வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: Child Abuse News Tamil
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...
Showing posts with label Child Abuse News Tamil. Show all posts
Showing posts with label Child Abuse News Tamil. Show all posts

Wednesday, December 29, 2021

15 வயது சிறுமி கற்பழிப்பு..! சாகும் வரை ஆயுள் தண்டனை..! நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு..!

மகள் முறை உள்ள 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பம் ஆக்கிய அம்ஜத் கான் என்பவருக்கு சாகும்வரை சிறை தண்டனை விதித்து மகிளா நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கி இருக்கிறது.


புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தை சேர்ந்தவர் அம்ஜத் கான். இவருக்கு வயது 44 ஆகும். இவர் அதே பகுதியைச் சேர்ந்த பரக்கத் நிஷா என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டுள்ளார். பரக்கத் நிஷாவிற்கும் இது இரண்டாவது திருமணம் ஆகும். பரக்கத் நிஷாவின் முதல் கணவருக்கு பெற்ற மகள் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார்.

இவருக்கு வயது 15 ஆகும். இந்நிலையில் அம்ஜத்கான் மகள் முறை உடைய 15 வயது சிறுமியை கடந்த 18. 3. 21 அன்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதேபோன்று அடிக்கடி அவருடன் பாலியல் உறவு வைத்ததாக கூறப்படுகிறது. இதனால் 15 வயது சிறுமி கர்ப்பம் ஆனாள். ஆறு மாதம் கழித்த பிறகுதான் இந்த விஷயம் பரக்கத் நிஷாவிற்கு தெரியவந்துள்ளது.

கர்ப்பம் ஆகி ஆறு மாதம் ஆனதால், எதுவும் செய்ய முடியவில்லை. மேலும் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அந்த சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனை தொடர்ந்து பரக்கத் நிஷா அறந்தாங்கி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் அம்ஜத் கான் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் உள்ளார்.

இந்த வழக்கின் விசாரணை புதுக்கோட்டை மகிளா நீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது. வழக்கை விசாரணை செய்த மகிளா நீதிமன்ற நீதிபதி சத்யா அம்ஜத் கானுக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்தும் ரூ50 ஆயிரம் அபராதம் விதித்தும் தீர்ப்பளித்தார்.

மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு ரூ 6 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் ஏற்கனவே மூன்று லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு விட்டதால் மீதமுள்ள தொகையை அரசு உடனடியாக வழங்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார். மகள் வயதுடைய பெண்ணை கற்பழித்தவனுக்கு பரபரப்பான தீர்ப்பை வழங்கி இருக்கிறது நீதிமன்றம்.

📮டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews

சமூக சீரழிவு செய்திகள் 


முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்

சமீபத்திய செய்திகள் 
சமூக சீரழிவு செய்திகள்

முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும் 

ஆன்மீக செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

வேலைவாய்ப்பு செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

சினிமா செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

தலைப்பு வாரியாக செய்திகள்

Wednesday, December 22, 2021

15 வயது சிறுமிக்கு பிரசவம்; சிறுமியின் தாய், கள்ளக்காதலன் கைது.!

சென்னையில் 15 வயது சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்த சம்பவத்தில் அவருடைய தாயும், தாயின் ஆண் நண்பரும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.


கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் துரைராஜ் என்பவனுக்கும் தவறான தொடர்பு இருந்து வந்துள்ளது. அந்த பெண்ணின் வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்த துரைராஜ், அவரது மகளையும் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கி இருக்கிறான். இதனால் அந்த சிறுமி கர்பமாகி உள்ளார். எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனையடுத்து மருத்துவமனை சார்பில் அளிக்கப்பட்ட தகவலின் பேரில் சிறுமியின் தாயையும், துரைராஜையும் போலீசார் கைது செய்தனர்.

📮டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews

தொடர்புடைய செய்திகள் 


முந்தைய தொடர்புடைய செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்

சமீபத்திய செய்திகள் 
சமூக சீரழிவு செய்திகள்

முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும் 

தலைப்பு வாரியாக செய்திகள்

Monday, December 20, 2021

பத்தாம் வகுப்பு மாணவிகளின் ஆபாச படத்தை வெளியிடுவதாக மிரட்டிய கல்லூரி மாணவன்; கூலிப்படையை வைத்து கொன்று புதைத்த மாணவிகள்.!

செங்கல்பட்டு மாவட்டம் மண்ணிவாக்கம் கருமாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன். 50 வயதான இவர் கூலித்தொழிலாளி ஆவார். இவரது மனைவி செல்வி. இவர்களுக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். இவர்களது மகன் பிரேம்குமார் (வயது 20) சென்னை, கிண்டியில் உள்ள தனியார் கல்லூரியில் பி. ஏ. 3ம் ஆண்டு படித்து வந்துள்ளார்.


இந்த நிலையில், கடந்த 17-ந் தேதி பிரேம்குமார் அதே பகுதியில் உள்ள பிரவீன்குமார் என்ற 12ம் வகுப்பு மாணவருடன் சென்னையை அடுத்த ரெட்ஹில்ஸ் பகுதியில் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, திடீரென பைக்கில் வந்த மர்மநபர்கள் பிரேம்குமாரை திடீரென தாக்கியுள்ளனர். மேலும், பிரேம்குமாரின் பைக்கையும், செல்போனையும் பறித்துக் கொண்டதுடன் அவரை கடத்தியும் சென்றுள்ளனர். இதைக் கண்டு பயத்தில் அலறியடித்துக்கொண்டே பிரேம்குமாருடன் சென்ற 12ம் வகுப்பு மாணவன் பிரவீன்குமார் வீட்டிற்கு ஓடிவந்துள்ளான்.

அங்கு தனது பெற்றோரிடமும், பிரேம்குமார் பெற்றோரிடமும் நடந்த சம்பவத்தை கூறியதுடன், பிரேம்குமாரை கடத்திச் சென்ற சம்பவத்தையும் கூறியுள்ளனர். இதனால், பிரேம்குமார் பெற்றோர்கள் பதற்றம் அடைந்துள்னர். மேலும், பிரேம்குமார் அவ்வப்போது வண்டலூர் அருகே உள்ள ஓட்டேரி பகுதியில் உள்ள 10ம் வகுப்பு படிக்கும் இரண்டு மாணவிகளிடம் தொலைபேசியில் பேசி வந்ததையும் பிரவீன்குமார் தெரிவித்துள்ளார். இதனால், உடனே பிரேம்குமார் பெற்றோர்கள் அந்த மாணவிகளின் வீட்டிற்கு சென்று விசாரித்துள்ளனர். அவர்கள் தங்களுக்கு ஏதும் தெரியாது என்று கூறியதால், உடனே பிரேம்குமார் பெற்றோர்கள் ஓட்டேரி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்னர்.


இதுதொடர்பாக, போலீசார் தீவிர விசாரணையில் இறங்கினர். அந்த இரு மாணவிகள், பிரேம்குமாரின் நண்பர் பிரவீன்குமாரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது, மாணவிகள் அளித்த தகவல்கள் போலீசாரையே அதிர்ச்சியடைய வைத்துள்ளது. பிரேம்குமாருக்கும் இந்த இரு மாணவிகளுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இரு மாணவிகளையும் செல்போனில் ஆபாசமாக படம்பிடித்த பிரேம்குமார், மாணவிகளை மிரட்டியுள்ளார். கடந்த ஒரு வருடமாக இரண்டு மாணவிகளையும் மிரட்டி ரூபாய் 1. 50 லட்சம் பணம் வரை மாணவிகளிடம் இருந்து பிரேம்குமார் பறித்துள்ளார்.

இதனால், கடுமையான மன உளைச்சலுக்கு ஆளான மாணவிகளுக்கு இன்ஸ்டாகிராம் மூலம் ரெட்ஹில்ஸ் பகுதியை அடுத்த சோழவரம் காந்திநகர் பகுதியைச் சேர்ந்த அசோக் என்ற இளைஞர் பழக்கமாகியுள்ளார். கடந்த மூன்று மாதங்களாக அசோக்கிடம் இன்ஸ்டாகிராமில் பழகிய மாணவிகள், பிரேம்குமார் பற்றியும், பிரேம் மிரட்டி பணம் பறித்து வருவதையும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, அசோக் மாணவிகளிடம் பிரேம்குமாரிடம் நீ கேட்ட பணத்தை தருகிறோம். ரெட்ஹில்ஸ் டோல்கேட்டிடம் வந்துவிடு என்று சொல்லுமாறு கூறியுள்ளார். பணத்தை பெறுவதற்காக பிரேம்குமாரும், பிரவீன்குமாரும் சென்றுள்ளனர். ரெட்ஹில்ஸ் சென்ற பிரேம்குமாரிடம் மாணவிகள் என்ன உடை அணிந்து வந்துள்ளீர்கள்? என்று கேட்டுள்ளனர். அதை கேட்ட மாணவிகள் அசோக்கிடம் கூறியுள்ளனர். அதன்பின்புதான் பிரேம்குமார் கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.

மேலும், கடத்திச் செல்லப்பட்ட பிரேம்குமாரை அசோக் உள்ளிட்ட கூலிப்படை கும்பல் 2 நாட்கள் ஒரு அறையில் அடைத்து வைத்து சித்திரவதை செய்துள்ளது. பின்னர், ஆந்திரா அருகே உள்ள கும்மிடிப்பூண்டி அருகே பிரேம்குமாரை கடத்திச் சென்று ஆரம்பாக்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பெரிய ஓபுளாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட ஈச்சங்காட்டுமேடு கிராமம் அருகே உள்ள ஏரியில் வைத்து சரமாரியாக வெட்டியுள்ளனர். பின்னர், அங்கேயே பிரேம்குமாரின் உடலை புதைத்துள்ளனர்.

இந்த நிலையில், கொலை நடந்த இடத்திற்கு நேற்று மாணவிகள் இருவரையும், பிரேம்குமாரின் பெற்றோர்களையும், பிரவீன்குமாரையும் போலீசார் அழைத்துச் சென்றுள்ளனர். பின்னர், ஏரிக்கரையில் வெட்டி புதைக்கப்பட்ட பிரேம்குமாரின் சடலத்தை தாசில்தார் முன்னிலையில் தோண்டி எடுத்தனர். பின்னர், அவரது உடல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. 15 வயதே ஆன மாணவிகள் இருவரையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். 10ம் வகுப்பு மாணவிகள் கூலிப்படையை ஏற்பாடு செய்து கல்லூரி மாணவரை கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews

தொடர்புடைய செய்திகள் 


சமீபத்திய செய்திகள் 

பெற்ற மகளை 7 மாதம் கர்ப்பமாக்கிய கொடூர தந்தை.!! மனைவி குமுறல்..!

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள கொண்டையம்பள்ளி பகுதியில் வசிப்பவர் கண்ணன் (45). இவரது மனைவி ஆத்தூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில், தனது கணவர் சொந்த மகளை கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாகவும், அதனால் சிறுமி தற்போது 7 மாதம் கர்ப்பமாக இருக்கிறார். 


இதை பற்றி வெளியில் கூறினால் கொலை செய்து விடுவேன் என மிரட்டுகிறார். தனது கணவர் கண்ணன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென புகாரில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஆத்தூர் மகளிர் காவல்நிலைய போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில், கண்ணன் தனது மகளை பாலியல் கொடுமை செய்து கர்ப்பமாக்கியது தெரியவந்தது. இதையடுத்து அவரை போக்சோ சட்டத்தில் கைது செய்த போலீசார், சிறையில் அடைத்தனர். இச்சமபவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews

தொடர்புடைய செய்திகள் 


சமீபத்திய செய்திகள் 

Sunday, December 19, 2021

கொடுமை.! விளையாடச் சென்ற 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை..!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நேற்று முன்தினம் 7 வயது சிறுமி வீட்டிற்கு வெளியே விளையாடி கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு வந்த 14 வயது சிறுவன் சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளான். அப்போது வீட்டில் யாருமில்லை. அங்கு சிறுமியிடம் சிறுவன் அத்துமீறியுள்ளான்.


