வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: வீட்டில் ஏசி, மோட்டருக்கு தனி ஈபி கனெக்‌ஷன் வாங்கி இருக்கீங்களா..? பியூஸ் பிடுங்க வருகிறார்கள் அதிகாரிகள்.!
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Tuesday, December 21, 2021

வீட்டில் ஏசி, மோட்டருக்கு தனி ஈபி கனெக்‌ஷன் வாங்கி இருக்கீங்களா..? பியூஸ் பிடுங்க வருகிறார்கள் அதிகாரிகள்.!

தமிழகத்தில் ஒரு வளாகத்தில் ஒரே பெயரின் கீழ் உள்ள தாழ்வழுத்த (எல்டிசிடி) மின் இணைப்புகள் குறித்து தொடர் ஆய்வுகளை நடத்துமாறு, பகிர்மானப் பிரிவு தலைமைப் பொறியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


தமிழ்நாடு மின்சார வாரியம் தமிழகத்தில் உள்ள அனைத்து கிராமங்கள் மற்றும் நகரங்களில் உள்ள அனைத்து குடியிருப்புகளுக்கும் மின் விநியோகத்தை வழங்கி வருகிறது. தமிழகம் முழுவதும் தரமான மற்றும் தடையில்லா மின்சாரத்தை நுகர்வோர்க்கு வழங்கும் பணியை மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் ஒரே வளாகத்தில் ஒரே பெயரில் பல தாழ்வழுத்த மின் இணைப்புகள் இணைத்துள்ளதாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. இதுகுறித்து தகுந்த நடவடிக்கை எடுக்க அனைத்து தலைமைப் பொறியாளர்களுக்கு, வணிகப் பிரிவு தலைமைப் பொறியாளர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

வீட்டு உபயோகத்திற்காக வழங்கப்படும் மின்சாரத்தை கடைகள், விருந்தினர் இல்லம், விடுதிகள் மற்றும் கட்டுமானப் பணிகளுக்கு பயன்படுத்தக்கூடாது என தமிழ்நாடு மின்சார வாரியம் நுகர்வோர்-க்கு அறிவுறுத்தியுள்ளது. இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது மின் திருட்டாகும். மின் கட்டண விகிதத்தை தவறாக பயன்படுத்துதல் அல்லது முறைகேடான மின்சார உபயோகம் ஆகியவை மின் திருட்டாகும். இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது மின்சாரச் சட்டம் 2003-ன் பிரிவு 151B ன் படி கைது நடவடிக்கை மேற்கொள்ளலாம்.

தாழ்வழுத்த மின் இணைப்பின் வீட்டு வளாகத்தில் பொது உபயோகத்திற்கான மின்விளக்கு, தண்ணீர் உபயோகம் மற்றும் மின்பளுதூக்கி ( lift) ஆகியவை மொத்த வளாகத்தின் பரப்பளவில் 25 சதவீதத்திற்கு மேல் இருந்தால் V-ல் மின் இணைப்பு பெற வேண்டும்.மின்சார பயன்பாட்டின் நோக்கம் மாற்ற வேண்டி இருப்பின், பொருத்தமான மின்கட்டண விகிதத்திற்கு மாற்ற அந்த பகுதியில் உள்ள உதவி மின் பொறியாளரை தொடர்பு கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுபோன்ற செயல்கள் மின்சார வாரியத்திற்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தும். தமிழகத்தில் ஒரே வளாகத்தில் ஒரே பெயரில் பல தாழ்வழுத்த மின் இணைப்புகள் இணைத்துள்ளதாக புகார்கள் குவியத் தொடங்கியது.

இந்நிலையில் மின் இணைப்புகள் குறித்து தொடர்ந்து ஆய்வு நடத்துமாறு தலைமைப்பொறியாளர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. "தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம், பலமுறை அறிவுறுத்தியும் ஒரு வளாகத்தில் ஒரு பெயரின் கீழ் பல இணைப்புகள் சட்டவிரோதமாக வழங்குவது தொடர்ந்து கொண்டே இருப்பதாகவும், ஒரு வளாகத்தில் ஒரே பெயரின் கீழ் உள்ள தாழ்வழுத்த (எல்டிசிடி) மின் இணைப்புகள் குறித்து தொடர் ஆய்வுகளை நடத்துமாறு, பகிர்மானப் பிரிவு தலைமைப் பொறியாளர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

மேலும், பெற்ற இணைப்பை ஒருங்கிணைக்காமலும், உயரழுத்த இணைப்பாக மாற்றாமலும் உள்ள நுகர்வோருக்கு 3 மாத அவகாசம் வழங்கும் வகையில் நோட்டீஸ் அனுப்ப வேண்டும் எனவும்,இது தொடர்பான உயரதிகாரிகளின் ஆய்வின் போது, பல இணைப்புகள் ஒரே பெயரின் கீழ் ஒரே வளாகத்தில் இருப்பது தெரியவந்தால் பொறுப்பு அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு குடியிருப்பிலும் எத்தனை இணைப்புகள் கொடுக்கப்பட்டது என கணக்கெடுப்பதோடு, குளிர்சாதன கருவி, குடிநீர் விநியோகம், பொது இடங்களில் பயன்படுத்தும் மின் விளக்குகள், தடையற்ற மின்விநியோகம் செய்யும் கருவி உள்ளிட்டவற்றுக்கு ஒரே வளாகத்துக்குள் தனி இணைப்பு கண்டிப்பாக வழங்கக் கூடாது என்றும், மீண்டும் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களைப் பின்பற்றி ஆய்வு மேற்கொண்டு வாரியத்துக்கு ஏற்படும் வருவாய் இழப்பைத் தடுக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி,அனைத்து மின் பகிர்மான வட்டத்துக்குட்பட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்ட போது, 50-க்கும் மேற்பட்ட இடங்களில் மின்சார ஒழுங்குமுறை ஆணைய விதிகளுக்கு முரணாக இணைப்பு வழங்கப்பட்டது தெரியவந்துள்ளதாகவும், அங்குள்ள குடியிருப்புகளை ஆய்வு செய்து, அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தணிக்கைக் குழு உத்தரவிட்டுள்ளது எனவும் குறிப்பிட்டு, அனைத்துத் தலைமைப் பொறியாளர்களுக்கு, வணிகப் பிரிவு தலைமைப் பொறியாளர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

📮டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews

அரசியல் செய்திகள் 


முந்தைய தமிழக செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்

சமீபத்திய செய்திகள் 
சமூக சீரழிவு செய்திகள்

முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும் 

தலைப்பு வாரியாக செய்திகள்

No comments:

Post a Comment