வையிட்டு தடை செய்யப்பட்டுள்ள போக்குவரத்தை விரைவாக செயல்படுத்தும் வகையில் பணிகளை விரைவாக முடிக்க நெடுஞ்சாலை துறை மற்றும் பொதுப்பணித்துறை அலுவலக அறிவுறுத்தினார்.

இதையடுத்து திருப்புலிவனம் நீர்நிலைப் பகுதிகளில் இருந்து மீட்கப்பட்டு அரசு மேல் நிலைப்பள்ளியில் பொதுமக்களை தங்க வைத்துள்ள நிவாரணம் முகாமில் உள்ளவர்களிடம் குறைகளைக் கேட்டறிந்து அங்குள்ள பள்ளி மாணவர்களிடம் உரையாடினார். மேலும் உத்தரமேரூர் அரசு மருத்துவமனை கட்டிடங்கள் ஏற்பட்டுள்ள நீர்க்கசிவினை ஆய்வு மேற்கொண்டு உடனடியாக பொதுமக்களின் மருத்துவ சேவை தடையின்றி செயல்பட மருத்துவர்களுக்கும், வட்டாட்சியர் , அரசு அலுவலர்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்க அறிவுரை வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து உத்திரமேரூர் ஏரியில் இருந்து மதகுகள் வழியாக நீர் வெளியேறும் பகுதிகளான வேடபாளையம், காட்டுப்பாக்கம், மேனநல்லூர் ஆகிய கிராம பகுதிகளை ஆய்வு மேற்கொண்டார். ஆற்றில் போடப்பட்டிருந்த கிராம போர்வெல் அனைத்தும் துண்டிக்கப்பட்டுள்ளதால் டேங்லாரி மூலம் கிராமங்களில் குடிநீர் வழங்கப்படுகிறது. இதில் குளோரின் கலந்து பாதுகாப்பான குடிநீர் வழங்க கிராம ஊராட்சி தலைவர்களை கேட்டு கொண்டார். இந்த ஆய்வின்போது வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் பொதுப்பணித்துறை சார்ந்த அலுவலர்கள் அலுவலர்கள் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment