இந்த வழக்கைத் தள்ளுபடி செய்தால், அந்த உத்தரவு பொதுமக்கள் முன்னிலையில் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்திவிடும்’ என்று தெரிவித்தார்.
பதினான்கு வயது சிறுமிக்கு நடைபெற்ற திருமணம் செல்லும் என்று மும்பை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. உயர் நீதிமன்றத்தின் இந்த அறிவிப்பு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மும்பையைச் சேர்ந்த 52 வயது நிறைந்த வழக்கறிஞர், 2014-ம் ஆண்டு 14 வயது சிறுமியைத் திருமணம் செய்தார். ’என்னுடைய தாத்தா எனக்கு கட்டாயப்படுத்தி திருமணம் செய்துவைத்துவிட்டார் என்று சிறுமி காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
அந்தப் புகாரின் அடிப்படையில், டிசம்பர் மாதம் 2017-ம் ஆண்டு அந்த வழக்கறிஞர், காவல்துறையால் கைது செய்யப்பட்டார். 14 வயது சிறுமியைத் திருமணம் செய்து அவருடன் உறவு வைத்ததற்காக, சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக போக்ஸோ(POCSO) சட்டத்தின் கீழ் வழக்கறிஞரின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
அந்த வழக்கில், சுமார் 10 மாதங்கள் சிறையிலிருந்த அவர், பிணையில் வெளியில் வந்துள்ளார். வழக்கறிஞர் திருமணம் செய்த சிறுமி, 2018-ம் ஆண்டு செப்டம்பர் 17-ம் தேதி 18 வயதைக் கடந்தார். அதனையடுத்து, மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் வழக்குத் தொடர்ந்திருந்தார்.
அந்த மனுவில், ‘2014-ம் ஆண்டு 14 வயது சிறுமியைத் திருமணம் செய்து கொண்டதற்காக என் மீது பாலியல் வன்கொடுமை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வழக்கைத் தள்ளுபடி செய்யவேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தார்.
அந்தமனு, மே 2-ம் தேதி நீதிபதிகள் ரஞ்சித் மோர், பாரதி தங்கிரி அமர்வில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் ஆஜரான அரசுத் தரப்பு வழக்கறிஞர், ‘இந்த வழக்கைத் தள்ளுபடி செய்தால், அந்த உத்தரவு பொதுமக்கள் முன்னிலையில் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்திவிடும்’ என்று தெரிவித்தார்.
முன்னதாக, அந்த வழக்கில் புகார் அளித்த பெண் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்திருந்தார். அதில், ‘வழக்கறிஞருடனான பிரச்னை முடிந்துவிட்டது. நான், தற்போது அவருடன் சேர்ந்து வாழ விரும்புகிறேன். அவர் மீதான வழக்கைத் தள்ளுபடி செய்வதில் எந்தப் பிரச்னையும் இல்லை’ என்று குறிப்பிட்டிருந்தார்.
No comments:
Post a Comment