Run World Media: 12/01/18

உங்கள் இமெயிலை உள்ளிடுங்கள்-உங்கள் Inboxல் Confirm செய்யுங்கள் நமது செய்தி உடனுக்குடன் வந்து சேரும்

எங்களது பிற செய்திகளை இங்கு தேடவும்

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Saturday, December 1, 2018

அஜித் ரசிகர்கள் மீது தடியடி.. சென்னை விமானநிலையத்தில் பரபரப்பு! HL Ajith Fans

கணக்கு டீச்சர் கடத்தல்.. காரை விட்டு டூவீலரில் மோதி கடத்திய துணிகரம்.. HL Maths Teacher

மசாஜுக்கு வந்த தொழிலதிபர்.. 2 பெண்களுடன் ஜாலி.. திடீரென புகுந்த நால்வர்.. பிறகு நடந்தது என்ன? HL Massage

மெளனம் பேசியதே.. வாய் பேச முடியா காதலர்கள்.. ஒன்று சேர்ந்து அசத்தல்! HL Silent

நம்பறீங்களோ... இல்லையோ... கோபால் வீட்டு மரத்தில் பால் வடியுதாம்.. HL Milk Tree

அஜித் ரசிகர்கள் மீது தடியடி.. சென்னை விமானநிலையத்தில் பரபரப்பு!சென்னை விமான நிலையத்தில் நடிகர் அஜித்தை காண ரசிகர்கள் முண்டியடித்து சென்றதால், போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்தனர்.
ஜெர்மன் நாட்டில் நடைபெற்ற ஆளில்லா விமானங்கள் தொடர்பான மாநாட்டில் கலந்துகொண்ட பின் நடிகர் அஜித், நேற்று சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் இருந்து வெளியே வர முற்பட்டபோது, அவரை பார்த்த ரசிகர்கள் உற்சாகத்தில் குதித்தனர். தன்னை நோக்கி ரசிகர்கள் வருவதை கவனித்த அஜித், வேகமாக சென்று காரில் ஏற முயன்றார்.


ரசிகர்கள் கூட்டம்:  
ஆனால் கூட்டம் அதிகமாக இருந்ததால், அவரால் காரில் ஏற முடியவில்லை. இதையடுத்து அவர் மீண்டும் விமான நிலையத்திற்குள் சென்றுவிட்டார். ஆனால் அதற்குள் அஜித் விமான நிலையத்தில் உள்ள செய்தி, அங்கு தீயாய் பரவியது. (தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!

மத்திய தொழிற்படை போலீஸ்: 
இதனால் ரசிகர்கள், விமான பயணிகளை வரவேற்க வந்தவர்கள் என பலரும் விமான நிலையத்திற்குள் நுழைய முற்பட்டனர். இதையடுத்து, அவர்களை மத்திய தொழிற்படை போலீசார் தடுத்து நிறுத்தினர். கூடிய கூட்டத்தையும் அப்புறப்படுத்தினார்கள்.


தடியடி: 
பின்னர் விமான நிலையத்தின் மற்றொரு பகுதியில் அஜித் வெளியே வந்தபோது ரசிகர்கள் தடுப்பு வேலிகளை தாண்டி குதித்து முண்டியடித்து சென்றதால் போலீசார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். பின்னர் பாதுகாப்பாக அஜித் காரில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டார்.

வைரல்: 
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் அஜித் தனது குடும்பத்துடன் கோவா செல்ல சென்னை விமான நிலையம் வந்தபோதும், சரி திரும்பி வந்தபோதும் சரி, இதேபோல் அவரைப் பார்க்க ரசிகர்கள் குவிந்தனர். சிலருடன் அஜித்தும் செல்பி எடுத்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts

மனைவி குடும்பம் நடத்த வராத ஆத்திரத்தில் குழந்தையை அடித்து கொன்றவருக்கு ஆயுள் தண்டனை HL Punishment

மனைவி குடும்பம் நடத்த வராத ஆத்திரத்தில் குழந்தையை அடித்து கொன்றவருக்கு ஆயுள் தண்டனைமனைவி குடும்பம் நடத்த வராத ஆத்திரத்தில் 1 வயது மகளை அடித்து கொலை செய்த தந்தைக்கு ஆயுள் தண்டனை வழங்கி கோர்ட்டு தீர்ப்பு கூறியுள்ளது.


பால்கர் மாவட்டம் விரார் கிழக்கு, மன்வெல்பாடா பகுதியை சேர்ந்தவர் துஷார்(வயது38). இவரது மனைவி சவுஜானி.
(தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!

இவர்களுக்கு ஹர்சிதா என்ற ஒரு வயது மகள் இருந்தாள். துஷார் வேலைக்கு செல்லாமல் மனைவியுடன் அடிக்கடி சண்டைபோட்டு வந்தார்.


இதனால் விரக்தி அடைந்த சவுஜானி கடந்த 2015-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அருகில் உள்ள தாயின் வீட்டிற்கு குழந்தையுடன் சென்றுவிட்டார். இந்தநிலையில் செப்டம்பர் 29-ந்தேதி துஷார் மனைவியை சமாதானம் செய்து அழைத்து செல்ல மாமியார் வீட்டிற்கு சென்றார். ஆனால் சவுஜானி குடும்பம் நடத்த அவருடன் செல்ல மறுத்துவிட்டார்.

இதனால் ஆத்திரமடைந்த அவர் குழந்தை ஹர்சிதாவின் கால்களை பிடித்து தூக்கி தரையில் ஓங்கி அடித்தார். இதில் தலையில் படுகாயமடைந்த குழந்தை ஹர்சிதா பரிதாபமாக உயிர் இழந்தது.


இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் துஷாரை கைது செய்தனர். இந்த வழக்கு மீதான விசாரணை வசாய் செசன்ஸ் கோர்ட்டில் நடந்து வந்தது.

இதில், வழக்கை விசாரித்த கோர்ட்டு குழந்தையை அடித்து கொலை செய்த துஷாருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பு கூறியது.


அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts

நம்பறீங்களோ... இல்லையோ... கோபால் வீட்டு மரத்தில் பால் வடியுதாம்..நம்பறீங்களோ... இல்லையோ... விஷயம் இதுதான்.. கோபால் வீட்டு மரத்தில இருந்து பால் வடிந்து கொண்டிருக்கிறதாம்!
 
 

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்து வருவாய் பகுதி என்ற இடம் உள்ளது. இங்கு வசித்து வருபவர் கோபால். இவருக்கு சொந்தமாக ஒரு தோட்டம் உள்ளது. (தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!

இந்த தோட்டத்தில் ஒரு வேப்பமரமும் இருக்கிறது. இந்த மரத்தில் சிவசக்தி சிவ நாக சக்தி சாமி உள்ளதாக அப்பகுதி மக்கள் நம்புகிறார்கள்.

ஃபேமஸ் மரம்

அதனால் அந்த வேப்ப மரத்திற்கு தினமும் பூஜை செய்து வருகின்றனர். இதனால் கிராமத்தில் அந்த வேப்பமரம் ரொம்ப ஃபேமஸ் ஆனது.
 

நிறைய வழிகிறது

இந்நிலையில் 2 நாளுக்கு முன்னாடி அந்த வேப்ப மரத்திலிருந்து திடீரென பால் வடிந்துள்ளது. இதனால் ஆச்சரியம் அடைந்தனர் பொதுமக்கள். ஆனால் இன்று காலை முதல் அந்த மரத்தில் நிறைய அளவில் பால் வடிய ஆரம்பித்திருக்கிறது.

உணர்ச்சி வசப்பட்டனர்

இந்த விஷயம் சுற்றுவட்டார பகுதி முழுசும் பரவிவிட்டது. எல்லோரும் கூட்டம் கூட்டமாக கோபால் வீட்டுக்கு படையெடுத்து வந்து கொண்டிருக்கிறார்கள். கண்ணெதிரே மரத்தில் இருந்து வழிந்து வரும் பாலை பார்த்து மக்கள் உணர்ச்சி வசப்பட்டு விட்டனர்.
 

வீடியோ, ஆடியோ

பொதுமக்களில் சிலர் மரத்துக்கு வழிபாடுகள், பூஜைகள் என இறங்கி விட்டார்கள். செல்வி, போட்டோ, வீடியோ என இன்னொரு பக்கம் நடக்கிறது. கோபால் வீட்டு தோட்ட மரத்தில் இருந்து பால் வடிவது பெரிய அளவில் அப்பகுதி மக்களிடம் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.


அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts

மெளனம் பேசியதே.. வாய் பேச முடியா காதலர்கள்.. ஒன்று சேர்ந்து அசத்தல்!சூப்பர்ல.. வாய் பேச முடியாவிட்டாலும் இந்த ஜோடி செய்த காரியம் எல்லாரையுமே பேச வைத்துவிட்டது. நெல்லை மாவட்டம் புளியங்குடியை சேர்ந்தவர் சேவியர் செல்வம். 

இவருக்கும் மதுரை வாடிப்பட்டியை சேர்ந்த வைஷ்ணவி என்பவருக்கும் கடந்த 2 மாசத்துக்கு முன்னாடி கல்யாணம் நிச்சயம் ஆனது. ஊர் பெரியவர்கள் எல்லாம் சேர்ந்துதான் இதனை ஏற்பாடு செய்தார்கள். இவர்கள் இருவருமே வாய் பேச முடியாதவர்கள் என்று கூறப்படுகிறது.


பிடித்து விட்டது
ஆனால் பொண்ணும், மாப்பிள்ளையும் வேற வேற சாதியாம். இதை கேள்விப்பட்டு ரெண்டு வீட்டு சொந்தக்காரங்களும் இதற்கு எதிர்ப்பு சொன்னார்கள். 
  (தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!
இதனால் நிச்சயம் ஆன கல்யாணம் நின்றே போய்விட்டது. ஆனால் பொண்ணுக்கு மாப்பிள்ளையை பிடித்துவிட்டது, மாப்பிள்ளைக்கும் பொண்ணை பிடித்து விட்டது.

உறவினர்கள் 
பெண் பார்க்க போன அன்றே இருவருக்கும் பிடித்துபோன சமாச்சாரத்தை மல்லுக் கட்டும் சொந்தக்காரர்களிடம் சொல்லவில்லை. அதனால் இருவரும் கல்யாணம் செய்து கொள்ள முடிவெடுத்தார்கள். சொந்தக்கார்களிடம் சொன்னால் ஒன்னுக்கும் வேலைக்கு ஆகாது என்று நினைத்த இந்த ஜோடி, நெல்லையில் உள்ள தூரத்து உறவினர் வீட்டில் தஞ்சமடைந்தார்கள்.


பெண்ணை காணோம்
இதனையடுத்து நண்பர்கள் முன்னிலையில் கல்யாணம் செய்து கொண்டார்கள். இந்த திருமணத்தை பாதிரியார் சேகர் நடத்தி வைத்திருக்கிறார். பிறகு கல்யாணம் முடிந்த கையோடு ரிஜிஸ்டரும் செய்து விட்டார்கள். இப்போதுதான் பிரச்சனை வெடிக்க ஆரம்பித்தது. பெண்ணை காணோம் என்று போலீசில் புகார் சொன்னார்கள். இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கை விசாரிக்க ஆரம்பித்தனர்.

சமாதான பேச்சு 
அப்போது, மாப்பிள்ளை சேவியர் செல்வம் வீட்டுக்கு போலீசார் தகவலை சொல்லி ஸ்டேஷன் வர சொன்னார்கள். அப்போதுதான் மாப்பிள்ளையும், பெண்ணும் போலீஸ் ஸ்டேஷனில் மாலையும் கழுத்துமாக வந்து இறங்கினார்கள். தங்களுக்கு கல்யாணம் ஆகிவிட்டது, அதனை ரிஜிஸ்டரும் பண்ணி விட்டோம் என்று சொல்லி அந்த ஆவணத்தையும் போலீசில் காட்டினார்கள். இதையடுத்து போலீசார் இரு வீட்டு ஆட்களிடம் பேசி சமாதானப்படுத்தினார்.


பேச முடியவில்லை
இப்படி இருவரும் தம்பதியாக வந்து நின்றதை பார்த்ததும் இரு வீட்டு ஆட்களுமே ஷாக் ஆகித்தான் போனார்கள். பிறகு என்ன செய்ய முடியும்? ஒருத்தரை ஒருத்தர் விரும்பிதான் இந்த முடிவை எடுத்திருக்காங்க... தாலியும் கட்டியாச்சு, ரிஜிஸ்டரும் முறைப்படி பண்ணியாச்சு... நின்று கொண்டிருக்கும் இடமோ போலீஸ் ஸ்டேஷன்... ஒருத்தரும் வாயை திறக்க முடியவில்லை. பேச முடியாமல் தடுமாறி நின்றது இவர்கள்தான்... கடைசியில எல்லாரும் சேர்ந்து ஆசீர்வாதம்தான் பண்ண முடிந்தது... இன்ஸ்பெக்டர் உட்பட!!

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


மசாஜுக்கு வந்த தொழிலதிபர்.. 2 பெண்களுடன் ஜாலி.. திடீரென புகுந்த நால்வர்.. பிறகு நடந்தது என்ன?வீட்டையே மசாஜ் சென்டராக மாற்றி பலரிடம் பணம் பறித்த 2 பெண்கள் கைது 
வீட்டையே மசாஜ் சென்டராக மாற்றி பலரிடம் பணம் பறித்த 2 பெண்கள் உட்பட 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மாதவரத்தை சேர்ந்தவர் நிர்மலா. 27 வயதான இவர் தனது கணவனை பிரிந்து வாழ்கிறார். 

அதனால் ஜீவனத்துக்காக அண்ணநகரில் ஒரு மசாஜ் சென்டரில் வேலை பார்த்து வந்தார். அப்போதுதான் கிருஷ்ணமூர்த்தி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.  (தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!
இவர் ஒரு தொழிலதிபர். கொடுங்கையூரில் வசித்து வருகிறார். இவருடன் பழக்கம் கிடைத்ததும் நிர்மலா தன் வேலையை விட்டுவிட்டு, வீட்டிலேயே மசாஜ் சென்டரை நடத்த ஆரம்பித்துவிட்டார். போன வாரம் ஒருநாள், தனக்கு மசாஜ் செய்ய வேண்டும் என்று தொழிலதிபர் சொல்லவும், தன் வீட்டுக்கு வரும்படி நிர்மலா கூப்பிட்டிருக்கிறார்.


ஜாலியாக இருந்தார் 
அதன்படி 2 நாளுக்கு முன்னாடி நிர்மலா வீட்டுக்கு சென்றார். அங்கே இருந்த தனது தோழி ஷீலா, மற்றும் ஆட்டோ டிரைவர் மணிகண்டனை தொழிலதிபருக்கு நிர்மலா அறிமுகம் செய்து வைத்தார். பிறகு நிர்மலா, ஷீலாவுடன் கிருஷ்ணமூர்த்தி ஜாலியாக இருந்திருக்கிறார்.

போலீசில் புகார் 
இதனை தொடர்ந்து, திடீரென 4 பேர் கொண்ட ஒரு கும்பல் நிர்மலா வீட்டுக்குள் புகுந்து தொழிலதிபரை கத்தியை காட்டி மிரட்டி 2 சவரன் நகை, 70 ஆயிரம் ரூபாய் என பறித்து கொண்டு தப்பியது. இதனால் தொழிலதிபர் மிகவும் அதிர்ச்சி அடைந்தார். உடனே மாதவரம் பால்பண்ணை போலீசில் புகார் அளித்தார்.


நிர்மலா செட்டப்  
இதுசம்பந்தமாக போலீசார் வழக்கு பதிவு செய்து நிர்மலா, ஷீலா, ஆட்டோ டிரைவரிடம் விசாரணை நடத்தினர். அப்போதுதான் கொள்ளை கும்பல் நிர்மலாவின் செட்டப் என்று தெரியவந்தது. தொழிலதிபரை மிரட்டி பணத்தை கறந்து 7 பேரும் பங்குபிரித்து கொள்ள பிளான் போட்டிருந்ததும் தெரியவந்தது.

7 பேர் கைது  
இதையடுத்து, இவர்கள் மூன்று பேருடன், கார்த்திகேயன், புகழேந்தி, அருண்குமார், லட்சுமணன் உள்ளிட்ட 7 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர்கள் அனைவரும் இப்படியே நிறைய பேரிடம் பணத்தை ஏமாற்றி பிடுங்கியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து 7 பேரிடம் விசாரணை நடந்து வருகிறது.

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts

Featured Post

ரத்தம் சொட்ட சொட்ட.. மனைவியின் தலையுடன் தெருவில் நடந்து சென்ற இளைஞர்..

பட்டபகலில் மனைவியின் தலையை வெட்டி, ரத்தம் சொட்ட சொட்ட.. கையில் வைத்து கொண்டு தெருவில் நடந்து சென்ற இளைஞரை கண்டு பொதுமக்கள் அலறி அடி...

நமது சேனலில் வீடியோக்களை காண்க

சமூக சீரழிவு செய்திகள்