வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: 2018-12-02
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Wednesday, December 12, 2018

அரசு ஆஸ்பத்திரிகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு பரிசு பெட்டகம்



அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு பரிசு பெட்டகம் வழங்குவது என மராட்டிய மந்திரி சபையில் முடிவு செய்யப்பட்டது.


 
மராட்டிய மந்திரிசபை கூட்டம் நேற்று முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிறக்கும் குழந்தைகளுக்கு பரிசு பெட்டகம் வழங்குவது என முடிவு செய்யப்பட் டது. குழந்தைகளின் இறப்பு விகிதத்தை குறைக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
(தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!
இந்த திட்டத்தின்படி அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிறக்கும் குழந்தைகளுக்கு தலா ரூ.2 ஆயிரம் மதிப்புள்ள குழந்தைகள் நல பரிசு பெட்டகம் வழங்கப்படும். முதல் குழந்தைக்கு மட்டும் இந்த பரிசு பெட்டகம் பொருந்தும்.

இந்த பரிசு பெட்டகத்தில் குழந்தைகளின் உடைகள், பிளாஸ்டிக் டைபர், மெத்தை, துண்டு, தெர்மோமீட்டர், மசாஜ் எண்ணெய், கொசு வலை, போர்வை, பிளாஸ்டிக் தரைவிரிப்பு, சாம்பு, பொம்மை, நகவெட்டி மற்றும் சாக்ஸ் ஆகியவை அடங்கியிருக்கும்.

மராட்டியத்தில் ஆண்டுதோறும் சராசரியாக 20 லட்சம் குழந்தைகள் பிறக்கின்றன. இதில் கிட்டத்தட்ட 10 லட்சம் குழந்தைகள் அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் தான் பிறக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே தமிழ்நாடு, ஆத்திரா மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் இந்த திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அதுமட்டும் இல்லாமல், “முதல்-மந்திரி கிரிஷி சிஞ்சாயே யோஜனா” திட்டத்தின் கீழ் 48 திட்டங்களை செயல்படுத்த வேளாண் மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு வங்கியிடம்(நபார்டு) இருந்து ரூ.6 ஆயிரத்து 985 கோடி கடன்பெற மந்திரி சபை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
 

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts

விமல் படம் ஓடிய தியேட்டருக்குள் புகுந்து பெண்கள் ரகளை: தெறித்து ஓடிய ஆண்கள்



மதுரையில் இவனக்கு எங்கேயோ மச்சம் இருக்கு படம் ஓடும் தியேட்டருக்குள் புகுந்து போஸ்டர்களை செருப்பால் அடித்து கிழித்தனர் மாதர் சங்கத்தினர்.

விமல் நடித்த இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு படம் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கிறது. இது 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான படம். படத்தில் ஆபாச காட்சிகள் அதிகம் என்றும், பெண்களை கேலி செய்யும் வசனங்களும் நிறைய உள்ளது என்றும் குற்றச்சாட்டு எழுந்தது.
(தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!
இந்நிலையில் மதுரை காளவாசல் பகுதியில் உள்ள சண்முகா சினி காம்பிளக்ஸுக்கு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் 20க்கும் மேற்பட்ட பெண்கள் வந்தனர்.
 
காம்பிளக்ஸில் ஒட்டியிருந்த விமல் பட போஸ்டர்களை செருப்பால் அடித்ததுடன் கிழித்து எறிந்தனர். இந்த ஆபாச படத்திற்கு உடனே தடை விதிக்கக் கோரி தியேட்டர் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தியேட்டருக்குள் சென்று படம் பார்த்தவர்களிடம் இந்த படத்தை பார்க்க வேண்டாம் என்று கோரிக்கை விடுத்தனர். பெண்களின் ரகளையால் காலை காட்சி ரத்து செய்யப்பட்டது. மாதர் சங்க போராட்டத்தால் தியேட்டரில் படம் பார்த்த ஆண்கள் இடத்தை காலி செய்தனர்.

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts

டிராபிக் ஜாம்.. வெறுத்துப் போய் இவர் செஞ்சதை நீங்களும் ட்ரை பண்ணிடாதீங்க..!



வியட்நாம் தலைநகர் ஹாநோய் நகரில் போக்குவரத்து நெரிசலால் சாலையை கடக்க முடியாமல் வெறுத்துப் போன நபர் ஒருவர், மின்சார ஒயர்களின் மீது ஏறி சாலையை கடந்த சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. 


வாகனப் பெருக்கத்தால் வியட்நாம் தலைநகர் ஹாநோய் நகரில் உள்ள சாலைகள் போக்குவரத்து நெரிசலால் தத்தளிக்கின்றன. இதனால் பாதசாரிகள் சாலையை கடப்பதற்கு வெகு நேரம் பிடிக்கிறது. இதனால் மக்கள் வெறுத்து போகின்றனர். (தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!

அப்படி வெறுத்து போன ஒருவர் செய்த காரியம் அனைவரையும் அன்னாந்து பார்க்க வைத்துள்ளது. போக்குவரத்து நெரிசலில் காத்திருக்க பொறுமை இல்லாத அந்த நபர், மின்கம்பத்தில் ஏறி, மின்சார ஒயர்களின் மேல் நடந்து சாலையை கடந்துள்ளார்.
 
இதனை சிலர் தங்கள் செல்போனில் வீடியோ எடுத்து, சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர். அந்த வீடியோ தற்போது அனைத்து சமூக வலைதளங்களிலும் வைரலாக பரவி வருகிறது. மின்சார கம்பியில் நடக்கும் அந்த நபரை வியட்நாமின் ஸ்பைடர் மேன் என மக்கள் அழைக்கின்றனர். ஷாக் அடிக்காத வரைக்கும் அந்த நபரின் ஐடியா வேலைக்கு ஆகும் என சிலர் கமெண்ட் அடித்துள்ளனர்.

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts

9 ஆண்டு காதலித்த டான்ஸ் மாஸ்டரை மணந்த நடிகை



நடிகை சாந்தினி தமிழரசன் தனது காதலரான டான்ஸ் மாஸ்டர் நந்தாவை திருப்பதியில் இன்று திருமணம் செய்து கொண்டார்.

 
சாந்தனு பாக்யராஜ் நடித்த சித்து +2 படம் மூலம் நடிகையானவர் சாந்தினி தமிழரசன். நான் ராஜாவாக போகிறேன், வில் அம்பு, கட்டப்பாவ காணோம், பாம்பு சட்டை, பலூன், மன்னர் வகையறா, ராஜா ரங்குஸ்கி, பில்லா பாண்டி, வண்டி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
(தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!
அவர் தமிழ் தவிர தெலுங்கு படங்களிலும் நடித்திருக்கிறார். சென்னை பெண்ணான சாந்தினி டான்ஸ் மாஸ்டர் நந்தாவை 9 ஆண்டுகளாக காதலித்து வந்தார். 
 
இந்நிலையில் பெற்றோர் சம்மதத்துடன் இருவரும் இன்று திருப்பதியில் திருமணம் செய்து கொண்டனர். இதையடுத்து வரும் 16ம் தேதி சென்னையில் உள்ள மேயர் ராமநாதன் மண்டபத்தில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் திரையுலக பிரபலங்கள் கலந்து கொள்கின்றனர். திருமணம் முடிந்துவிட்டதால் அவர் சினிமாவில் இருந்து ஒதுங்கியிருக்கப் போவது இல்லை. தொடர்ந்து நடிக்கும் முடிவில் தான் உள்ளார் சாந்தினி.

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts

கட்டாயப் படுத்தி விளையாட்டு.. மாரடைப்பால் சென்னைக் கல்லூரி மாணவி மரணம்..



கட்டாயப்படுத்தி விளையாட வைத்ததால் மாரடைப்பு ஏற்பட்டு கல்லூரி மாணவி உயிரிழந்த சம்பவம் சென்னையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 
சென்னை சேலையூரை சேர்ந்த கல்லூரி மாணவி ஜெ.மஹிமா (18). இவர் கிழக்குத் தாம்பரத்தில் உள்ள மெட்ராஸ் கிரிஸ்டியன் கல்லூரியில் முதலாம் ஆண்டு வேதியியல் படித்து வந்தார். இவர் கடந்த திங்களன்று மாலை 5.30 மணியளவில் சகமாணவிகளுடன் கல்லூரி வளாகத்தில் கூடைப்பந்து விளையாடியுள்ளார். (தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!

அப்போது அவர் திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது தோழிகள், கல்லூரி நிர்வாகத்தின் உதவியுடன் அவரை அருகில் இருந்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு மஹிமாவைச் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர். உடற்கூறு ஆய்வில் அவர் மாரடைப்பால் உயிரிழந்தது தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து அவரது உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. மஹிமாவின் இந்த திடீர் மரணத்தால் அவரது குடும்பத்தாரும், தோழிகளும் அதிர்ச்சியும், சோகமும் அடைந்தனர்.
 
இது ஒருபுறம் இருக்க, கல்லூரி நிர்வாகம் மாணவிகள் அனைவரையும் கட்டாயப்படுத்தி விளையாட வைப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஏற்கனவே உடல்நலக் குறைபாட்டால் அவதிப்பட்டு வந்த மஹிமாவை விளையாடும்படி கட்டாயப்படுத்தியதால் தான் அவர் உயிரிழந்ததாகவும் மாணவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இது தொடர்பாக கல்லூரி நிர்வாகத்திற்கு எதிராக அவர்கள் போரட்டம் நடத்தினர். இந்த சம்பவம் தொடர்பாக சேலையூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கல்லூரி நிர்வாகம் இது தொடர்பாக அளித்துள்ள விளக்கத்தில், ''மஹிமாவை விளையாடச் சொல்லி கட்டாயப்படுத்தவில்லை. அவர் உடல்நலக்குறைவால் அவதிப்படுகிறார் என்று முன்பே அறிவுறுத்தவில்லை'’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts