வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: கல்லூரி மாணவிக்கு நேர்ந்த சோகம்..! கல்வி கட்டணம் செலுத்த முடியாததால் விபரீதம்.!
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Tuesday, January 18, 2022

கல்லூரி மாணவிக்கு நேர்ந்த சோகம்..! கல்வி கட்டணம் செலுத்த முடியாததால் விபரீதம்.!

கன்னியாகுமரி மாவட்டம் கழுவந்திட்டை ஆர்.சி. தெருவை சேர்ந்தவர் ஜஸ்டின், தொழிலாளி. இவருடைய மகள் பென்சி (19). இவர் மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் டிப்ளமோ 2-ம் ஆண்டு படித்து வந்தார். அவர் கல்வி கட்டணம் ரூ.30 ஆயிரம் பாக்கி வைத்து இருந்ததாகவும், அதை உரிய நேரத்தில் செலுத்த முடியவில்லை என்றும் கூறப்படுகிறது.


இதனால், கடந்த சில நாட்களாக பென்சி மனமுடைந்த நிலையில் காணப்பட்டார். இந்தநிலையில் வழக்கமாக காலையில் சீக்கிரம் எழுந்து விடும் பென்சி நேற்று காலையில் படுக்கை அறையில் இருந்து எழுந்து வரவில்லை. அவருடைய தாயார் பென்சியை எழுப்ப சென்று கதவை தட்டினார். ஆனால் கதவு திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்து கதவை உடைத்து பார்த்தனர்.

அப்போது பென்சி தூக்கில் பிணமாக தொங்கி கொண்டு இருந்தார். அதை பார்த்ததும் குடும்பத்தினர் கதறி அழுதனர். பின்னர், இதுகுறித்து தகவலறிந்த களியக்காவிளை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பென்சியின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

📮டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews

கன்னியாகுமரி மாவட்ட செய்திகள் 


முந்தைய கன்னியாகுமரி மாவட்ட செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்

சமீபத்திய செய்திகள் 
சமூக சீரழிவு செய்திகள்

முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும் 

ஆன்மீக செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

வேலைவாய்ப்பு செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

சினிமா செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

தலைப்பு வாரியாக செய்திகள்

No comments:

Post a Comment