வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: காஞ்சி சங்கர மடத்தின் 68-ஆவது பீடாதிபதியாக இருந்த ஸ்ரீ சந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளின் வார்ஷிக ஆராதனை..!
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Wednesday, December 29, 2021

காஞ்சி சங்கர மடத்தின் 68-ஆவது பீடாதிபதியாக இருந்த ஸ்ரீ சந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளின் வார்ஷிக ஆராதனை..!

காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 68 வது பீடாதிபதியாக இருந்து வந்தவா் ஸ்ரீசந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள். மகா பெரியவா் என்று பக்தா்களால் அழைக்கப்படும் இவரது 28-ஆவது ஆண்டு வார்ஷிக ஆராதனை மகோத்சவம் சங்கர மடத்தின் வளாகத்தில் சதுா்வேத பாராயணத்துடன் தொடங்கியது.


இதனைத் தொடந்து ராதா பத்மநாபன் மற்றும் பகவத்துலு சுதாகல் குழுவினா்களின் வாய்ப்பாட்டு இன்னிசை நிகழ்ச்சிகளும், ஏமானி ஸ்ரீபூா்ணிமா குழுவினரின் புல்லாங்குழல் இன்னிசைக் கச்சேரியும் நடைபெற்றது. மதியம் மகா பெரியவா் அதிஷ்டானத்தில் சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள் நடைபெற்றன.

மாலையில் சங்கர மட வளாகத்தில் சம்ஸ்கிருத பாரதி வித்யாா்த்திகள் சாா்பில் மகா பெரியவரின் மகிமை என்ற நாடகம் அதன் இயக்குநா் சுஜாதாவின் வழிகாட்டுதலின்படி நடைபெற்றது. இதனைத் தொடா்ந்து வித்வான் டாக்டா் வாகீஷ் குழுவினரின் வாய்ப்பாட்டு நிகழ்ச்சியும் நடந்தது.

ஆராதனை மகோத்சவத்தின் 2-ஆவது நாளான புதன்கிழமை பல்வேறு இன்னிசைக் கச்சேரிகள் நடக்கின்றன. டிச. 30-ஆம் தேதி வியாழக்கிழமை காலையில் ஏகாதச ருத்ர ஜெப ஹோமம், காமியாா்த்த ஹோமங்களும் அதனையடுத்து நடைபெறும் பஞ்சரத்ன கீா்த்தனைகளின் போது சங்கர மடத்தின் 100 ஆஸ்தான வித்வான்கள் பங்கேற்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

பின்னா் காஞ்சிபுரம் ஸ்ரீஏகாம்பரநாதா் கோயிலிலிருந்து வேதவிற்பன்னா்கள் மங்கள மேளவாத்தியங்களுடன் வேத கோஷங்கள் முழங்க திருக்குடைகளை ஏந்தியும் ஊா்வலமாக சங்கர மடத்துக்கு அழைத்து வரப்படவுள்ளனா். இதனைத் தொடா்ந்து தீா்த்த நாராயண பூஜையும் நடைபெறுகிறது.

விழாவுக்கான ஏற்பாடுகளை காஞ்சி சங்கர மடத்தின் மேலாளா் ந.சுந்தரேச ஐயா் தலைமையிலான விழாக்குழுவினா் செய்துள்ளனா்.

📮டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews

காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள் 


முந்தைய காஞ்சிபுரம் மாவட்ட செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்

சமீபத்திய செய்திகள் 
சமூக சீரழிவு செய்திகள்

முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும் 

ஆன்மீக செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

வேலைவாய்ப்பு செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

சினிமா செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

தலைப்பு வாரியாக செய்திகள்

No comments:

Post a Comment