வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: 😨தடுப்பூசி சான்றிதழில் மோடி படம் வேண்டாம் - வழக்கு தொடுத்தவருக்கு ரூ.1 லட்சம் அபராதம்!
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Tuesday, December 21, 2021

😨தடுப்பூசி சான்றிதழில் மோடி படம் வேண்டாம் - வழக்கு தொடுத்தவருக்கு ரூ.1 லட்சம் அபராதம்!

கொரோனா தடுப்பூசி சான்றிதழில் பிரதமர் மோடி புகைப்படம் இடம்பெறுவதை எதிர்த்து கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு போடப்பட்டது. முன்னதாக டிசம்பர் 13ஆம் தேதி இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பிவி குன்னிகிருஷ்ணன்,"நாட்டு மக்களால் தேர்வு செய்யப்பட்ட பிரதமரின் புகைப்படம் சான்றிதழில் இடம் பெற்றால் என்ன தவறு"என கேள்வி எழுப்பினார்.


அப்போது மனுதாரர் பீட்டர் மயலிபரம்பில் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த நடைமுறை மற்ற நாடுகளில் பின்பற்றப்படவில்லை என்றார். அதற்கு நீதிபதி,"மனுதாரருக்கு பிரதமர் ஏன் அவமானமாக தெரிகிறார். மற்ற நாடுகளில் பிரதமர் படம் இடம் பெறவில்லை என்றால், அவர்களுக்கு பிரதமரை குறித்து பெருமிதம் இல்லை போலும்"என்றார்.

அதற்கு மனுதாரர் தரப்பில், "தடுப்பூசி சான்றிதழ் தனிநபர் தகவல்கள் குறித்த ஆவணம். அதில் பிரதமரின் புகைப்படத்தை போடுவது தனிநபரின் உரிமையில் தலையீடுவது போன்றது" என விளக்கம் அளிக்கப்பட்டது. அதற்கு நீதிபதி,"இந்தியாவில் உள்ள 100 கோடி பேரில் யாருக்கும் இதில் எந்த சிக்கலும் ஏற்படாதபோது, உங்களுக்கு மட்டும் எப்படி அது பிரச்சனையாக இருக்கிறது"எனக் கேட்டார்.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரருக்கு ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும் இந்த வழக்கை தள்ளுபடி செய்தார். 6 வாரங்களுக்குள் அபராதத்தை மனுதாரர் கேரள சட்ட சேவைகள் ஆணையத்திடம் செலுத்த வேண்டும் என அவருக்கு கெடு விதிக்கப்பட்டுள்ளது.

📮டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews

அரசியல் செய்திகள் 


முந்தைய தமிழக செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்

சமீபத்திய செய்திகள் 
சமூக சீரழிவு செய்திகள்

முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும் 

தலைப்பு வாரியாக செய்திகள்

No comments:

Post a Comment