Run World Media: 10/20/18

உங்கள் இமெயிலை உள்ளிடுங்கள்-உங்கள் Inboxல் Confirm செய்யுங்கள் நமது செய்தி உடனுக்குடன் வந்து சேரும்

எங்களது பிற செய்திகளை இங்கு தேடவும்

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Saturday, October 20, 2018

கவிஞர் வைரமுத்து இப்படிப்பட்டவர் தான்… நடிகை குஷ்பு வெளியிட்ட அதிர்ச்சி தகவல்கவிஞர் வைரமுத்து கண்ணியமானவர் என நடிகையும், காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித்தொடர்பாளருமான குஷ்பு தெரிவித்துள்ளார்.


சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியின் போது கவிஞர் வைரமுத்து தன்னை படுக்கைக்கு அழைத்தார் என பரபரப்பான குற்றச்சாட்டை பாடகி சின்மயி முன்வைத்தார். (தொடர்ச்சி கீழே...) 
இதையும் படிக்கலாமே !!!

இதே போல சிந்துஜா ராஜாராம் என்ற பெண்ணும் வைரமுத்து தன்னிடம் தவறாக பேசியதாக கூறினார்.
இது போல சிலர் வைரமுத்து குறித்து பேசினார்கள்.
இதற்கு பதிலளித்த வைரமுத்து, சின்மயி புகாரில் உண்மையிருந்தால் அவர் வழக்கு தொடரட்டும் என கூறினார்.

இந்நிலையில் திரையுலகை சேர்ந்த சிலர் வைரமுத்து – சின்மயி விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ளனர்.
இதனிடையில் வைரமுத்து குறித்து நடிகையும், காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித்தொடர்பாளருமான குஷ்பு பேசியுள்ளார்.
அவர் கூறுகையில், நான் என் வாழ்க்கையில் பார்த்தவர்களில், வைரமுத்து கண்ணியமான மனிதர்களுள் ஒருவர் என கூறியுள்ளார்.

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts

நெருங்கிய தோழியின் தந்தையை திருமணம் செய்துக் கொண்ட இளம்பெண்!இன்னும் சிங்கிளாக இருக்கும் 90ஸ் கிட்ஸ் தயவு செய்து இந்த கட்டுரையை வாசிக்க வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். உங்கள் பிஞ்சு இதயம், இதைப் படித்து வெம்பி போனால் அதற்கு கம்பெனி பொறுப்பாகாது. சரி! மத்தவங்க வாங்க... படிக்கலாம்.... ரியல் எஸ்டேட் ஏஜண்டாக வேலை செய்து வரும் டைலர் லெஹ்மேன் (27) எனும் பெண்மணி, தனது நெருங்கிய தோழியான அமண்டா (30) என்பவரின் தந்தை கெரன் (54) என்பவரை டேட் செய்து காதலித்து திருமணமும் செய்துக் கொண்டிருக்கிறார். ஆரம்பத்தில் கெரனுடன் டேட் செய்த போது கில்டியாக ஃபீல் செய்தேன் என்றும் கூறி இருக்கிறார் டைலர் லெஹ்மேன்.

அரிசோனா!
 அமெரிக்காவின் அரிசோனா மாகணத்தில் அமைந்திருக்கும் ஃபீனிக்ஸ் எனும் நகரில் வசித்து வருகிறார்கள் இந்த தம்பதி. டைலர், கெரன் ஜோடிக்கு நடுவில் இருக்கும் பான்டிங் ஆனது நாளுக்கு நாள் வலிமை பெருகிக் கொண்டே தான் போகிறேது. இந்த வினோத ஜோடியை சுற்றுவட்டாரத்தினர் ஹாலிவுட் நட்ச்திரங்கலான கத்ரீனா ஜீடா ஜோன்ஸ் மற்றும் மைக்கல் டக்லஸ் உடன் ஒப்பிட்டு பேசுகிறார்கள். Image Source and Courtesy: CATERS NEWS AGENCY
(தொடர்ச்சி கீழே...)    
 
இதையும் படிக்கலாமே !!!
எதிர்பார்க்கவில்லை...
 தானும், கெரனும் இப்படியான ஒரு உறவில் இணைந்து திருமண பந்தத்தில் சங்கமிப்போம் என்று ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை என்று வியந்து கூறுகிறார்கள் டைலர் லெஹ்மேன். தங்களுக்கு மத்தியில் இசை, பயணம், கேளிக்கை என பல விஷயங்கள் ஒரே ரசனையில் இருந்தது. அதுதான் எங்களை மிக எளிதாக ஒருவரை ஒருவர் ஈர்ப்புடன் ஒன்றாக சேர்ந்து உலா வர ஊந்து சக்தியாக இருந்தது. இந்த ஒருசேர்ந்த விருப்பங்கள் குறித்து நாங்கள் கண்டறிந்த பிறகே அதிகம் ஒன்றாக சுற்ற ஆரம்பித்தோம் என டைலர் லெஹ்மேன் தெரிவித்திருக்கிறார்.தவறுதலாக...
 ஆரம்பத்தில் டைலர் லெஹ்மேன் - கெரன் தம்பதியை ஒன்றாக பார்த்த பலரும் இவர்கள் தந்தை - மகள் என்று தவறுதலாக நினைத்துள்ளனர். ஆரம்பத்தில் இவர்களது திருமணத்தை அதிர்ச்சியாகவும், ஏற்றுக் கொள்ள முடியாததாகவும் கண்ட குடும்பத்தார், இப்போது இவர்களுக்கு உறுதுணையாக இருந்து வருகிறார்கள்.


முதல் சந்திப்பு...
 நாங்கள் முதல் முறை சந்தித்துக் கொண்ட போது, நான் கெரனின் மகள் அமண்டாவுடன் வேலை செய்து வந்தேன். அவள் எனது நெருங்கிய தோழி. அப்போது கெரன் திருமணமானவர். நானும் வேறொரு உறவில் இருந்து வந்தேன். முதல் முறை சந்தித்த போதே கெரனை ஒரு ஹேண்ட்சமான ஆளாக தான் கண்டேன். எனக்கு பொதுவாகவே வயது அதிகமான ஆண்கள் மீது ஈர்ப்பு உண்டாவதுண்டு. அதே சமயத்தில் கெரனும் என்னை கியூட்டான பெண்ணாக கருதினார். சில சமயம் கேலியாக ஃபிளர்ட் செய்த தருணங்களும் உண்டு.


நட்பு!
 எனக்கும் அமண்டாவுக்கும் இடையிலான நட்பு ஓராண்டு காலத்தை கடந்திருக்கும். அப்போது தான் நாங்கள் டேட் செய்ய துவங்கினோம். ஆரம்பத்தில் கெரனை டேட் செய்த போது எனக்கு கில்டியான ஃபீல் ஏற்பட்டது. நான் தவறென உணர்ந்தேன். ஆனால், எங்கள் இருவருக்கும் மத்தியிலான உறவென்பது அதை எல்லாம் தாண்டிய ஒன்றாக வளர்ந்தது.


அமண்டா!
 அமண்டாவிற்காக, அவள் வாழ்வில் என்ன பிரச்சனை நடந்தாலும் அவளுக்காக நான் அங்கே வந்து நிற்பேன் என்பதை அமண்டா அரிவாள். கெரன் மற்றும் எனக்கு மத்தியில் இருக்கும் உறவை முதலில் என் பெற்றோர் வருத்தத்துடன் கண்டித்தனர். அம்மா, நான் ஏதோ மோசமான முடிவை எடுத்திருப்பதாக கருதினார். முக்கியமாக நான் தோழியின் தந்தையுடன் டேட் செய்வது அவருக்கு வருத்தம் அளித்தது.


காயம்!
 காலங்கள் அவர்கள் மனதில் ஏற்பட்ட காயத்திற்கு மருந்தளிக்கும் என்று நான் மனதார நம்பினேன். காலம் கடந்தது, என் அம்மா, சின்னம்மா (Step Mother) மற்றும் அப்பா எங்களை நேரில் வந்து சந்தித்தனர். இப்போது எல்லாம் நார்மலாகிவிட்டது.


ஸ்மார்ட்! 
 கெரன் ஹேண்ட்சம், அழகானவர் என்பதை தாண்டி, அவர் அறிவாளி, ஸ்மார்ட் மற்றும் வெற்றியாளர். ஒரு விஷயத்தை எப்படி செய்ய வேண்டும், எப்படி கையாள வேண்டும் என்று அறிந்த வல்லவர், என்று பெருமிதத்துடன் கூறுகிறார் டைலர் லெஹ்மேன். முதல் முறையாக கெரனுடன் வெளியே சென்ற போது நான் பாதுகாப்பின்மையாக தான் உணர்ந்தேன். எல்லாரும் என்னையே உத்து கவனித்துக் கொண்டிருப்பது போல கருதினேன். ஒருவேளை நாங்கள் குட்-லுக் ட்ரெஸ்ஸில் இருப்பதால் அனைவரும் எங்களையே பார்க்கிறார்கள் என்றும் கருதினேன்.


திருமணம்!
 கடந்த வருடம் தான் கெரன் - டைலர் ஜோடி நிச்சயம் செய்து, மெக்ஸிகோவில் திருமணம் முடித்தனர். எங்கள் உறவு திருமணத்தில் முடியும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. ஒருவொரு உணர்வெழுச்சி என்றே கருதினேன். ஆனால், எங்கள் இருவருக்கு மத்தியில் இருந்து ஒருசேர்ந்த விருப்பங்கள், எங்களை ஒன்றிணைத்துள்ளது. நான் கெரனை மிகவும் விரும்புகிறேன். அவருக்கும் என் மீது மிகுதியான ஈர்ப்பு இருக்கிறது. கேளிக்கை, அவுட் கோயிங், பார்ட்டி என கெரன் ஒரு சார்மிங் பர்சன். நான் நிச்சயம் இதற்காக கெரனை பாராட்டுவேன். இப்போது ஜோடியாக, திருமணமானவர்களாக ஒன்றாக வெளியே செல்வதை நான் பாதுகாப்பாக உணர்கிறேன் என டைலர் கூருயுலாளர்.


குழப்பம்! 
சில சமயம் இந்த ஜோடி வெளியிடங்களுக்கு, வெளியூர்களுக்கு எங்கேனும் பிக்னிக் ட்ரிப் சென்றால், சிலர் இவர்களை தந்தை - மகளென நினைத்து ஏமார்ந்துவிடுகிறார்கள். சிலர் ஹோட்டல் ரூம் புக்கிங் செய்யும் போது, மிஸ்டர் அண்ட் மிஸ்ஸர்ஸ் என்று குறிப்பிடும் போது குழம்பி போயிருக்கிறார்கள் என சிரித்துக் கொண்டே தங்கள் அனுபவங்களை பகிர்கிறார்கள் இந்த வினோத ஜோடி. வரும் மே மாதம் இந்த ஜோடி தங்கள் இரண்டாவது திருமண நாளை கொண்டாட மகிழ்ச்சியுடன் காத்திருக்கிறது.


அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


மோடியை கடவுளாக வழிபடும் மக்கள் - பிரதமர் சிலையை கோயிலுக்குள் வைத்து சாமியாக வழிபடும் கிராமம்ஆதரவோ எதிர்ப்போ... அது எதுவாக இருந்தாலும் சரி... அரசியல் அசுர வளர்ச்சியில் மோடியை ஒதுக்கி விட முடியாது. டீ கடையில் வேலை பார்த்த சாதாரண சிறுவன் இன்று பிரதமர் ஆகிவிட்டதை கண்டு நாடே வியந்தது. 
 நம்மை ஆண்ட பல பிரதமர்களுக்கு நாம் பல பட்டப் பெயர்களை சொல்லி அன்பாக அழைத்திருக்கிறோம். ஆனால் மோடி இதிலும் சற்று வித்தியாசப்பட்டே நிற்கிறார். அதாவது எந்த அளவுக்கு என்றால், மனிதரில் இருந்து கடவுள் ஸ்தானத்துக்கே உயர்ந்துவிட்டார். ஆம்... மோடியை கடவுளாக வணங்குகிறார்களாம் ஒரு கிராம மக்கள். (தொடர்ச்சி கீழே...)    
 
இதையும் படிக்கலாமே !!!
காந்திக்கு கோயில்
 லட்சக்கணக்கான சிலைகள் மகாத்மா காந்திக்கு இருந்தாலும், ஒரே ஒரு கோயில்கூட இதுவரை நாட்டில் இல்லை. அதனால் மகாத்மா காந்திக்கு விஜயவாடாவில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கோயில் கட்டினார். அதேபோல நம் ஈரோடு மாவட்டம் செந்தாம்பாளையம் கிராமத்தில் தேசப்பிதா மகாத்மா காந்திக்கு கோ‌யில் கட்டி உள்ளனர். இந்த கோ‌யிலில் மகாத்மா காந்தி மற்றும் அவரது மனைவி கஸ்தூரிபாய் ஆகியோர் சிலை வைக்கப்பட்டுள்ளது.


தேங்கிய குளம், குட்டைகள் 
இந்நிலையில் பீஹார் மாநிலம் பாட்னாவில் கட்டிஹார் என்ற கிராமத்தில்தான் மோடியை வழிபடுகிறார்கள் மக்கள். அப்படி ஒன்றும் சொல்லிக் கொள்ளும் வளர்ச்சி இல்லாத கிராமம்தான் இந்த கட்டிஹார். சரியான ரோடு கிடையாது, கழிப்பிட வசதி கிடையாது, மழை பெய்தால் சொல்லவே தேவையில்லை. எங்க பார்த்தாலும் தேங்கிய குளம், குட்டைகள் என்றே இருக்கும்.


மின்சார வசதி
 ஆனாலும் இதையெல்லாம் அந்த கிராம மக்கள் ஒரு பிரச்சனையாகவே எடுத்து கொள்ளவில்லை. அதற்கு முக்கிய காரணம், கரண்ட்டே இல்லாத இந்த கிராமத்துக்கு இப்போது கரண்ட் இருக்கிறதாம். எப்போதுமே மின்சார வசதியை ஏற்படுத்தியது மோடி அரசு என்பதால் அவரை வெறும் பிரதமராக பார்க்க மனசில்லையாம் இந்த கிராம மக்களுக்கு.


குர்தா, கண்ணாடி
 அதனால் கடவுளாகவே அதாவது வளர்ச்சியின் கடவுளாகவே பார்க்கப்படுகிறார். அதனால்தான் அவரை வழிபடுகின்றனர் கட்டிஹார் கிராம மக்கள். இங்குள்ள ஹனுமர் கோயிலுக்குள் மோடியின் சிலை வைக்கப்பட்டுள்ளது. வழக்கமாக மோடி அணியும் குர்தா, கண்ணாடி என்று அந்த சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.


மோடி போல இல்லை
 இந்த மோடி சிலைக்குதான் வழிபாடு நடக்கிறது. இப்படி வழிபாடு தொடர்ந்து நடத்தினால் வளர்ச்சி கடவுள் மோடி தங்களுக்கு இன்னும் நிறைய வளர்ச்சி திட்டங்களை அமல்படுத்துவார் என்றும் கிராம மக்கள் நம்புகின்றனர். மோடியின் கடவுள் சிலைதான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆனாலும் இந்த சிலை பார்ப்பதற்கு கொஞ்சம்கூட மோடி போல இல்லை என்றும் கருத்துக்கள் பதிவாகி வருகின்றன.

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


தந்தையால் வெட்டப்பட்ட பெண் - சாதி வெறியால் நடந்த கொடுமைதெலுங்கானாவில் செப்டம்பர் மாதம் பட்டப்பகலில் ஹைதராபாத் எரகடா மெயில் ரோடில் தலித் பிரிவு வாலிபரைக் காதலித்துத் திருமணம் செய்த தன் மகள் மாதவியையும் மணமகன் சந்தீப்பையும் தாக்கிய பெண்ணின் தந்தை விவகாரத்தில், ‘என்னைப் பொறுத்தவரை என் தந்தை இறந்து விட்டார்’ என்று மாதவி பேட்டியளித்துள்ளார்.


ஹைதராபாத்தைச் சேர்ந்த நரசிம்மாச்சாரி. இவரின் மகள் மாதவி. இவர்கள் உயர்ந்த வகுப்பைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்படுகிறது. மாதவியும், அப்பகுதியைச் சேர்ந்த வேற்று சாதியைச் சேர்ந்த சந்தீப்பும், மாதவியும் கடந்த 5 ஆண்டுகளாக ஒன்றாகப் பழகி வந்துள்ளனர். கல்லூரியிலும் ஒன்றாகப் படித்துள்ளனர். (தொடர்ச்சி கீழே...) 
இதையும் படிக்கலாமே !!!

இந்நிலையில், இவர்கள் இருவரும் காதலித்து வந்தது மாதவியின் தந்தை மனோஹர் சாரிக்குப் பிடிக்கவில்லை. இவரின் எதிர்ப்பை மீறி கடந்த செப்டம்பரில் சந்தீப்பும், மாதவியும் கோயிலில் திருமணம் செய்து கொண்டனர்.


இதனால், மிகுந்த ஆத்திரத்திலும், கோபத்திலும் தந்தை சாரி இருந்து வந்தார். இந்நிலையில், ஹைதாரபாத்தில் உள்ள சாந்தாநகர் பகுதிக்குத் தனது மகள் மாதவியையும், மருமகன்சந்தீப்பையும் சாரி வரக்கூறினார்.
தந்தையின் வார்த்தையை நம்பி தனது கணவரை அழைத்துக் கொண்டு மாதவி சென்றார். தனது தந்தையைப் பார்த்ததும் ஆசையுடன் மாதவி சென்றார். ஆனால், திடீரென சாரி தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் தனது மருமகன் சந்தீப்பை வெட்டினார், இதில் ரத்த வெள்ளத்தில் சந்தீப் சாய்ந்தார். இதைத் தடுக்க வந்த தனது மகள் மாதவியையும் அவரின் தந்தை வெட்டிச்சாய்த்தார்.
இருவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் ஓடிவந்ததும், அங்கிருந்து நரசிம்மாச்சாரி தப்பி ஓடினார். இதையடுத்து போலீசுக்கு தகவல் கொடுத்து அப்பகுதி மக்கள், ரத்த வெள்ளத்தில் கிடந்த மாதவி, சந்தீப் இருவரையும் அம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


மாதவியையும், சந்தீப்பையும் புத்தாடைகள் எடுத்துக் கொடுப்பதாகக் கூறி ஒரு இடத்துக்கு வரக்கூறியுள்ளார். அதை நம்பி சென்றபோது, இருவரையும் கொலை செய்ய முயன்றுள்ளார் எனத் தெரிவித்தனர்.
இந்நிலையில் சக்கர நாற்காலியிலிருந்து எழுந்து நின்ற மாதவி தைரியமாக ஊடகங்களைச் சந்தித்த போது, “என் தந்தை என்னைப் பொறுத்தவரை இறந்து விட்டார்.
திருமணத்துக்கு முன் என் கல்விச்சான்றிதழ், துணிமணிகள் என்று எதையும் நான் எடுத்துக் கொள்ளவில்லை. அப்போதுதான் அப்பா என்னை அழைத்து அவற்றயெல்லாம் தருகிறேன் வா என்றார்.
எனக்கு என் தந்தை மீது நம்பிக்கை இல்லை. நான் முன்னமேயே காதல் பற்றி கூறியிருந்தாலும் அவர் என் உணர்வுகளைப் புரிந்து கொண்டு மதிப்பளிக்கக் கூடியவர் அல்ல” என்றார்.


கணவர் சந்தீப்பும், “சாரி தண்டிக்கப்படவில்லை எனில் அவர் எங்களை மீண்டும் தாக்குவார், நான் மாதவியுடன் அமைதியாக வாழ விரும்புகிறேன்” என்றார்.
மேலும் மாதவியின் அம்மா தன் மகளை தந்தை மீது சட்ட நடவடிக்கை வேண்டாம் என்று வலியுறுத்தி வருவதாகவும் ஆனால் மாதவி அதனை ஏற்றுக் கொள்ளவில்லை என்றும் சந்தீப் தெரிவித்தார்.
இருவரும் பொறுப்பு முதல்வர் சந்திரசேகர ராவ், முன்னாள் எம்.எல்.ஏ டி. ஸ்ரீநிவாஸ் யாதவ் ஆகியோர் இருவருக்கும் நன்றி தெரிவித்தனர்.அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts

 

Featured Post

ரத்தம் சொட்ட சொட்ட.. மனைவியின் தலையுடன் தெருவில் நடந்து சென்ற இளைஞர்..

பட்டபகலில் மனைவியின் தலையை வெட்டி, ரத்தம் சொட்ட சொட்ட.. கையில் வைத்து கொண்டு தெருவில் நடந்து சென்ற இளைஞரை கண்டு பொதுமக்கள் அலறி அடி...

நமது சேனலில் வீடியோக்களை காண்க

சமூக சீரழிவு செய்திகள்