இந்தியாவில் திருமணமான இளம் பெண் விடுதியில் தங்கியிருந்த நிலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்கத்தை சேர்ந்தவர் சங்கீதா. இவர் கடந்த 5ஆம் திகதி தனது காதலர் லோகேஷ் உடன் ஹைதராபாத்துக்கு வந்தார்.
பின்னர் இருவரும் அங்குள்ள விடுதியில் அறை எடுத்து தங்கியிருந்தனர்.
செவ்வாய்க்கிழமை இரவு சங்கீதா வேறு நபருடன் அடிக்கடி போன் பேசுகிறார் என அவருடன் லோகேஷ் சண்டை போட்டுள்ளார்.
இருவரின் சண்டை குறித்து அறிந்து அங்கு வந்த லோகேஷ் நண்பர் ரேகன், லோகேஷை சமாதானப்படுத்தி தன்னுடன் வெளியில் அழைத்து சென்றார்.
இதையடுத்து மனவேதனையில் இருந்த சங்கீதா கடிதம் எழுதிவிட்டு விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சம்பவம் குறித்து தகவலறிந்து அங்கு வந்த பொலிசார் சங்கீதா சடலத்தை கைப்பற்றிவிட்டு அவர் எழுதியிருந்த கடிதத்தையும் சில ஆதாரங்களையும் கைப்பற்றியுள்ளனர்.
கடிதத்தில், என் வாழ்க்கை மகிழ்ச்சியானதாக இல்லை, என் குழந்தைகள் நன்றாக வாழ வேண்டும் என விரும்புகிறேன் என எழுதப்பட்டிருந்தது.
இது குறித்து பொலிசார் கூறுகையில், சங்கீதாவுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
கணவரிடம் விவாகரத்து கோரி அவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்நிலையில் தான் லோகேஷ் உடன் அவருக்கு காதல் ஏற்பட்டது.
சம்பவம் தொடர்பாக லோகேஷ் மற்றும் அவர் நண்பர் ரேகனை விசாரித்து வருகிறோம் என கூறியுள்ளனர்.
No comments:
Post a Comment