இந்த உலகில் பெண்களுக்கு எதிராக பல தொடர் அநீதிகள் அரங்கேறி வருகிறது. பல விதமான பிரச்சனைகளுக்கு மத்தியில் பெண்கள் தினமும் பணிகளுக்கும், கல்லூரிகளுக்கும் சென்று வருகின்றனர்.
அவ்வாறு வெளியே சென்று வரும் பெண்களுக்கு பல்வேறு விதமான முறையில், பல இடங்களில் தொடர் அத்துமீறல்களும் அநீதிகளும் அரங்கேறி வருகிறது. இதனால் பல பெண்கள் தங்களின் வாழ்நாளை இழந்து தவித்து வருகின்றனர்.
இந்தியாவில் கடந்த சில வருடங்களாகவே பெண்களுக்கு எதிரான தொடர் அநீதி சம்பவங்கள் இழைக்கப்பட்டு, பல பெண்கள் இதனால் பாதிக்கப்பட்டு தங்களின் வாழ்நாளில் நடந்த கொடூரத்தை மனதில் வைத்து பயந்து பயந்து வாழ்ந்து வரும் சூழ்நிலையில், தற்போது அது போன்ற சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது.
உத்திரபிரேதேசம் மாநிலத்தில் உள்ள முசாபர் நகரில் சுமார் 22 வயது மற்றும் 23 வயதுடைய பெண்கள் வசித்து வருகின்றனர். இவர் சம்பவத்தன்று வெளியே செல்ல திட்டமிட்டு, சென்ற சமயத்தில் இவர்களை பின்தொடர்ந்த கும்பல் ஒன்று காரில் கடத்தியுள்ளனர்.
இவர்களை காரில் கடத்திய கும்பலானது அங்குள்ள நியூ மண்டி பகுதியில் வசித்து வரும் சஞ்சீவ் லோஹன் என்ற நபரின் இல்லத்தில், அவரது ஆதரவுடன் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியுள்ளனர்.
இதுமட்டுமல்லாது சஞ்சீவ் லோகனின் மனைவியான ரிடா லோகனும் சேர்ந்து அங்குள்ள நபர்களுக்கு பணத்திற்க்காக இந்த இரண்டு பெண்களை வலுக்கட்டாயமாக விபச்சாரத்திற்கு உபயோகம் செய்ததும், வீடியோ காட்சிகளாகவும் பதிவு செய்து மிரட்டி வந்துள்ளனர்.
No comments:
Post a Comment