வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: செங்கல்பட்டு மாவட்டத்தில் பழுதடைந்த 826 கட்டிடங்களை இடிக்க நடவடிக்கை.!
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Tuesday, December 21, 2021

செங்கல்பட்டு மாவட்டத்தில் பழுதடைந்த 826 கட்டிடங்களை இடிக்க நடவடிக்கை.!

செங்கல்பட்டு மாவட்டம் பள்ளிக்கல்வித் துறை சார்பாக ஆதிதிராவிட நலத் துறை, பொதுப்பணித் துறை, ஊரக வளர்ச்சித்துறை பராமரிப்பு கீழ் இயங்கும் பள்ளிகளில் பழுதடைந்த கட்டடங்களை கணக்கீடு செய்யும் பணி மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது. என மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் தெரிவித்துள்ளார்.


செங்கல்பட்டு மாவட்டத்தில் ஆதிதிராவிட நலத்துறை பராமரிப்பில் உள்ள பள்ளிகளில் பழுதடைந்த கட்டடங்கள் 41 எண்ணிக்கையும், பொதுப்பணித்துறை பராமரிப்பில் உள்ள அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பழுதடைந்து உள்ள கட்டிடங்கள் 119 எண்ணிக்கையும், ஊரக வளர்ச்சித்துறை பராமரிப்பில் இயங்கும் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பழுதடைந்த கட்டிடங்கள் 666 எண்ணிக்கையும் உள்ளது. மொத்தம் 826 பழுதடைந்த கட்டிடங்கள் உள்ளது என கணக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் ஆய்வு செய்யப்பட்ட பழுதடைந்த கட்டிடங்களில் 196 கட்டிடங்களை இடிக்க நிர்வாகம் சார்பில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மற்றும் 173 கட்டிடங்களை இடித்து அப்புறப்படுத்தப்பட்டு உள்ளது.

மேலும் நிலுவையில் உள்ள பழுதடைந்த கட்டடங்களை ஆய்வு செய்யப்பட்டு இடிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியர் ஆ.ர.ராகுல்நாத் தெரிவித்துள்ளார்.

📮டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews

அரசியல் செய்திகள் 


முந்தைய தமிழக செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்

சமீபத்திய செய்திகள் 
சமூக சீரழிவு செய்திகள்

முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும் 

தலைப்பு வாரியாக செய்திகள்

No comments:

Post a Comment