வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: நீங்கள் மனநிம்மதி இல்லாமல் இருக்கும் பொழுது இந்த தவறை மட்டும் தவறியும் செய்து விடாதீர்கள்!
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Friday, December 24, 2021

நீங்கள் மனநிம்மதி இல்லாமல் இருக்கும் பொழுது இந்த தவறை மட்டும் தவறியும் செய்து விடாதீர்கள்!

நாம் மன நிம்மதி இல்லாமல் இருக்கும் பொழுது முதலில் நம்மை சுற்றி இருக்கும் அனைவரும் ஏதோ நமக்கு எதிரிகள் போல தோற்றமளிப்பார்கள். நெருங்கிய உறவுகள் கூட பகைவர்களாக தெரிவார்கள். 


நமக்கு யார் நல்லது செய்கிறார்கள்? யார் கெட்டது செய்கிறார்கள்? என்கிற அறியாமை ஏற்படும். இதனால் நல்ல மனிதர்களை கூட சில சமயங்களில் நாம் இழந்து விடுவது உண்டு. மன அமைதி இல்லாமல் இருக்கும் பொழுது அண்டை வீட்டார் கூட தொந்தரவு செய்யும் தொல்லையாக நமக்கு தோன்றிவிடும். பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு நம் மனநிலை எப்படி தெரியும்? சாதாரண சண்டையை கூட ஊதிப் பெரிதாக்கி விடுவோம். யார் மீதோ உள்ள கோபத்தை, யார் மீதோ காட்டுவதில் நியாயமில்லை. இதனால் ஏற்படப் போகும் இழப்புகள் தேவையற்றவை.

மன நிம்மதி இல்லாமல் போவதற்கு மிக முக்கிய காரணம் நாம் எதைப் பற்றியாவது தொடர்ந்து தேவையில்லாமல் சிந்தித்துக் கொண்டே இருப்பது தான். ஒரு விஷயத்திற்கு முடிவு இப்போது கிடைக்காது என்று தெரிந்த பிறகும் அதைப் பற்றிய சிந்தனையில் ஈடுபட்டு இருப்பது அல்லது தொடர்ந்து சிந்திப்பது முட்டாள்தனமானது.

கிடைக்க வேண்டிய நேரத்தில், கிடைக்க வேண்டிய முடிவுகள், கிடைத்தே தீரும்! அப்போது அதைப் பற்றி சிந்திக்கலாம். அதை விடுத்து முடிவு கிடைக்கும் வரை தொடர்ந்து அதே நினைப்புடன், அதே சிந்தனையுடன் இருந்தால் நம்முடைய மன நிம்மதி சீர் கெடுகிறது. இதனால் நல்ல உறவுகளையும் நாம் இழக்கிறோம். நெருங்கிய நண்பர்களிடம் கூட சற்று தள்ளி நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்போம்.

மனதில் குழப்பம் இருந்தால் யாராவது ஒருவரிடம் மட்டும் அதனை பகிர்ந்து தீர்த்துக் கொள்ளலாம். அந்த ஒருவர் உங்களுக்கு உண்மையிலேயே நல்ல தீர்வை கொடுப்பார் என்கிற நம்பிக்கை உங்களுக்கு இருக்க வேண்டும். அப்போது நீங்கள் அதனை அவர்களிடம் தாராளமாக கூறி உங்கள் பாரத்தை இறக்கி வைக்கலாம். ஒரு சிலர் எல்லாம் சாதாரணமாக கேட்டால் எல்லா விஷயங்களையும் அழுது கொட்டித் தீர்த்து விடுவார்கள். இவர்கள் மிகவும் பலவீனமானவர்கள்.

இவர்களின் மன நிலையில் நிறையவே தடுமாற்றம் இருக்கும். இவர்கள் எப்போதும் ஒரு விஷயத்தை வெளியில் சொல்வதற்கு முன்னர் ஆயிரம் முறை யோசிக்க வேண்டும். சொல்லும் நபர் சரியான நபரா? என்கிற அலசல் இல்லாமல் நீங்கள் ஒரு விஷயத்தை வெளியில் கூறி விட்டால், அது எல்லா இடங்களிலும் பரவி ஒன்றுக்கு இரண்டாக திரியும் ஆபத்து உண்டு. இதனால் பிரச்சனைகள் மேலும் மேலும் கூடுமே தவிர குறைய போவது இல்லை. மனநிலையில் தடுமாற்றம் இருந்தால், மனம் மட்டும் அல்லாமல் உடலும் பல்வேறு பிரச்சனைகளுக்கு உள்ளாகிறது.

மன உளைச்சல் என்பது இன்று மிகப் பெரிய பிரச்சனையாக விஸ்வரூபம் எடுத்துக் கொண்டு இருக்கிறது எனவே கூடுமானவரை தேவையற்ற விஷயங்களை மனதில் போட்டு குழப்பிக் கொள்ளாமல் நடப்பது நடக்கட்டும் என்று விட்டுவிட வேண்டும். அதே போல மன நிலையில் நல்ல முன்னேற்றம் காண தியானம், யோகா போன்ற பயிற்சிகளை குறைந்தது ஒரு நாளைக்கு பத்து நிமிடமாவது மேற்கொள்ள வேண்டும். இப்படி நீங்கள் இருந்தால் தேவையற்ற இழப்புகளும், தேவையற்ற சூழ்நிலைகளையும் தடுத்து, பல பிரச்சினைகளில் இருந்து எளிதாக தீர்வு காண முடியும்.

📮டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews

ஆன்மீக செய்திகள் 


முந்தைய ஆன்மீக செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்

சமீபத்திய செய்திகள் 
சமூக சீரழிவு செய்திகள்

முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும் 

தலைப்பு வாரியாக செய்திகள்

No comments:

Post a Comment