வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: இந்த மந்திரத்தை படித்தால் வாழ்வில் ஏராளமான பலன்களை பெறலாம்..!
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Tuesday, January 18, 2022

இந்த மந்திரத்தை படித்தால் வாழ்வில் ஏராளமான பலன்களை பெறலாம்..!

ஏராளமான பலன்களை கொண்ட மிகவும் சக்தி வாய்ந்த ஒரு மந்திரம். தேவியின் அனுகிரகம் இருந்தால் மட்டுமே இதை பாராயணம் செய்ய முடியும். என்ன பலன்? என்ன மாத்திரம்? இதோ விளக்கம்.


நாம் வணங்கும் தெய்வங்களுக்கு உகந்ததாக எத்தனையோ மந்திரங்கள் உள்ளது. அதை உச்சரிப்பதால் நமக்கு சில வித நன்மைகள் ஏற்படுகிறது. ஆனால் இப்பிறவியில் அளப்பரிய பல சக்திகளை பெறுவதோடு, அடுத்தொரு பிறவி இல்லாத வகையில் நமது பாவங்கள் அனைத்தும் கழிந்து அளவற்ற புண்ணியத்தை தரவல்ல ஒரு மந்திரம் தான் லலிதா சகஸ்ரநாமம்.
“சகஸ்ரநாமம்” என்றால் “ஆயிரம் பெயர்கள்”‘ என்று பொருள்படும். 

லலிதா சகஸ்ரநாமம் மந்திரத்தை தொடர்ந்து பாராயணம் செய்பவர்களுக்கு அம்பிகையின் அளப்பரிய பெருமைகள் மட்டுமல்லாது ஆன்மிகத்தை பற்றிய ஆழ்ந்த புரிதல் மற்றும் விழிப்புணர்வு ஏற்படும். மந்திர, தந்திரங்களின் நுட்பங்கள் விளங்கும். இந்த பிரபஞ்சத்தின் படைப்பு முதலான அனைத்தையும் பற்றிய ஞானம் உருவாகும்.

தமிழ் முனியான அகத்திய மகரிஷிக்கு, கலைகளுக்கு தெய்வமான சரஸ்வதி தேவியின் குருவான குதிரை முகம் கொண்டவரும் திருமாலின் அம்சம் நிறைந்தவருமான “ஸ்ரீ ஹயக்ரீவர்” லலிதா சகஸ்ரநாம மந்திரத்தின் பெருமைகளை கீழ்கண்டவாறு விளக்குகிறார்.

“அகஸ்தியரே மந்திர சக்தி வாய்ந்த தேவியின் ஆயிரம் நாமங்களை உமக்கு கூறினோம்”. இது ரகசியங்கள் அனைத்திலும் மிகவும் ரகசியமானது. இந்த லலிதா சகஸ்ர நாம துதியை போன்று சக்திவாய்ந்த துதி வேறொன்றும் இல்லை. இதை தொடர்ந்து பாராயணம் செய்பவர்களுக்கு நோய்கள் அணுகாது. ஏற்கனவே இருக்கின்ற நோய்களின் தீவிரம் குறையும்.

விரும்பிய செல்வங்கள் அனைத்தையும் துதிப்போர்க்கு கொடுக்கும். அகால மரணம் ஏற்படாமல் காத்து, நீண்ட ஆயுளை தரும். திருமணம் ஆகி பிள்ளைப்பேறு இல்லாமல் தவிப்பவர்களுக்கு குழந்தை பாக்கியத்தை கொடுக்கும்.

கங்கை நதியில் நீராடுதல், கோடி லிங்கங்களை பிரதிஷ்டை செய்தல், சூரிய சந்திர கிரகண காலங்களில் கங்கை நதிக்கரையோரம் அஸ்வமேத யாகம் செய்தல், பஞ்சம் ஏற்பட்ட காலங்களில் நீர் வற்றிய ஊர்களில் கிணறு வெட்டுவது, மக்களுக்கு அன்னதானம் செய்தல் போன்ற அனைத்து புனித காரியங்களின் பலன்களையும் காட்டிலும் பல மடங்கு புண்ணிய பலனை தரக்கூடியது லலிதா சகஸ்ர நாம பாராயணம். எத்தகைய பாவங்களையும் இந்த லலிதா சகஸ்ரநாமம் பாராயணம் தீர்க்கும். 

இதைவிடுத்து பாவங்களை போக்க வேறு வழியை நாடுபவன் பயனற்றவன். பௌர்ணமி அன்று தெரியும் பூரண சந்திரனின் பிம்பத்தில் தேவியை தியானம் செய்து, பாவித்து இந்த லலிதா சகஸ்ரநாமத்தை படிப்பவர்களுக்கு நோய்கள் தீரும். பூத, பிசாச, ராட்சச சக்திகளின் உபாதைகள் நீங்கும். இந்த லலிதா சகஸ்ர நாமத்தை படிப்பவர் நாவில் கலைமகள் சரஸ்வதி தேவி நர்த்தனம் ஆடுவாள்.
உபாசகரின் எதிரிகளை பேச விடாது கலைமகள் வாக்ஸ்தம்பம் செய்துவிடுவாள். அரசனே எதிர்த்தாலும் லலிதா சகஸ்ர நாம உபாசனை செய்யும் அன்னையின் பக்தனிடம் அவன் தோல்வி அடைவான்.

இந்த சகஸ்ரநாம மந்திரத்தை பாராயணம் செய்யும் நபரின் பார்வை பட்டாலே தோஷங்கள் அனைத்தும் நீங்கும். ஸ்ரீ வித்யை போன்ற ஒரு மந்திரமோ, ஸ்ரீ லலிதாம்பிகை போன்ற ஒரு தேவதையோ, லலிதா சகஸ்ரநாமம் ஒன்று ஒரு ஸ்தோத்திரமோ இந்த உலகில் வேறு எதுவும் கிடையாது. முன்ஜென்மத்தில் ஒருவர் செய்த புண்ணிய பலன்கள் காரணமாகவே இப்பிறவியில் லலிதா சஹஸ்ரநாம பாராயணம் செய்யும் வாய்ப்பு கிட்டும். கடைசி பிறவியாக இருந்தால் மட்டுமே ஒருவனுக்கு ஸ்ரீவித்யை ஜெபமும், சகஸ்ரநாம பாராயணம் செய்யும் பாக்கியமும் கிடைக்கும்.

லட்சுமி சகஸ்ரநாம மந்திரத்தினை ஆடியோ வடிவிலும் தினமும் கேட்டு பலன்களை பெறலாம். ஆனால் முழு பக்தியுடன் பாடல்களை வரிகளை கவனித்து அம்பாளை மனதில் நினைத்து வழிபட வேண்டும்.
தேவியின் அருளின்றி யாரும் இவற்றை பெற முடியாது” என பலச்ருதி பகுதியில் ஹயக்ரீவர் அகஸ்திய மகரிஷிக்கு உபதேசிக்கிறார். லலிதா சகஸ்ர நாம பாராயணம் செய்ய விரும்புபவர்கள் அந்த மந்திரத்தின் பொருள் நன்கறிந்து, பல ஆண்டுகள் பாராயணம் செய்து பலன் பெற்ற ஒரு குருவின் மூலமாக கற்று பாராயணம் செய்தால் மட்டுமே நீங்கள் விரும்பிய பலன்களை பெற முடியும் என அனுபவம் வாய்ந்த தேவி உபாசகர்களின் கருத்தாக உள்ளது.

📮டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews

ஆன்மீக செய்திகள் 


முந்தைய ஆன்மீக செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்

சமீபத்திய செய்திகள் 
சமூக சீரழிவு செய்திகள்

முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும் 

ஆன்மீக செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

வேலைவாய்ப்பு செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

சினிமா செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

தலைப்பு வாரியாக செய்திகள்

No comments:

Post a Comment