வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: Ragulnath IAS
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...
Showing posts with label Ragulnath IAS. Show all posts
Showing posts with label Ragulnath IAS. Show all posts

Monday, January 03, 2022

சாலையில் சுற்றித் திரியும் மாடுகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் - செங்கை ஆட்சியர்..!

சாலையில் சுற்றித் திரியும் மாடுகளினால் அடிக்கடி விபத்துக்கள் மற்றும் உயிரிழப்புகள் ஏற்படுவது தொடர்கதையாகி வருகிறது. 


இதனையடுத்து 
சாலையில் சுற்றித் திரியும் மாடுகள் உள்ளிட்ட கால்நடைகளின் உரிமையாளர்களுக்கு ரூ.2000/- அபராதம் விதிக்க செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஆ.ர.ராகுல்நாத் இ.ஆ.ப. உத்தரவிட்டுள்ளார்.
ஊராட்சி வாரியாக கால்நடை பட்டிகளை நிறுவி கால்நடைகளை அதில் அடைத்து அபராதம் பெற்றபின் உரிமையாளரிடம் ஒப்படைக்க இந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
ஒரு நாளுக்கு மேல் ஆகியும் உரிமையாளர் எவரும் வரவில்லை எனில் காட்டாங்கொளத்தூர் அருகேயுள்ள கொண்டமங்கலம் பகுதியில் உள்ள மாவட்ட அளவிலான பட்டிக்கு மாடுகள் மாற்றம் செய்யப்படும் என எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவிற்கு பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

📮டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews

செங்கல்பட்டு மாவட்ட செய்திகள் 


முந்தைய செங்கல்பட்டு மாவட்ட செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்

சமீபத்திய செய்திகள் 
சமூக சீரழிவு செய்திகள்

முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும் 

ஆன்மீக செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

வேலைவாய்ப்பு செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

சினிமா செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

தலைப்பு வாரியாக செய்திகள்

Thursday, December 30, 2021

விவசாயிகள் கொடுக்கும் மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் | பதில் அளிக்க தவறினால் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை - செங்கை ஆட்சியர்.!

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம், ஆட்சியர் ஆ.ராகுல்நாத் இ.ஆ.ப. தலைமையில் நேற்று நடந்தது.


அதில், இடைக்கழிநாடு பேரூராட்சியில் 15 ஆண்டாக மூடிக்கிடக்கும் கூட்டுறவு பதனீர் தொழிற்சாலையை திறக்க வேண்டும். விவசாயம் பாதிக்கும் வகையில் செயல்படும் கல் குவாரிகளை மூட வேண்டும். ஏரிகளில் உள்ள அக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். நிரந்தர நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்க வேண்டும். பாலாற்றில் கூடுதலாக தடுப்பணைகள் கட்ட வேண்டும். கிராம நத்தத்தில் குடியிருப்போருக்கு உடனடியாக பட்டா வழங்க வேண்டும்.

மேலும், காட்டுப்பன்றி தொல்லையில் இருந்து விவசாயத்தை பாதுகாக்க வேண்டும். கூட்டுறவு சங்கங்களில் விவசாய கடன் வழங்க வேண்டும். விவசாயிகள் கொடுக்கும் மனுக்களுக்கு அரசு அலுவலர்கள் உரிய பதில் அளிக்க வேண்டும். விவசாயத்துக்கு ஏரிகளில் இருந்து வண்டல் மண் எடுக்க அனுமதிக்க வேண்டும். குத்தகை விவசாயிகளுக்கும் கூட்டுறவு விவசாய கடன் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை விவசாயிகள் வலியுறுத்தினர். தொடர்ந்து, விசாயிகளிடம் இருந்து 165 மனுக்கள் பெறப்பட்டன. 

தொடர்ந்து ஆட்சியர் ராகுல்நாத் பேசுகையில், விவசாயிகள் கொடுக்கும் மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் உரிய பதில் அளிக்க வேண்டும். அவ்வாறு பதில் அளிக்க தவறினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

📮டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews

செங்கல்பட்டு மாவட்ட செய்திகள் 


முந்தைய செங்கல்பட்டு மாவட்ட செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்

சமீபத்திய செய்திகள் 
சமூக சீரழிவு செய்திகள்

முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும் 

ஆன்மீக செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

வேலைவாய்ப்பு செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

சினிமா செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

தலைப்பு வாரியாக செய்திகள்

Tuesday, December 21, 2021

செங்கல்பட்டு மாவட்டத்தில் பழுதடைந்த 826 கட்டிடங்களை இடிக்க நடவடிக்கை.!

செங்கல்பட்டு மாவட்டம் பள்ளிக்கல்வித் துறை சார்பாக ஆதிதிராவிட நலத் துறை, பொதுப்பணித் துறை, ஊரக வளர்ச்சித்துறை பராமரிப்பு கீழ் இயங்கும் பள்ளிகளில் பழுதடைந்த கட்டடங்களை கணக்கீடு செய்யும் பணி மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது. என மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் தெரிவித்துள்ளார்.


செங்கல்பட்டு மாவட்டத்தில் ஆதிதிராவிட நலத்துறை பராமரிப்பில் உள்ள பள்ளிகளில் பழுதடைந்த கட்டடங்கள் 41 எண்ணிக்கையும், பொதுப்பணித்துறை பராமரிப்பில் உள்ள அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பழுதடைந்து உள்ள கட்டிடங்கள் 119 எண்ணிக்கையும், ஊரக வளர்ச்சித்துறை பராமரிப்பில் இயங்கும் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பழுதடைந்த கட்டிடங்கள் 666 எண்ணிக்கையும் உள்ளது. மொத்தம் 826 பழுதடைந்த கட்டிடங்கள் உள்ளது என கணக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் ஆய்வு செய்யப்பட்ட பழுதடைந்த கட்டிடங்களில் 196 கட்டிடங்களை இடிக்க நிர்வாகம் சார்பில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மற்றும் 173 கட்டிடங்களை இடித்து அப்புறப்படுத்தப்பட்டு உள்ளது.

மேலும் நிலுவையில் உள்ள பழுதடைந்த கட்டடங்களை ஆய்வு செய்யப்பட்டு இடிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியர் ஆ.ர.ராகுல்நாத் தெரிவித்துள்ளார்.

📮டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews

அரசியல் செய்திகள் 


முந்தைய தமிழக செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்

சமீபத்திய செய்திகள் 
சமூக சீரழிவு செய்திகள்

முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும் 

தலைப்பு வாரியாக செய்திகள்