இதையடுத்து சிறுமி கூச்சலிடவே, சிறுவன் அங்கிருந்து தப்பியோடியுள்ளான். அக்கம்பக்கத்தினர் சிறுமியை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு சிறுமி நலமாக உள்ளார். இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் சிறுவனை வலைவீசி தேடி வருகின்றனர்.

டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews


சமீபத்திய செய்திகள் 

Sunday, December 12, 2021

குழந்தை இல்லை என்பதற்காக சிறுமியை 4ஆவது திருமணம் செய்த கில்லாடி! | Child Marriage at Ariyalur | வில் அம்பு செய்திகள் | Vil Ambu News

அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அரசு பேருந்து ஓட்டுநர் ராதாகிருஷ்ணன் என்பவருக்கு ஏற்கனவே மூன்று திருமணங்கள் ஆன நிலையில் குழந்தை இல்லை என்பதற்காக நான்காவதாக 13 வயது சிறுமியை திருமணம் செய்து கொண்டுள்ளார்.


நான்காவதாக சிறுமியை திருமணம் செய்து கொண்ட நிலையில் அவர் கர்ப்பமாகியுள்ளார். இது தொடர்பாக கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் ராதாகிருஷ்ணன், சிறுமியின் தாயார் பரமேஸ்வரி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews


சமீபத்திய செய்திகள் 

Monday, August 12, 2019

மிரட்டி மிரட்டியே.. 12 முதல் 16 வயசு சிறுமிகளை சீரழித்த ஆதிசிவன்..

12 வயசு குழந்தை உட்பட 4 சிறுமிகளுக்கு தனியார் காப்பகத்தில் பாலியல் தொல்லை தந்த டிரஸ்ட் உரிமையாளரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இதையடுத்து சம்பந்தப்பட்ட காப்பகத்துக்கும் அதிரடியாக சீல் வைக்கப்பட்டது!




மதுரை மாவட்டம் சமயநல்லூர் பகுதியில் மாசா அறக்கட்டளை சார்பில் ஆதரவற்ற குழந்தைகள் காப்பகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த காப்பகத்தில் 25-க்கும் மேற்பட்ட சிறுவர் -சிறுமிகள் தங்கி இருக்கிறார்கள். 


 கருமாத்தூரை சேர்ந்த ஞானபிரகாசம், ஆதிசிவன் ஆகியோர்தான் இந்த காப்பகத்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. ஆதிசிவனுக்கு வயசு 41 ஆகிறது.


காப்பகங்கள் இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த குழந்தைகள் நல கமிட்டி உறுப்பினர் சண்முகம், பாதிக்கப்பட்ட 4 சிறுமிகளையும் மதுரை முத்துப்பட்டியில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்தார். அங்குள்ள சிறுவர் சிறுமிகள் தொடர்ந்து தங்கினால் ஆபத்து என்று உணர்ந்த அவர், அவர்கள் அனைவரையும் வேறு காப்பகங்களுக்கு அனுப்ப நடவடிக்கை எடுத்து வருகிறார்.

திடீர் ஆய்வு

இந்த காப்பகத்தில் உள்ள சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை தரப்படுவதாக மாவட்ட குழந்தைகள் நல அலுவலகத்துக்கு புகார்கள் வந்தன. இதன் அடிப்படையில், மாவட்ட குழந்தைகள் நல கமிட்டி உறுப்பினர் சண்முகம், சம்பந்தப்பட்ட காப்பகத்திற்குள் நுழைந்து அதிரடி ஆய்வு நடத்தினார். அங்கு தங்கி இருக்கும் குழந்தைகளை அழைத்து நேரடியாகவே விசாரணை நடத்தினார்


கதறி அழுதனர்

அப்போது சிறுமிகள் கதறி கதறி அழ ஆரம்பித்தனர். இதில், 4 சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தெரியவந்தது. இதற்கெல்லாம் காரணம், ஆதிசிவன்தான் என்றும், அவர்தான் ஆபீசில் வைத்து தங்களை மிரட்டி மிரட்டி பலாத்காரம் செய்ததாகவும் சிறுமிகள் கண்ணீருடன் கூறினார்கள். மேலும் இதை வெளியே சொன்னால் கொலை செய்வதாக ஆதிசிவன் மிரட்டியதாகவும் சிறுமிகள் தெரிவித்தனர்.


காப்பகங்கள் 
இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த குழந்தைகள் நல கமிட்டி உறுப்பினர் சண்முகம், பாதிக்கப்பட்ட 4 சிறுமிகளையும் மதுரை முத்துப்பட்டியில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்தார். அங்குள்ள சிறுவர் சிறுமிகள் தொடர்ந்து தங்கினால் ஆபத்து என்று உணர்ந்த அவர், அவர்கள் அனைவரையும் வேறு காப்பகங்களுக்கு அனுப்ப நடவடிக்கை எடுத்து வருகிறார்.


பரபரப்பு 

மேலும் 4 சிறுமிகளுக்கு இழைத்த அநீதி குறித்து, சண்முகம் சமயநல்லூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் எடுக்கவும், போலீசார் விசாரணை நடத்தி ஆதிசிவனை போக்சோவில் அதிரடியாக கைது செய்தனர். இதையடுத்து, சம்பந்தப்பட்ட காப்பகத்திற்கும் சீல் வைக்கப்பட்டதுடன், காப்பகத்தின் இன்னொரு நிர்வாகியான ஞானபிரகாசிடம் விசாரணை நடந்து வருகிறது. காப்பகத்தில் சிறுமிகள் நாசம் செய்யப்பட்ட சம்பவம் மதுரையில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.


Saturday, November 03, 2018

மாணவியை மானபங்கம் செய்த டியூசன் ஆசிரியருக்கு 5 ஆண்டு ஜெயில் சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு



10-ம் வகுப்பு மாணவியை மானபங்கம் செய்த டியூசன் ஆசிரியருக்கு 5 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு கூறியது. 


 மும்பை அந்தேரி பகுதியை சேர்ந்த 15 வயது மாணவிக்கு அந்த கட்டிடத்தை சேர்ந்த 53 வயது ஆசிரியர் ஒருவர் டியூசன் வகுப்பு எடுக்க அவளது வீட்டிற்கு வருவது வழக்கம். கடந்த 2014-ம் ஆண்டு மார்ச் மாதம் வீட்டில் மாணவிக்கு டியூசன் வகுப்பு நடந்தது. அப்போது வீட்டில் மாணவியின் பெற்றோர் வெளியே சென்று இருந்தனர். மாணவிக்கு உதவியாக பாட்டி மட்டும் வீட்டில் இருந்து உள்ளார். (தொடர்ச்சி கீழே...)
 

இதையும் படிக்கலாமே !!!


இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய டியூசன் ஆசிரியர் மாணவியை கட்டிப்பிடித்து மானபங்கம் செய்தார்.  இதனால் பயந்து போன மாணவி சத்தம் போட்டு உள்ளாள். இவளது சத்தம் கேட்டு ஓடி வந்த பாட்டி சம்பவம் குறித்து மாணவியின் பெற்றோரை வீட்டிற்கு வரவழைத்தார். பின்னர் அவர்கள் டியூசன் ஆசிரியரை பிடித்து வெர்சோவா போலீசில் ஒப்படைத்தனர்.



போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும் அவர் மீது குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.  இந்த வழக்கு விசாரணை நிறைவில், அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டது. இதையடுத்து தீர்ப்பு கூறிய கோர்ட்டு டியூசன் ஆசிரியருக்கு 5 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து உத்தரவிட்டது.


அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts