வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: Vaccination
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...
Showing posts with label Vaccination. Show all posts
Showing posts with label Vaccination. Show all posts

Saturday, January 15, 2022

நம்பமுடியாத அதிசயம்.! கொரோனா தடுப்பூசி போட்டவருக்கு நேர்ந்த அற்புதம்.!

ஜார்க்கண்ட் மாநிலம் பொகாரோவில் நடக்க முடியாத மற்றும் பேசும் திறனை இழந்த 55 வயது நபர் ஒருவர் கோவிஷீல்டு முதல் தவணை தடுப்பூசி போட்டுக் கொண்ட மறுநாள் நடக்கவும் பேசவும் கூடிய திறனை பெற்றுள்ள சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.


Salgadih பகுதியில் வசிக்கும் துலர்சந்த் முன்டா என்பவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த சாலை விபத்து காரணமாக பேச முடியாமலும் நடக்க முடியாமலும் படுத்த படுக்கையாக இருந்து அவதிப்பட்டு வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 4ம் தேதி அன்று அவருக்கு அங்கன்வாடி ஊழியர் ஒருவர் கோவிஷீல்டு முதல் தவணை தடுப்பூசியைப் போட்டுள்ளார்.

மறுநாள் துலர்சந்த் எழுந்து நிற்கவும் சில வார்த்தைகளைப் பேசும் திறனையும் பெற்றுள்ளார். இதனை உறுதிப் படுத்திய மருத்துவர் திருக்குமார் அதிசயமான இந்த நடவடிக்கை குறித்து ஆராய 3 பேர் கொண்ட மருத்துவக் குழு அமைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

📮டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews

தேசிய செய்திகள் 


முந்தைய தேசிய செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்

சமீபத்திய செய்திகள் 
சமூக சீரழிவு செய்திகள்

முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும் 

ஆன்மீக செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

வேலைவாய்ப்பு செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

சினிமா செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

தலைப்பு வாரியாக செய்திகள்

Tuesday, January 11, 2022

நானும் முன்களப் பணியாளர் என்ற முறையில் இன்று பூஸ்டர் டோஸ் எடுத்துக் கொண்டேன் - முதல்வர் மு.க.ஸ்டாலின்.!

சென்னையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மூன்றாவது தவனை தடுப்பூசி (பூஸ்டர் டோஸ்)-னை செலுத்திக் கொண்டார். பின்னர் அவர் கூறுகையில் "நானும் முன்களப் பணியாளர் என்ற முறையில் இன்று பூஸ்டர் டோஸினை எடுத்துக் கொண்டேன்" என்றார்.


அனைத்து முன்களப் பணியாளர்களும், இணை நோய்கள் கொண்ட 60 வயது நிரம்பிய மூத்த குடிமக்களும் தவறாமல் பூஸ்டர் டோஸ் செலுத்திக் கொள்ளவேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார். தடுப்பூசி எனும் கவசத்தைக் கொண்டு நம்மையும் காப்போம்; நாட்டையும் காப்போம் என்ற கருத்தையும் மக்களிடையே பதிவு செய்தார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.

📮டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews

கொரோனா தொடர்பான செய்திகள் 


முந்தைய கொரோனா தொடர்பான செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்

சமீபத்திய செய்திகள் 
சமூக சீரழிவு செய்திகள்

முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும் 

ஆன்மீக செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

வேலைவாய்ப்பு செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

சினிமா செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

தலைப்பு வாரியாக செய்திகள்

Tuesday, December 21, 2021

😨தடுப்பூசி சான்றிதழில் மோடி படம் வேண்டாம் - வழக்கு தொடுத்தவருக்கு ரூ.1 லட்சம் அபராதம்!

கொரோனா தடுப்பூசி சான்றிதழில் பிரதமர் மோடி புகைப்படம் இடம்பெறுவதை எதிர்த்து கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு போடப்பட்டது. முன்னதாக டிசம்பர் 13ஆம் தேதி இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பிவி குன்னிகிருஷ்ணன்,"நாட்டு மக்களால் தேர்வு செய்யப்பட்ட பிரதமரின் புகைப்படம் சான்றிதழில் இடம் பெற்றால் என்ன தவறு"என கேள்வி எழுப்பினார்.


அப்போது மனுதாரர் பீட்டர் மயலிபரம்பில் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த நடைமுறை மற்ற நாடுகளில் பின்பற்றப்படவில்லை என்றார். அதற்கு நீதிபதி,"மனுதாரருக்கு பிரதமர் ஏன் அவமானமாக தெரிகிறார். மற்ற நாடுகளில் பிரதமர் படம் இடம் பெறவில்லை என்றால், அவர்களுக்கு பிரதமரை குறித்து பெருமிதம் இல்லை போலும்"என்றார்.

அதற்கு மனுதாரர் தரப்பில், "தடுப்பூசி சான்றிதழ் தனிநபர் தகவல்கள் குறித்த ஆவணம். அதில் பிரதமரின் புகைப்படத்தை போடுவது தனிநபரின் உரிமையில் தலையீடுவது போன்றது" என விளக்கம் அளிக்கப்பட்டது. அதற்கு நீதிபதி,"இந்தியாவில் உள்ள 100 கோடி பேரில் யாருக்கும் இதில் எந்த சிக்கலும் ஏற்படாதபோது, உங்களுக்கு மட்டும் எப்படி அது பிரச்சனையாக இருக்கிறது"எனக் கேட்டார்.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரருக்கு ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும் இந்த வழக்கை தள்ளுபடி செய்தார். 6 வாரங்களுக்குள் அபராதத்தை மனுதாரர் கேரள சட்ட சேவைகள் ஆணையத்திடம் செலுத்த வேண்டும் என அவருக்கு கெடு விதிக்கப்பட்டுள்ளது.

📮டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews

அரசியல் செய்திகள் 


முந்தைய தமிழக செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்

சமீபத்திய செய்திகள் 
சமூக சீரழிவு செய்திகள்

முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும் 

தலைப்பு வாரியாக செய்திகள்