வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: இப்படி ஒரு பதிலா..? எலப்பாக்கத்திற்கு ஏன் பஸ் வரல என பொதுமக்கள் கேட்டதற்கு மேலாளர் சொன்னாருங்க பாருங்க ஒரு பதிலு.! | Elapakkam Town Bus and Route Bus not Come Properly | வில் அம்பு செய்திகள் | Vil Ambu News
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Saturday, December 11, 2021

இப்படி ஒரு பதிலா..? எலப்பாக்கத்திற்கு ஏன் பஸ் வரல என பொதுமக்கள் கேட்டதற்கு மேலாளர் சொன்னாருங்க பாருங்க ஒரு பதிலு.! | Elapakkam Town Bus and Route Bus not Come Properly | வில் அம்பு செய்திகள் | Vil Ambu News

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், எலப்பாக்கம் கிராமத்திற்கு அச்சிறுபாக்கம் வழியாக எலப்பாக்கத்திற்கு T-13 மற்றும் 77C பேருந்துகள் வந்துகொண்டிருந்தன.



இதில் T-13 பேருந்து மதுராந்தகம் பணிமனையிலிருந்தும், 77-C செங்கல்பட்டு பணிமனையிலிருந்தும் இயக்கப்பட்டு வருகிறது.

பள்ளி மாணவர்கள் மற்றும் வேலைக்கு செல்பவர்கள் என அனைவரும் காலை மற்றும் மாலை வேலைகளில் T-13 டவுன் பஸ்ஸினையே நம்பி உள்ளனர். ஆனால் 2 நாட்களாகவே இப்பேருந்து முறையாக வரவில்லை. இதனால் மாணவர்கள் மற்றும் பணிக்கு செல்பவர்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர். மேலும் 77C பேருந்து 2 வாரத்திற்கு மேலாக இயக்கப்படவே இல்லை என கூறப்படுகிறது. இதனால் எலப்பாக்கம், மதூர், கோட்டகயப்பாக்கம், விளாங்காடு, திம்மாபுரம், திருமுக்காடு மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த மக்கள் பெரும் சிரமம் அடைகின்றனர்.

இதுகுறித்து பொதுமக்கள் சார்பாக ஒருவர் மதுராந்தகம் பணிமனை மேலாளருக்கு போன் செய்தபோது அவர் கூறிய பதில் நகைப்பை ஏற்படுத்தியது.

பேருந்து ஓட்டுநர் பெண் பார்ப்பதற்காக சென்றிருந்தார். அதனால் பேருந்து இயக்கப்படவில்லை என கூறிய பதிலானது போன் செய்த நபரை திக்குமுக்காட செய்துவிட்டது. ஓட்டுநர் அனுமதியிலோ அல்லது விடுமுறையிலோ செல்லும் நேரத்தில் வேறு ஓட்டுநர்களை வைத்து பேருந்தை இயக்கவேண்டும். இந்த பேருந்தை நம்பி குறிப்பிட்ட வழித்தடத்தில் காத்திருக்கும் பொதுமக்களின் நிலையை உணராமல் இவர் அளித்த பதில் முறையானது அல்ல என சமூக ஆர்வலர்கள் சாடியுள்ளனர்.

இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Related News:

🔴மீன் விற்கும் மூதாட்டியை பஸ்ஸில் இருந்து இறக்கி விட்ட சம்பவம் | இனி நான் நடந்து தான் போகணுமா.? 

டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews


சமீபத்திய செய்திகள் 

No comments:

Post a Comment