சேலம் பைபாஸ் பகுதியில் உள்ள லாட்ஜில் கடந்த சில நாட்களாக வெளிமாநில அழகிகள் அறை எடுத்து தங்கி விபசாரம் செய்வதாக சேலம் மாநகர காவல் ஆணையருக்கு ஒரு புகார்கள் வந்தன.
இதனால், விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க அன்னதானப்பட்டி காவல் ஆய்வாளருக்கு அவர் உத்தரவிட்டார். இதனையடுத்து ஆய்வாளர் குமார் மற்றும் காவலர்கள் இன்று அதிகாலை சீலநாயக்கன்பட்டி பை-பாஸ் பகுதியில் உள்ள அந்த தனியார் தங்கும் விடுதியில் திடீர் என சோதனை செய்தனர்.
அப்போது அங்கு விருத்தாசலத்தைச் சேர்ந்த லட்சுமி, தும்கூரை சேர்ந்த சுவாதி ஆகியோர் இருந்தனர். இந்த இரண்டு பெண்களை வைத்து விபசாரம் நடத்தி வந்த திருப்பூரைச் சேர்ந்த அபுல்ஹசன் என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.
சேலத்தில் கடந்த சில வருடங்களாக விபசாரம் இல்லாமல் இருந்து வந்த நிலையில், தற்போது மீண்டும் சில தனியார் தங்கும் விடுதிகளில் விபசாரம் நடத்துவதால் போலீசார் சேலம் முழுவதுமுள்ள லாட்ஜ் மற்றும் ஹோட்டல்களில் விபச்சாரம் நடக்கிறதா என சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment