வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: 827 ஆபாச இணைய தளங்களுக்கு தடை
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Thursday, October 25, 2018

827 ஆபாச இணைய தளங்களுக்கு தடை



ஆபாச தளங்களை முடக்கும்படி உத்தரகாண்ட் ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்ததை அடுத்து 827 ஆபாச இணைய தளங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 

இணைய தளங்களில் ஆபாச வீடியோக்களை வெளியிடும் ஏராளமான நிறுவனங்கள் சர்வதேச அளவில் செயல்பட்டு வருகின்றன. இந்த இணைய தளங்களுக்கு சில நாடுகளில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இதற்கு தடை எதுவும் இல்லை. குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்கள் மட்டும் இடம்பெற்றால் அவை தடுக்கப்படுகிறது. (தொடர்ச்சி கீழே...)

இதையும் படிக்கலாமே !!!


 இந்த நிலையில் ஆபாச தளங்களை முடக்கும்படி உத்தரகாண்ட் ஐகோர்ட்டில் வழக்கு ஒன்று தொடரப்பட்டு இருந்தது. அதை விசாரித்த நீதிபதிகள் 857 ஆபாச இணைய தளங்களை முடக்கும்படி கடந்த மாதம் 27-ந் தேதி உத்தரவிட்டனர். இதையடுத்து மத்திய எலெக்ட்ரானிக் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அவற்றை முடக்குவதற்கான நடவடிக்கைகளை எடுத்தது.  கோர்ட்டு கூறிய 857 ஆபாச தளங்களை ஆய்வு செய்ததில் 30 தளங்களில் ஆபாச படங்கள் இல்லை. மீதி 827 தளங்களில் ஆபாச படங்கள் இருந்தன.



எனவே, அந்த தளங்களை முடக்கும்படி மத்திய எலெக்ட்ரானிக் தகவல் தொழில்நுட்பத்துறை டெலிபோன் துறைக்கு உத்தரவிட்டுள்ளது. அதையடுத்து அந்த துறை இணையதள வசதிகள் வழங்கும் அனைத்து டெலிபோன் நிவனங்களுக்கும் ஆபாச தளங்களை முடக்குமாறு உத்தரவிட்டுள்ளது.  இதன்படி படிப்படியாக ஆபாச இணைய தளங்கள் முடக்கப்பட்டு வருகிறது.


அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts



No comments:

Post a Comment