வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: 2018-11-04
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Friday, November 16, 2018

மேல்மருவத்தூர் அருகே அகிலி ஊராட்சியில் சாலை சீரற்ற நிலையில் உள்ளது



காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் வட்டம், அச்சிறுப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அகிலி ஊராட்சியில் சாலை மிகவும் பழுதடைந்து உள்ளது.

இந்த சாலையில் கற்கள் பேர்த்துக்கொண்டு, செம்மன் தெரியும்படி உள்ளது. இந்த சாலையானது அகிலி ஊராட்சிக்குட்பட்ட அகிலி காலனிக்கு செல்லும் சாலையாகும்.




மாநில அரசு 8 வழிச்சாலையில் கவனம் செலுத்துகிறதே தவிர இதுபோன்ற ஊரக சாலையை பற்றி நினைத்துக்கூட பார்க்கவில்லை. ஏனெனில் 4 மற்றும் 8 வழிச் சாலையினால் அரசுக்கும், அரசியல்வாதிகளுக்கும் ஆதாயம் உள்ளது என்பதே இதற்கு சான்று.


தேர்தல் நேரங்களில்தான் ஒரு சில கிராமபுற சாலைகள் சீரமைக்கப்படுகின்றன. மேலும், ஆளுங்கட்சியினை சேர்ந்த முக்கிய தலைவர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடும் பகுதிகளுக்கு செல்லும் சாலைகள் மட்டும் குறுகிய காலத்திலேயே பளபளப்பாக மாறிவிடும். ஆனால், தேர்தல் முடிந்த பிறகு சாலையில் பழுது ஏற்பட்டால் அதன் அவல நிலை இதுதான்.



மேற்கண்ட ஊராட்சியில் உள்ளது போல ஏகப்பட்ட சாலைகள் இந்த நிலைமையில்தான் உள்ளது. எனவே, கிராமப்புறப் பகுதிகளின் போக்குவரத்தினை மனதில் கொண்டு இது போன்ற சாலையினை சீரமைக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கை.


அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


போதும்.. பேரன் பேத்தி வந்தாச்சு.. இனிமே அது வேண்டாம்.. மறுத்த பெண்.. கொடூர கொலை!



"பேரன், பேத்தி எடுத்தாச்சு, இனிமேல் 'அதுக்கு' வரமாட்டேன்" என்று மறுத்த பெண்ணை கொலை செய்தவர் போலீசில் சரணடைந்தார். தாராபுரம்-திருப்பூர் சாலையில் நஞ்சியம்பாளையம் அருகே உப்பாறு பாலம் உள்ளது. இந்த பாலத்தின் கீழே போன மாசம் 25-ம் தேதி ஒரு பெண்ணை கொலை செய்து சாக்கு மூட்டையில் கட்டி போட்டிருந்தார்கள். போலீசார் விரைந்து அழுகிய நிலையில் கிடந்த பெண்ணை மீட்டு இது சம்பந்தமான நடவடிக்கையை மேற்கொண்டனர்.

கொள்ளை முயற்சி இல்லை
35 வயது மதிக்கத்தக்க அந்த பெண்ணின் உடம்பிலிருந்து தங்கத்தாலி, வளையல், தங்க கம்மல், மோதிரம் ஆகியவற்றை வைத்து விசாரணையை தீவிரப்படுத்தினர். ஆனால் அந்த பெண் யார், என்ன என்று உடனே தெரியவில்லை. நகைகள் எல்லாம் அப்படியே உடம்பில் இருப்பதால் கொள்ளை முயற்சிக்காக இந்த கொலை செய்யப்படவில்லை என தெரிந்தது.


காட்டி கொடுத்த இன்ஷியல்
இதையடுத்து, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கயல்விழி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு கொலையாளிகளை தேடும் பணி நடைபெற்றது. அத்துடன் பெண்ணின் கழுத்தில் கிடந்த தாலியில் பி.ஜே. என்ற ஆங்கில எழுத்து பொறிக்கப்பட்டிருந்ததால் அதை வைத்தும் தனியாக விசாரணை நடத்தினர். அந்த தாலியை எடுத்து கொண்டு கவுந்தம்பாடி கடைவீதிகளில் விசாரிக்கப்பட்டது.
(தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!
தீவிர விசாரணை 
அப்போது கிடைத்த தகவல்படி உயிரிழந்த பெண் முருகன் என்பவரின் மனைவி முத்துலட்சுமி என்று தெரியவந்தது. இந்த நிலையில்தான் முத்துலட்சுமியை கொலை செய்தோம் என்று 2 பேர் நேற்று முன்தினம் சரணடைந்தார்கள். தங்கள் பெயர் வேலுசாமி, குமரேசன் என்றார்கள். அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள். அதில் வேலுசாமி சொன்னதாவது:


பேரன் - பேத்திகள்
"எனக்கு 45 வயதாகிறது. என் மனைவியின் அக்காதான் முத்துலட்சுமி. முருகன் என்பவர்தான் முத்துலட்சுமியின் கணவர். ஆனால் எனக்கும் முத்துலட்சுமிக்கும் கள்ள உறவு ரொம்ப வருஷமாகவே இருந்தது. சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லை என்பதால், முத்துலட்சுமியை உறவுக்கு கூப்பிட்டேன். ஆனால், அவரோ, பேரன் பேத்திகள் எடுத்தாச்சு. இனிமேலும் இதெல்லாம் என்னால் முடியாது என்று மறுத்தார்.

இறுக்கி கொன்றேன் 
அதனால் எனக்கு கோபம் வந்துவிட்டது. உடனே என் அக்கா மகள் குமரேசனை கூப்பிட்டு, அவன் உதவியுடன் முத்துலட்சுமியை வேனில் கடத்தி சென்றேன். வழியில் திரும்பவும் உறவுக்கு அழைத்தேன். அப்போது எங்களுக்குள் சண்டை வந்துவிட்டது. முடியவே முடியாது என்று முத்துலட்சுமி என்னுடன் வாதம் செய்தார். அதனால் ஆத்திரம் அடைந்த நான் என் கழுத்தில் போட்டிருந்த துண்டு வைத்து அவரது கழுத்தை இறுக்கி கொலை செய்தேன்.


உப்பாற்று பாலம் 
என்னிடம் இருந்த சாக்கு பையில் அவரது உடலை கட்டி உப்பாற்று பாலத்தில் வீசிவிட்டேன். அதற்கு குமரேசனும் உதவியாக இருந்தார். எப்படியும் போலீசார் எங்களை பிடித்து விடுவார்கள் என்று தெரிந்ததால் நாங்களாகவே சரணடைந்தோம்" இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் தெரிவித்தார். இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


ஜிம்பாப்வே நாட்டில் ஓடும் பஸ் தீபிடித்த விபத்தில் 42 பேர் உயிரிழப்பு



ஜிம்பாப்வே நாட்டின் மிட்லான்ட்ஸ் மாகாணத்தில் நிகழ்ந்த பஸ் விபத்தில் சிக்கிய 42 பேர் உயிரிழந்தனர்.


ஜிம்பாப்வே நாட்டின் மிட்லான்ட்ஸ் மாகாணத்திற்குட்பட்ட ஸ்விஷாவானே பகுதியில் இருந்து தென்னாப்பிரிக்காவில் உள்ள முசினா என்ற பகுதியை நோக்கி சுமார் 70 பேர் ஒரு பேருந்தில் சென்று கொண்டிருந்தனர்.


பெய்ட்பிரிட்ஜ் சாலை வழியாக நேற்றிரவு சென்றபோது அந்த பேருந்து திடீரென்று தீபிடித்து எரிய துவங்கியது. ஓடும் பஸ்சில் ஏற்பட்ட இந்த விபத்தில் சிக்கிய  42 பேர் உயிரிழந்தனர். 20-க்கும் அதிகமானவர்கள் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் இந்த விபத்தில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
(தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!

இதே மாகாணத்தில் உள்ள ருசாப்பே என்னுமிடத்தில் கடந்த வாரம் இரு பேருந்துகள் மோதிகொண்ட விபத்தில் 50 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts

எந்தெந்த நேரங்களில் தண்ணீர் குடிக்கக் கூடாது?



தாகம் எடுக்கிறது என்று தண்ணீரை அளவுக்கு அதிகமாக குடிக்க கூடாது. ஏனெனில், இது மிக பெரிய ஆபத்தை தரும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.


தண்ணீர் நமது தாகத்தை போக்குவதோடு நமது வாழ்வையும் வளமாக வைத்து கொள்கிறது. பலர் காரமாக எதையாவது சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிப்பார்கள். குறிப்பாக மிளகாயை கடித்து விட்டால் அவ்வளவு தான். கத்தி கூப்பாடே போட்டு விடுவார்கள். இந்த நிலையில் நாம் நீர் அருந்த கூடாது. ஏனென்றால், இவை குடல் பகுதிக்கு சென்று வேறு வித விளைவுகளை வயிற்றில் ஏற்படுத்துமாம்.


பலருக்கு தூங்குவதற்கு முன் தண்ணீர் குடிக்கும் பழக்கம் இருக்கும். ஆனால், பொதுவாகவே இரவு நேரத்தில் கிட்னி சற்று மெதுவாகவே வேலை செய்யும். இது போன்ற நிலையில், உங்களின் முகம் காலையில் எழுந்தவுடன் சிறிது வீங்கி இருக்க கூடும். அத்துடன் இரவு நேரத்தில் தண்ணீர் குடிப்பதால் தூக்கமும் தடைபட கூடும்.
(தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!

சாப்பிடும் போதும், சாப்பிட்ட பிறகும், அதற்கு முன்பும்… இப்படி எல்லா நேரத்திலும் தண்ணீர் குடிக்கும் பழக்கம் நம்மில் பலருக்கு உள்ளது. சாப்பிடும் போது தண்ணீர் குடிக்க கூடாது. இவை செரிமான கோளாறை தரும். மேலும், மது அல்லது வேறு ஏதேனும் குளிர் பானங்களை சாப்பிடும் போது குடித்தால் வயிற்றின் நிலை மிக மோசமாக மாறி விடும்.


நீங்கள் அளவுக்கு அதிகமாக தண்ணீர் குடித்தால் உங்களின் உடலில் பாதிப்பை சந்திக்கும் முதல் உறுப்பு உங்களின் கிட்னி தான். அதிக தண்ணீர் கிட்னியின் செயல்திறனை குறைத்து விடும். மேலும், ரத்த ஓட்டத்தையும் பாதிக்கும்.

உடல் எடையை குறைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் மிக வேகமாக உடற்பயிற்சிகளை செய்து விட்டு நீரை அளவுக்கு அதிகமாக குடிப்பார்கள். இவ்வாறு செய்வதால் உடனடியாக உடலின் தட்பவெப்பம் உயர்ந்து மயக்கம், தலை வலி, வாந்தி போன்றவை ஏற்படும்.


பாட்டிலில் நாம் நீர் அருந்தினால் புற்றுநோய், உடல் பருமன், வயிற்று வலி போன்ற பல பிரச்சினைகள் ஒன்றன் பின் ஒன்றனாக வர தொடங்கும். எனவே, பாட்டிலில் அடைக்கப்பட்ட நீரை குடிக்காதீர்கள்.

தாகம் எடுக்கிறது என்று தண்ணீரை அளவுக்கு அதிகமாக குடிக்க கூடாது. ஏனெனில், இது மிக பெரிய ஆபத்தை தரும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். குறிப்பாக உடலில் சோடியம் அளவை இவை குறைத்து பாதிப்பை தரும். மேலும், உயிருக்கே கூட இதனால் ஆபத்து ஏற்படலாம். 


அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts

விஷால் படத்தில் சன்னி லியோன் - Sunny Leone in Vishal Movie



விஷால் நடிப்பில் உருவாகி வரும் அயோக்யா படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாட சன்னி லியோன் ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. 
 


இந்தி முன்னணி கதாநாயகர்களும் சன்னிலியோனுடன் சேர்ந்து நடிப்பதை தவிர்க்கிறார்கள். அதையும் மீறி சன்னிலியோன் நடித்துள்ள படங்கள் சர்ச்சைகளில் சிக்கி வருகின்றன. போலீஸ் நிலையங்களிலும் புகார்கள் பதிவாகிறது. கர்நாடகத்தில் சன்னிலியோன் பங்கேற்க இருந்த நடன நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு கிளம்பியதால் அரசு தடைவிதித்தது. இந்த நிலையில் தமிழ், கன்னடம், இந்தி மொழிகளில் தயாராகும் வீரமாதேவி சரித்திர படத்தில் சன்னிலியோன் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
(தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!



இந்த படத்துக்கு எதிராக கர்நாடகாவில் போராட்டங்கள் நடக்கின்றன. மதுரை கோர்ட்டிலும் வீரமாதேவி படத்தில் சன்னிலியோன் நடிக்க தடை விதிக்க வழக்கு தொடர்ந்தனர். ஆனால் சன்னிலியோன் நடிக்க கோர்ட்டு தடைவிதிக்க மறுத்துவிட்டது. இதனால் வீரமாதேவி படப்பிடிப்பு மீண்டும் விறுவிறுப்பாக நடக்கிறது. வடிவுடையான் இந்த படத்தை டைரக்டு செய்கிறார். 

இந்த நிலையில் அடுத்து விஷாலின் அயோக்கியா படத்துக்கும் சன்னிலியோனை ஒப்பந்தம் செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த படத்தில் ஒரு பாடலுக்கு அவர் கவர்ச்சி நடனம் ஆட இருப்பதாக கூறப்படுகிறது. வெங்கட் மோகன் இயக்கும் இந்த படத்தில் ராஷி கண்ணா கதாநாயகியாக நடிக்கிறார்.

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts