வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: மன அழுத்தம் கொடுக்கும் பெரிய பிரச்சனைகளுக்கு இப்படி எழுதி வெச்சா சரியாகிடும்..!
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Wednesday, January 19, 2022

மன அழுத்தம் கொடுக்கும் பெரிய பிரச்சனைகளுக்கு இப்படி எழுதி வெச்சா சரியாகிடும்..!

மன அழுத்தம் கொடுக்கும் எவ்வளவு பெரிய பிரச்சனையாக இருந்தாலும் சரி, அந்த பிரச்சனையை, இந்த இலையில் எழுதி வைத்தால், கஷ்டத்திற்கு உண்டான தீர்வு உடனடியாக கிடைக்கும்.


மன அழுத்தம் நமக்கு எப்போது வருகின்றதோ, அப்போதே ஒன்றன்பின் ஒன்றாக ஒவ்வொரு பிரச்சனையாக குடும்பத்திற்குள் நுழைய ஆரம்பித்துவிடும். மன அழுத்தம் கோபத்தை உண்டுபண்ணும். கோபம் குடும்பத்தில் சண்டை சச்சரவுகளை கொண்டு வந்து சேர்க்கும். சண்டை சச்சரவுகள், கோபம், மன அழுத்தம் எல்லாம் சேர்ந்து உடல் ஆரோக்கியத்தை கெடுத்துவிடும். நிம்மதி குடும்பத்தை விட்டு தானாக வெளியே சென்றுவிடும். இப்படி மன அழுத்தமானது ஒரு குடும்பத்தையே சீர்குலைக்கும் அளவிற்கு சக்தி வாய்ந்த கொடுமையான ஒரு வியாதி.

கூடுமானவரை மன அழுத்தம் இல்லாத வாழ்க்கையை வாழ பழகிக்கொள்ளுங்கள். அழுத்தமில்லாத வாழ்க்கையில்தான் சந்தோஷமும் நிம்மதியும் நிறைந்திருக்கும். தேவையற்ற பிரச்சினைகளை மனதில் போட்டு குழப்பிக் கொள்வதால் எதற்கும் தீர்வு கிடைக்கப் போவது கிடையாது. மனது என்பது குப்பைக்கூடை அல்ல. எல்லா பிரச்சனைகளையும் தூக்கி அதில் போட்டு வைக்க. சரி, இப்போது மன அழுத்தத்தை நீக்க கூடிய ஒரு சுலபமான பரிகாரத்தை தான் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

ரோஜா பூவை பார்க்கும் போது அதனுடைய அழகில் நிச்சயமாக நம்முடைய மனம் மயங்கும். அந்த அழகு நம் மனதில் இருக்கும் அழுத்தத்தை குறைத்து மனதை லேசாக்கும். இது நாம் எல்லோரும் அறிந்த ஒரு விஷயம் தான். இது ரோஜா பூவுக்கு மட்டும் பொருந்தும் விஷயம் அல்ல. ரோஜா பூ செடியில் பூத்து குலுங்கும் போது அதைப் பார்த்தால் நம்முடைய மனது இன்னும் இன்னும் சந்தோஷப்படும். இன்னும் லேசாகும்.

இப்படிப்பட்ட அழகான ரோஜா பூ செடியில் உள்ள இலையை வைத்து தான் நமக்கு ஒரு பரிகாரம் சொல்லப்பட்டுள்ளது. ரோஜா பூ செடியில் இருந்து ஒரு இலையை எடுத்துக்கொள்ளுங்கள். ரோஜா இதழ் அல்ல. பச்சை நிறத்தில் இருக்கக்கூடிய ரோஜா பூ செடியின் இலை நமக்கு ஒன்று தேவை. அந்த இலையில் சிவப்பு நிற பேனாவைக் கொண்டு, உங்களுக்கு மன அழுத்தம் கொடுக்கக் கூடிய விஷயத்தை சிறிய வரியில் எழுதி அடக்கி விட வேண்டும். முன்பக்கம் பின்பக்கம் இரண்டு பக்கமும் எழுதிக் கொள்ளலாம்.

உதாரணத்திற்கு வாழ்க்கைத் துணையுடன் பிரச்சனை என்றால், என் மனைவியுடன் சந்தோசமாக வாழ வழி வேண்டும். என்று எழுதலாம். கணவருடன் சண்டை போடாமல் இருக்க வேண்டும் என்று எழுதலாம். குடும்பம் சந்தோசமாக இருக்க வேண்டும் என்று எழுதலாம். கடன் சுமை குறைய வேண்டும் என்று எழுதலாம். இப்படி எந்த விஷயமாக இருந்தாலும், அந்த பிரச்சனையை சுருக்கி, அந்த இலையில் சிவப்பு நிற பேனாவில் எழுதி ஏதாவது ஒரு இடத்தில் உங்கள் வீட்டில் வைத்துக்கொள்ளுங்கள்.

நீங்கள் படிக்கும் புத்தகத்திற்கு நடுவில் கூட இந்த ரோஜா இதழை வைத்துக் கொள்ளலாம். தவறு கிடையாது. இப்படி உங்கள் மனதில் உள்ள பாரத்தை, சுமையை இந்த இலையில் இறக்கி வைத்து விடுங்கள். பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கிறதோ இல்லையோ அது பிறகு சிந்திக்க வேண்டிய விஷயம். ஆனால் உங்கள் மனதில் அந்த பிரச்சனையால் ஏற்பட்டிருந்த மன மன அழுத்தம் உடனடியாக குறையும். ஒரு கிலோ பாரத்தை மனதில் இருந்து இறக்கி வைத்தது போல ஒரு உணர்வு ஏற்படும். நம்பிக்கை உள்ளவர்கள் முயற்சி செய்து பாருங்கள். மன அழுத்தம் நீங்கினால் வாழ்க்கையில் பல பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும் என்ற ஒரு கருத்துடன் இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

📮டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews

ஆன்மீக செய்திகள் 


முந்தைய ஆன்மீக செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்

சமீபத்திய செய்திகள் 
சமூக சீரழிவு செய்திகள்

முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும் 

ஆன்மீக செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

வேலைவாய்ப்பு செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

சினிமா செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

தலைப்பு வாரியாக செய்திகள்

No comments:

Post a Comment