வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: இன்று உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி!! எங்கெல்லாம் மழை பெய்யும்?
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Friday, December 17, 2021

இன்று உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி!! எங்கெல்லாம் மழை பெய்யும்?

தென் மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகை பகுதியில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 


இதன் காரணமாக தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் சூறாவளி காற்று வீசும் என்பதால் மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால், ராமநாதபுரம், புதுக்கோட்டை, டெல்டா மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.19ம் தேதி வரை தென்மாவட்டங்களின் கடலோர பகுதிகளில் லேசான மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவ காற்று காரணமாக தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிதமான மழை பெய்ய கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்த மையத்தின் இயக்குநர் புவியரசன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ராமநாதபுரம், புதுக்கோட்டை மற்றும் புதுச்சேரியின் ஓரிரு இடங்களில் இன்று மிதமான மழை பெய்ய கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என கூறியுள்ள வானிலை மையம், அங்கு அதிகபட்சமாக 30 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் குறைந்தபட்சமாக 24 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பதிவாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

தென்மேற்கு வங்கக் கடலில் இன்று காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் வரும் 20ம் தேதி வரை குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 45 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்பதால் அப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாமென கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 18,19 ஆகிய தேதிகளில் தென் மாவடங்களின் கடலோர பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். 20ஆம் தேதி தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews


சமீபத்திய செய்திகள் 

No comments:

Post a Comment