வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: பாலியல் தொழில் சட்டரீதியாக்கப்படும்…!
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

பாலியல் தொழில் சட்டரீதியாக்கப்படும்…!
Pages


தெற்கு ஆஸ்திரேலியாவில் பாலியல் தொழிலை சட்டபூர்வமாக அனுமதிப்பதற்கான சட்டத்திருந்தங்களை கொண்டுவருவது தொடர்பான பேச்சுக்கள் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.


அண்மையில் மூத்த பாலியல் தொழிலாளர்கள் இருவர் தெற்கு ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்துக்கு சென்று கிறீன் கட்சியினரை சந்தித்து பேசியிருக்கிறார்கள்.
நியூஸிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவை சேர்ந்த இரண்டு பெண் பாலியல் தொழிலாளர்கள் பல வருடங்களாக பாலியல் தொழிலை நடத்தியவர்கள்.


தற்போது இவர்கள் இருவரும் தாங்கள் பணிபுரிந்த துறையிலுள்ளவர்களின் உரிமைக்காக குரல்கொடுக்கும் செயற்பாட்டாளர்களாக செயல்பட்டு வருகிறார்கள். அண்மையில் தெற்கு ஆஸ்திரேலிய நாடாளுமன்ற கட்டடத்தொகுதியில் கிறீன் கட்சியினரை சந்தித்து அந்த மாநிலத்தில் பாலியல் தொழிலை சட்டபூர்வமாக்குவதில் காணப்படும் அரசியல் இழுபறிகள் குறித்தும் அதனால் பாலியல் தொழிலாளர்கள் எவ்வளவுதூரம் சம தொழில்வர்க்கத்தினராக நடத்தப்படாமல் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்பது குறித்தும் பேசியிருக்கிறார்கள்.


அதாவது தெற்கு ஆஸ்திரேலியாவில் பாலியல் தொழில் சட்டப்படி குற்றமாகும். மீறி தொழில்முறையாக மேற்கொள்பவர்களுக்கு 2500 டாலர்கள் வரையான அபராதம் அல்லது ஆறு மாத சிறை என்ற தண்டனை வழங்குவதற்கு சட்டத்தில் இடம் இருக்கின்றது.

No comments:

Post a Comment