குடியாத்தம் பகுதியை சேர்ந்த விமலா என்ற சிறுமி, அங்குள்ள அரசுப் பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்தார். இவரை, அதே பகுதியை சேர்ந்த, ஸ்வீட் கடை மாஸ்டர் இலியாஸ் (45), பலாத்காரம் செய்திருக்கிறார்.
சிறுமியின் உறவினரான இலியாஸ்க்கு, ஏற்கனவே திருமணமாகி, 5 பெண் குழந்தைகள் உள்ளனர். அடிக்கடி அந்த சிறுமியை தன்னுடைய ஆசைக்கு இணங்க வைத்துள்ளார். இந்த நிலையில் அந்த சிறுமி வயிற்று வழியால் துடித்துள்ளார்.
இதனால் பெற்றோர்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். சிறுமியை பரிசோதித்த மருத்துவர் சிறுமி 7 மாத கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர். இதையடுத்து, குடும்பத்தினர் கேட்டபோது, ஸ்வீட் மாஸ்டர் செய்த கசாமுசாவை மாணவி, விளக்கியுள்ளார். இதன்பேரில், சிறுமியின் பெற்றோர் குடியாத்தம் மகளிர் போலீசில் புகார் அளித்தனர். உடனடியாக, இலியாஸ் மீது, போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிந்து, போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
No comments:
Post a Comment