வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: 2018-10-28
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Thursday, November 08, 2018

அடப் பாவத்த! இது எதுக்குன்னு உங்களுக்கு இத்தன நாளா தெரியாத...?!


கற்றது கையளவு, கல்லாதது கடலளவு, கற்றது கைமண் அளவு, கல்லாதது உலகளவுன்னு நாம தெரிஞ்சிக்கிட்ட விஷயம் கொஞ்சம் தான், நமக்கு தெரியாத விஷயம் பலவன இருக்குன்னு எல்லா உலக மொழிகள்லயும் சொல்லி இருக்காங்க. கற்றது கையளவுன்னு எடுத்துக்கலாம்... எவ்வளோ பெரிய ஜீனியஸா இருந்தாலும் யாராலையும் எல்லாத்தையும் தெரிஞ்சு வெச்சுக்க முடியாதுங்கிறது தான் உண்மை. ஆனா, தினமும் நாம கையாளர விஷயங்கள் கூட முழுசா தெரிஞ்சுக்காட்டி அது தவறு தானே.


ஆமா! தினமும் நாம கால்ல மாட்டிகிறது ஷூன்னு தெரியும். ஆனா, ஷூ லே முனையில இருக்க அந்த பிளாஸ்டிக் பொருளோட உண்மையான பெயர் என்னென்னு உங்களுக்கு தெரியுமா? தினமும் ஸ்டைலா ஷர்ட் போட்டுட்டு போவீங்க. ஆனா, பேக் ஷோல்டர் பகுதியில ஒரு சின்ன ஹூக் மாதிரியான ஓட்டை இருக்கும். அது என்னன்னு உங்களுக்கு தெரியுமா? இப்படி நாம தினமும் பார்க்குற, பயன்படுத்துற பொருட்கள்ல இருக்க சின்ன, சின்ன பாகங்களோட உண்மையான பெயர் என்னனு தான் இந்த தொகுப்புல பார்க்க போறோம்... வாங்க தெரிஞ்சுக்கலாம்... (தொடர்ச்சி கீழே...)

இதையும் படிக்கலாமே !!!

நோஸ் பேட் (Nose Pad) 
 கண் பார்வை குறைப்பாடு இருக்கவங்க தான் கண்ணாடி போடுவாங்கன்னு இல்ல. ஸ்டைலுக்கு போடுறவங்க, பைக் ஓட்டும் போது போடுறவங்கனு நிறையா பேர் கண்ணாடு போடுவோம். மூக்குல உட்கார / மூக்கு வலிக்காம இருக்க இந்த சின்ன ரப்பர் பகுதியோட பெயர் தான் நோஸ் பேட்.


புல் லூப்ஸ் (Pull Loops)
 ஃபார்மல் ஷூல இத நாம பார்க்க முடியாது. ஆனா, ரன்னிங் ஷூ, அத்லெட் ஷூல எல்லாம் இத நாம சகஜமா பார்க்க முடியும். ஷூவோட பின் பகுதி முனையில இது இருக்கும். இதோட பேர் புல் லூப்ஸ். அதாவது ஷூவ மாட்டி, இழுக்க பயன்படுற சின்ன பாகம்.

ப்லோம் பண்டில்ஸ் (Phloem Bundles)
 வாழைப்பழம் சாப்பிடாத ஆளே இருக்க முடியாது. வாழைப் பழத்துல தோல் பகுதிய நீக்கிட்டாலும், அதோட உடல் பகுதியில தோல் மாதிரியான நூல் பகுதி ஓட்டி இருக்கும். சிலர் அதையும் சேர்த்து சாப்பிடுவாங்க. சிலர் அதையும் உரிச்சு வீசிடுவாங்க. இதோட பெயர் தான் ப்லோம் பண்டில்ஸ்.


புண்ட் (Punt)
 ஒயின் குடிக்காட்டியும், அந்த பாட்டிலாவது நீங்க பார்த்திருக்க வாய்ப்பு இருக்கு. அதோட அடி பாகத்துல சின்னதா புடைப்பு மாதிரி ஒரு பகுதி இருக்கும். அதோட பெயர் தான் புண்ட். இது, பாட்டில விழாம, நேரா நிக்க உதவுதாம்.

அஜ்லெட்ஸ் (Aglets)
 ஷூவோட பின் பகுதியில இருக்க புல் லூப் பத்தி முன்னாடி பார்த்தோம். இது நாம, ஷூ கட்டுற லெஸ் பகுதியில நுனியில இருக்க பகுதி. பெரும்பாலும், இதப்பத்தி நாம எதுவும் யோசிச்சிருக்கவே மாட்டோம். ஷூ லேஸ் அவிழாம இருக்கவும், டேமேஜ் ஆகாம இருக்கவும் உதவுற இந்த பகுதி பெயர் அஜ்லெட்ஸ்.



டிராப் கேட்சர் (Drop Catcher)
 ஒயின் பாட்டிலோட அடிபாகம் புண்ட் பத்தி முன்னாடி தெரிஞ்சுக்கிட்டோம். இது, ஒயின் ஊத்தி குடிக்கிற கிளாஸ் பத்தின விஷயம். ஆனா, ஒயின் கிளாஸ் வடிவோம் மட்டும் கொஞ்சம் வித்தியாசமா இருக்கும். நீளமான ஸ்டெம் மாதிரியான பகுதி அதுல இருக்கும். இந்த ஸ்டெம் பகுதிய தான் டிராப் கேட்சர்னு சொல்றாங்க.
 
ஃபெர்ரூல் (Ferrule)
 கண்டிப்பா சின்ன வயசுல இந்த ரப்பர் வெச்ச பென்ஸில் உபயோகப் படுத்தி இருப்பீங்க. கூடவே, அந்த மெட்டல் மாதிரியான பகுதிய கடிச்சு, மென்னு விளையாடியும் இருப்பீங்க. ஆமாங்க! அந்த மெட்டல் பகுதியோட பெயர் தான் ஃபெர்ரூல் .

லாக்கர் லூப்! 
பெரும்பாலான கேசுவல் சர்ட்ல நீங்க பின்னாடி ஷோல்டர் பகுதியில ஒரு சின்ன ஓட்டை மாதிரியான பாகத்த பார்க்க முடியும். அதுக்கு பேரு தான் லாக்கர் லூப். ஹோட்டல், மற்றும் சில துணி வைக்கிற அலமாரியில ஒரு ஹூக் மாதிரி செட் பண்ணி இருப்பாங்க. அதுல இத நாம தொங்கவிடலாம். இதனால ஷர்ட் ஈஸியா கசந்காது.

க்ரோன் (Crown) 
 கடிகாரத்துல இந்த பாகத்த அறியாத நபரே இல்ல. சரியா ஓடாட்டி, இதப்பிடிச்சு ஹோம்வர்க் பண்ணாத ஸ்கூல் பையன் காத திருகுற மாதிரி திருகுவோம். இதோட பெயர் தான் க்ரோன். இனிமேலாவது தெரிஞ்சு வெச்சிகுங்க.


டீத் (Teeth)
 பேண்ட்ல ஜிப் இருக்குன்னு எல்லாருக்கும் தெரியும். ஆனா, ரெண்டு பக்கம் தண்டவாளம் மாதிரி பிரிஞ்சிருக்கத செர்க்குற அந்த சின்ன மெட்டல் பகுதி இருக்கே அதோட பெயர் என்ன தெரியுமா? அதான் டீத். இதுல சிக்கி வலி தாங்கமா கதறுன மக்கள் நிறையா பேர் இருப்பாங்க.

க்லா & ஃபேஸ்! 
பொதுவா சுத்தியல்னு சொல்லிடுவோம். ஆனா, அதுல இருக்க சின்ன, சின்ன பாகங்களுக்கு தனித்தனி பெயர் இருக்கு. ஆணி அடிக்க உதவுற தட்டையான பகுதி ஃபேஸ். ஆணிய புடுங்க உதவுற பல்லு மாதரியான பகுதி பெயர் க்லா.

மியூஸ்லெட் (Muselet)
 சாம்பெயின் பாட்டில் எல்லாருக்கும் தெரியும். கார் ரேஸ்ல இருந்து, உலக கோப்பை பொட்டுகள் வரை ஜெயிக்கிற டீம் இத பீச்சி அடிச்சு தான் வெற்றிய கொண்டாடுவாங்க. இந்த பாட்டிலோட தலை பகுதியில கார்க் இருக்கும்னு நமக்கு தெரியும். ஆனா, அந்த கார்க் பிரஷர் குறையாம இருக்க, இறுக்கமா பிடிச்சிருக்க உதவும் ஒயர் மாதிரியான பிடிமானம் இருக்கும். அதோட பெயர் தான் மியூஸ்லெட்!


க்ளட்ச் (Clutch)
 கம்மல், கடுக்கன் மாட்டும் போது, திருகாணி போட்டு மாட்டுவோம். ஆனா, அதே சமயத்துல அதுக்கு நடுவுல லூசாகம இருக்க (அ) கழண்டு போகாம டைட்டா இருக்க ஒரு தடுப்பான் மாதிரி மாட்டுவாங்க. அத இங்க்லீஷ்ல க்ளட்ச்னு சொல்றாங்க.


அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts

பசிக்காமல் இருப்பதற்கான காரணங்கள்


இரவில் அதிகமாகச் சாப்பிடுவதாலும், நேரம் கழித்து சாப்பிடுவதாலும், துரித உணவுகளைச் சாப்பிடுவதாலும் காலையில் பசி உணர்வு குறைவாகவே இருக்கும். 

முந்தைய தலைமுறையிலும், இன்றைய கிராமப்புறங்களிலும் இரவு 8 மணிக்குச் சாப்பிட்டு, 9 மணிக்குத் தூங்கி, காலை 5-6 மணிக்குள் எழுவதை வழக்கமாக வைத்திருப்பார்கள். அவர்களுக்கு நன்றாகப் பசிக்கும். சரியாகச் சாப்பிடுவார்கள். ஆரோக்கியமாக இருப்பார்கள். இன்றைக்கு செல்போனும் சோசியல் மீடியாக்களும் பலரது சாப்பாடு, தூக்கத்தை மறக்கச் செய்துவிட்டன. (தொடர்ச்சி கீழே...)

இதையும் படிக்கலாமே !!!

இரவுச் சாப்பாடு 10 மணிக்கு, இரவுத் தூக்கம் 12 மணிக்கு, காலை எழுவது 8 மணிக்கு என்ற அட்டவணையைப் பின்பற்றுகின்றனர். இதனால் காலையில் நேரமில்லை எனச் சொல்லி, சாப்பிடாமலே செல்வார்கள். இதைத் தொடர்ந்து மதிய உணவு, இரவு உணவு சாப்பிடும் நேரமும் அளவும் மாறுபடும்.



இரவில் அதிகமாகச் சாப்பிடுவதாலும், நேரம் கழித்து சாப்பிடுவதாலும், துரித உணவுகளைச் சாப்பிடுவதாலும் காலையில் பசி உணர்வு குறைவாகவே இருக்கும். பசி உணர்வே இல்லாமல் போகவும் வாய்ப்பிருக்கிறது. குறிப்பாக துரித உணவுகளில் இருக்கும் மைதா, சீஸ், சமையல் சோடா போன்றவை செரிமானம் ஆக அதிக நேரம் எடுத்துக்கொள்வதோடு, உடலுக்கு அதிக கலோரியைக் கொடுத்து, பசியை அடக்கி, நீண்ட நேரத்துக்குப் பசிஉணர்வே ஏற்படாமல் செய்யும்.


இதுபோன்ற உணவுகளை மதியம் சாப்பிட்டால், இரவில் பசி உணர்வு பாதிக்கும். அலுவலகத்தில் வேலை செய்யும் பலர் பெரும்பாலும் உடல் உழைப்பைக் கொடுக்காததால், துரித உணவுகள் கொழுப்பாக மாறி, பருமன் அதிகமாகக் காரணமாகிறது. தொடர்ந்து இரண்டு நாட்கள் காலை உணவு சாப்பிடாமல் இருந்தால், மூன்றாவது நாள் இயல்பாகவே பசி எடுக்காது.


‘பசி இல்லை’ என்பார்கள். பசி ஏற்படாததற்கும் நாம்தான் காரணம் என்பதையும் மறக்கிறோம். பசி இல்லாவிட்டாலும், இரண்டு நாட்களுக்கு காலையில் கொஞ்சமாவது சாப்பிட்டுப் பாருங்கள். அடுத்த நாள் ஆட்டோமேட்டிக்காக பசி எடுக்கும்!


அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


தற்கொலை எண்ணத்தில் இருந்து விடுபடுவது எப்படி?


தனிமையே தற்கொலைக்கு முதல் ஆயுதம் என்று கூறலாம். எனவே மனதளவில் பாதிப்பு ஏற்படும்போது தனிமை தற்கொலைக்கு இழுத்து செல்ல வாய்ப்புகள் அதிகம்.


 தற்கொலை செய்யும் எண்ணம் ஏன் உருவாகிறது? தற்கொலையில் இருந்து விடுபடுவது எப்படி? என்பது குறித்து தேனி மாவட்ட மனநல டாக்டர் ராஜேஷ் கூறியதாவது:- (தொடர்ச்சி கீழே...)

இதையும் படிக்கலாமே !!!

எந்த பிரச்சினைக்கும் தற்கொலை தீர்வாகாது என்ற எண்ணம் ஒவ்வொருவரின் மனதிலும் ஆழமாய் பதிய வைக்கப்பட வேண்டும். தற்கொலைக்கான உளவியல் காரணங்கள் சில உள்ளன. அதன் முதன் நிலையானது கொலை செய்ய விரும்புவது. 2-வதாக கொலை செய்யப்படுவதை விரும்புவது. 3-வதாக தன்னையே கொலை செய்து கொள்வது. ஒருவர் மீது ஏற்படும் வெறுப்பில் அவரை அழிக்க வேண்டும் என்ற எண்ணம் வலுப்பெறும் போது கொலையாக மாறுகிறது. அல்லது, நம்மால் என்ன செய்து விட முடியும் என்ற எண்ணத்தில் தற்கொலையை தேடிக் கொள்கின்றனர்.



எந்த ஒரு பிரச்சினைக்கும் தீர்வு உள்ளது. அந்த தீர்வை நோக்கி மனிதர்கள் தங்களின் மனதை கொண்டு செல்வது கிடையாது. சில பெரிய தலையீடுகள் தற்கொலையை பெருமளவு தடுத்துள்ளன. உதாரணமாக பூச்சிக்கொல்லிகள், விஷம் எளிதில் கிடைப்பதை தடுத்தல், தற்கொலை முயற்சி செய்தவர்களுக்கு சரியான நேரத்தில் உரிய மருத்துவ சிகிச்சை கிடைக்க செய்தல், குழப்பத்தில் உள்ளவர்களுக்கு மருத்துவ நிபுணர்களின் ஆலோசனை கிடைக்க செய்தல் போன்றவற்றால் தற்கொலை மற்றும் அதனால் உயிரிழப்புகள் ஏற்படுவதை தவிர்க்க முடியும்.


தற்கொலை எண்ணம் கொண்டோருடன் பேசி அதனைத் தடுக்கக்கூடிய உதவித் தொலைபேசி எண்களை உருவாக்குதல், தற்கொலை சார்ந்த நடவடிக்கைகளை முன்கூட்டியே கண்டறிதல், நேர மேலாண்மை போன்றவற்றையும் குறிப்பிடலாம். தற்கொலையை முன்கூட்டியே கண்டறிவதற்காக கல்வி நிறுவனங்கள், பணியிடங்கள், பொதுஇடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தலாம்.


தனிமையே தற்கொலைக்கு முதல் ஆயுதம் என்று கூறலாம். எனவே மனதளவில் பாதிப்பு ஏற்படும்போது தனிமை தற்கொலைக்கு இழுத்து செல்ல வாய்ப்புகள் அதிகம். கூடுமானவரை தனிமையை தவிர்த்தல் நல்லது. தற்கொலை தடுப்புக் கொள்கைகள், திட்டங்களை அமல்படுத்தி, அத்துடன் பொதுமக்களின் பங்கேற்பை சேர்க்கும்போது, சிரமமான சூழ்நிலைகளில் தங்கள் வாழ்க்கையை முடித்துக்கொண்டுவிடலாம் என்று மக்கள் எண்ணுகிற போக்கை தலைகீழாக மாற்றலாம், தற்கொலைகளின் எண்ணிக்கையை குறைக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.  
 

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


மன வலிமையை அதிகரிக்கும் ஸோஹம் தியானம்


ஸோஹம் தியானத்தை தொடர்ந்து செய்து வந்தால் சக்கரங்களின் ஆற்றல் அதிகரிக்கும். மன வலிமை கூடும். நினைத்த காரியத்தை செய்து முடிக்கும் ஆற்றல் உண்டாகும். யோகிகளாலும், சித்தர்களாலும், ஞானிகளாலும் யோகம் மற்றும் வேதாந்தமான உபநிஷத்துக்களில் புகழ்ந்து கூறப்பட்டுள்ள ஒரு பயிற்சியாக ஸோஹம் தியானம் உள்ளது.



ஒரு மனிதன் தனது சிறைவடிவான ஆன்மாவை அறிய ஸோஹம் தியானத்திற்கு ஒப்பான ஒரு உபாசனையோ, ஜபமோ இல்லை என்று தியான பிந்து உபநிஷத்து கூறுகிறது. முக்தி அடைய யோகிகளுக்கு ஸோஹம் தியானம் ஒரு பொக்கிஷம் போல் உள்ளது என்று ஹம்ஸோப நிஷத்து கூறுகிறது. (தொடர்ச்சி கீழே...)

இதையும் படிக்கலாமே !!!
சரபோக நூல்களான சிவ ஸ்வரோதயா மற்றும் ஞான சர நூலிலும் சரயோக சாற்கள் ஜீவன் முக்தி நிலையை அடைய ஸோஹம் தியானப் பயிற்சியை கூறி உள்ளது.

பெயர் விளக்கம் :- மூச்சின் இயக்கத்தில் இயற்கையாகவே இருக்கும் ஹம்ஸோ என்ற சூட்சும நாதத்தை ஸோஹம் என்று மாற்றி ஜப தியானம் செய்வதால் ஸோவும் தியானம் என்று இப்பயிற்சி அழைக்கப்படுகிறது.


செய்முறை-1 :- அனுகூலமான தியான ஆசனத்தில் அமரவும். முழங்கால் முட்டிகளின் மேல் இரண்டு கை விரல்களால் சின்முத்திரை செய்யவும். கண்களால் சாம்பவி (கண்களால் புருவ நடுவை பார்க்கவும்) அல்லது அகோசரி (கண்களால் மூக்கு நுனியை பார்க்கவும்) செய்யவும். உடல் முழுவதையும் தளர்வாக வைத்துக் கொள்ளவும். சுவாச இயக்கத்தில் மூச்சுக் காற்று உள்ளே செல்வதை அமைதியாக ஒரு நிமிடம் கவனிக்கவும்.


இப்போது மூச்சுக்காற்றோடு ஸோ என்ற நாதத்தை (ஓசையை) மனதால் ஜபித்துக் கொண்டு ஆக்ஞா சக்கரத்திலிருந்து மூலாதார சக்கரம் வரை கவனம் செலுத்த வேண்டும். மூச்சுக் காற்றை வெளியே விடும்போது மூச்சுக் காற்றோடு ஹம் என்ற நாதத்தை ஜபித்துக் கொண்டு மூலாதாரத்திலிருந்து அக்ஞா சக்கரம் வரை கவனம் செலுத்த வேண்டும்.  ஒரு சங்கிலித் தொடர் போல், உள் மூச்சில் உடலின் முன் பக்கத்தில் புருவ நடுவில் உள்ள ஆக்ஞாவி லிருந்து மூலாதாரம் வரை கவனம் செலுத்தி தொடர்ந்து வெளிமூச்சின் போது மூலாதாரத்திலிருந்து உடலின் பின் பக்கத்தில் முதுகின் வழியாக புருவ நடுவுக்கு நேராக உள்ள தலையின் பின் பகுதி வரை கவனம் செலுத்தவும்.


இப்பயிற்சியின் போது பிராணாயாம பயிற்சி போல மூச்சுக் காற்றை ஆழமாக உள்ளுக்கு இழுக்கவோ வெளியே விடவோ கூடாது. மூச்சின் இயக்கம் இயற்கையாக இருக்க வேண்டும்.  உங்கள் மூச்சுடன் உங்கள் உணர்வும் இணைந்து ஸோ-ஹம் என்ற நாதத்தை உண்டு பண்ண வேண்டும். அதே சமயம் சக்கரங்களை ஒன்றன்பின் ஒன்றாக தொடர்ந்து நினைக்க வேண்டும். வேகமில்லாமல் அமைதியாக எந்த அளவிற்கு மூச்சுடன் லோ-ஹம் என்ற ஆசையை முழு விழிப்புணர்வோடு உண்டு பண்ணுகிறீர்களோ, அந்த அளவிற்கு விரைவில் புலன் வழி செல்லும் புற உலக உணர்வு குறையும். நீண்ட நேரம் தியானம் செய்தாலும் சில நிமிடமே கழிந்தது போல இருக்கும்.


செய்முறை-2 :- அனுகூலமான தியான ஆசனத்தில் அமரவும். முழங்கால் முட்டிகளின் மேல் கைவிரல்களால் சின்முத்திரை செய்யவும். கண்களால் அல்லது அகோசரி முத்திரை செய்யவும். உடல் முழுவதையும் தளர்வாக வைத்துக் கொள்ளவும். சுவாச இயக்கத்தில் முச்சுக்காற்று உள்ளே செல்வதையும் வெளியே வருவதையும் அமைதியாக ஒரு நிமிடம் கவனிக்கவும்.


இப்போது மூலாதார சக்கரத்திலிருந்து அக்ஞா சக்கரம் வரை உடலின் முன் பக்கதத்திலிருந்து கவனம் செலுத்திக் கொண்டு வந்து ஆக்ஞாவிலிருந்து தலையின் பின் பகுதி வழியாக முதுகெலும்பின் கீழ் உள்ள மூலாதார சக்கரம் வரை கவனம் செலுத்த வேண்டும். மூலாதாரத்திலிருந்து ஆக்ஞா வரை கவனம் செலுத்தும் போது மூலா என்ற ஒன்று மேல் நோக்கி செல்வதாகவும், ஆக்ஞாவிலிருந்து மூலாதாரம் வரை கவனம் செலுத்தும் போது ஹம் என்ற ஓசை கீழ் நேக்கி செல்வதாக மனதால் நினைக்க வேண்டும். அப்படி நினைக்கும் போது  மூலாதாரத்தில் இருந்து ஆக்ஞா, ஆக்ஞாவிலிருந்து மூலாதாரம் வரை மீண்டும் மீண்டும் உங்கள் உணர்வு சக்கரங்கள் உள்ள உடல் பகுதியின் மீது மட்டுமே இருக்க வேண்டும். சுவாச இயக்கத்தின் மீது கவனம் செலுத்தக் கூடாது.


செய்முறை 1ல் மூச்சுக் காற்றோடு இலோ-ஹம் என்ற ஒலியை உண்டாக்கிச் செய்யும் லோவும் தியானமுறை கூறப்பட்டது. செய்முறை 2-ல் மூச்சுக் காற்றோடு இணைந்து லோ-ஹம் மந்திரத்தை தியானிக்காமல் சக்கரங்களை மட்டும் நினைத்து லோ-ஹம் தியானத்தை செய்யும்படி கூறப்பட்டுள்ளது.


பயிற்சி குறிப்பு : இந்த பயிற்சியை தினமும் காலை, மாலை இரண்டு வேளையும் செய்ய முடியாதவர்கள் செய்முறை பயிற்சி-1ஐ யோ அல்லது செய்முறை பயிற்சி 2ஐ யோ ஒரு நாளில் ஒருவேளை பயிற்சி செய்யலாம். இரண்டு தியான முறைகளையும் செய்ய முடியாதவர்கள் தொடர்ந்து ஒரு தியான முறையை கடைப்பிடிக்கலாம்.  இந்த பயிற்சியை வெறும் வயிற்றோடு இருக்கும் போது எப்போது வேண்டுமானாலும் செய்யலாம். உணவு உட்கொண்ட பிறகு 4 மணி நேரம் கழித்து இந்த தியான பயிற்சியை செய்யலாம். காலை சூரிய உதயத்திற்கு முன்பும், மாலை சூரிய அஸ்தமனத்தின் போதும் இந்த தியான பயிற்சியை செய்வது சிறந்தது.


பலன்கள் : சக்கரங்களின் ஆற்றல் அதிகரிக்கும். மன வலிமை கூடும். நினைத்த காரியத்தை செய்து முடிக்கும் ஆற்றல் உண்டாகும். மன அழுத்தம் நீங்குவதற்காக செய்யும் பவன முக்தாசனம், பிராணாயாமம், தியானம் ஆகிய முன்னேற்றம் ஒன்றன்பின் ஒன்றாக செய்ய முடியாதவர்கள் பிராணாயாமம் அல்லது தியான பயிற்சியை மட்டும் கூட செய்யலாம். பவன முக்தாசனம், பிராணாயாமம், லோ-ஹம் தியானம் ஆகிய மூன்றில் எதை பயிற்சி செய்தாலும் பயிற்சியின் முடிவில் சுவாசத்தில் ஓய்வாக 5 நிமிடம் இருக்க வேண்டும்.  

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts