Run World Media: 12/19/18

உங்கள் இமெயிலை உள்ளிடுங்கள்-உங்கள் Inboxல் Confirm செய்யுங்கள் நமது செய்தி உடனுக்குடன் வந்து சேரும்

எங்களது பிற செய்திகளை இங்கு தேடவும்

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Wednesday, December 19, 2018

டூட்டியில் இருந்த பெண் போலீஸுக்கு சரமாரி முத்தம்...பெண் போலீசுக்கு முத்தம் தந்து பரபரப்பை ஏற்படுத்திய சப்-இன்ஸ்பெக்டர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 


திருச்சி சோமரசம்பேட்டை போலீஸ் ஸ்டேஷன் சப் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியம். 54 வயதான இவர், கடந்த 12-ம் தேதி நைட் டியூட்டியின்போது, உடன் வேலை பார்த்த 34 வயது சசிகலா என்ற பெண் போலீசுக்கு முத்தம் கொடுத்தார். 
  (தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!
இது சம்பந்தமாக சசிகலா அங்கு வந்த ஏட்டு கேசவனிடம் புகார் சொல்ல, அந்த புகார் எஸ்.பி. ஆபீசுக்கு போனது. அதுவும் இல்லாமல் இது குறித்து விசாரிக்க ஸ்டேஷனில் இருந்த வீடியோ பதிவு எஸ்.பி. ஆபீசுக்கும் அனுப்பட்டது.


சஸ்பெண்ட்
அங்கு அனுப்பியபோது, வேறு யாரோ இந்த வீடியோவை எடுத்து வெளியிட்டு விடவும், வைரலாகி விட்டது. எனவே விஷயமும் சீரியஸாகி விட்டது. இதையடுத்து, ஸ்டேஷனில் வைத்து முத்த மழை பொழிந்த பாலசுப்பிரமணியம் உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

சப்-இன்ஸ்பெக்டர் ஆதங்கம் 
 இதனால் ஆத்திரமடைந்த எஸ்.எஸ்.ஐ, "இருவரும் சம்மதத்தோடுதான் ஜாலியாக இருந்தோம். தண்டனை கொடுத்தால் இரண்டு பேருக்கும்தான் கொடுக்கணும். எனக்கும் மட்டும் தண்டனை கொடுப்பதில் என்ன நியாயம் இருக்குது" என ஆதங்கப்பட்டார்.


3 பிரிவுகளில் வழக்கு  
இதையடுத்து மறு விசாரணையும் நடத்தப்பட்டது. இந்த நிலையில், பாலசுப்பிரமணியம் மீது போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். பெண் போலீசை பணி செய்யவிடாமல் தடுத்ததாகவும், பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும், மிரட்டல் விடுத்ததாகவும் இந்த வழக்கு பதியப்பட்டுள்ளது.

ஒரு வார காலம்  
பெண் போலீஸ் சசிகலா, இது சம்பந்தமாக அளித்த புகாரின் அடிப்படையிலேயே மாவட்ட காவல்துறை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் சப் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் ஆன நிலையில், சம்பவம் நடந்து ஒரு வாரம் ஆன நிலையில், இப்போதுதான் வழக்கே பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


பக்கத்து வீட்டு நாய்க்குட்டியைக் காப்பாற்ற முயன்ற தம்பி.. ஆத்திரத்தில் அடித்துக் கொன்ற அண்ணன்!பக்கத்து வீட்டு நாயைக் காப்பாற்ற முயற்சித்ததால், ஆத்திரத்தில் உடன்பிறந்த தம்பியை அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


மும்பையின் விலே பார்லே பகுதியைச் சேர்ந்தவர் ஹனுமந்தா கோலீகார் (50). சம்பவத்தன்று இவர் பக்கத்து வீட்டு நாய்க்குட்டியை கடுமையாக தாக்கியுள்ளார்.
  (தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!
அப்போது அங்கு வந்த அவரது தம்பி, சிவா கோலீகார், நாய்க்குட்டி மீது இரக்கம் கொண்டு அதனைக் காப்பாற்ற முயற்சித்துள்ளார்.
இதனால் ஹனுமந்தாவின் கோபம், சிவா மீது திரும்பியது. நாய்க்குட்டியை அடிக்க விடாமல் தடுத்த தம்பியை தள்ளி விட்டுள்ளார்.
 
இதில் மாடியில் இருந்து தவறி விழுந்த சிவா, பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், ஹனுமந்தாவைக் கைது செய்தனர். சிவாவின் மரணம் விபத்தா அல்லது திட்டமிட்ட கொலையா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நாய்க்குட்டிக்காக ஏற்பட்ட சண்டையில் தம்பியை அண்ணனே கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts

புற்றுநோய் சிகிச்சை பெற்று கொண்டே டான்ஸில் கலக்கும் 5 வயது சிறுவன்..அமெரிக்காவில் 5 வயது சிறுவன் ஒருவன் பாப் மன்னன் மைக்கேல் ஜாக்சனின் பாடலுக்கு நடனமாடியபடியே புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வருவது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது. 

 
அமெரிக்காவின் சீட்டல் நகரைச் சேர்ந்தவர் சாலமன். 5 வயது சிறுவனான அவருக்கு செல்களின் வளர்ச்சி பாதிக்கப்பட்டு அதன் தொடர்ச்சியாக புற்று நோய் ஏற்பட்டுள்ளது. உலகில் அரிதான புற்றுநோயான இது, இதுவரை 200 பேரிடம் மட்டுமே கண்டறியப்பட்டுள்ளது.
 (தொடர்ச்சி கீழே...)

இதையும் படிக்கலாமே !!!
10 வயது முதல் 30 வயதுக்கு கீழே உள்ளவர்களுக்கு வரக்கூடிய இந்த நோய், 5 வயது சிறுவனான சாலமனுக்கு வந்துள்ளது. அதனை கண்டு கலங்கிய அவரது பெற்றோர் சாலமனை அமெரிக்காவின் சியாட்டில் நகரில் உள்ள குழந்தைகள் மருத்துவமனையில் சேர்த்தனர். அந்த மருத்துவமனையில் சிறப்பு வாய்ந்த மருத்துவக்குழுவினர் சிறுவன் சாலமனுக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். உடலை ரணப்படுத்தும் புற்றுநோய் சிகிச்சைகள் ஒரு புறம் இருக்க, கடுமையான வலியிலும் சிறுவன் சாலமன் பாப் மன்னன் மைக்கேல் ஜாக்சனின் பாடலுக்கு நடனமாடுகிறார்.


அது தொடர்பான காட்சிகள் இணையத்தில் வைரலாகி உள்ளன. கதிரியக்கம் மற்றும் கீமோ தெரபி சிகிச்சைகள் அளிக்கப்பட உள்ள நிலையில் சிறுவன் சாலமனின் இந்த செயல், அவருக்கு மிகுந்த தன்னம்பிக்கையையும், மனஉறுதியையும் அளிக்கும் என்று அவரது தாயார் லெனி கூறியுள்ளார். நீண்ட நாட்களாக மருத்துவமனையில் தொடர் சிகிச்சையில் இருந்து வரும் தமது மகன் சாலமன், மைக்கேல் ஜாக்சனின் இசை, நடனத்தால் உற்சாகத்துடன் காணப்படுவதாக தெரிவித்துள்ளார். எது எப்படியோ.. இசையானது மனதையும் உடலையும் அமைதிப்படுத்தி தெளிவான சிந்தனையை அளிப்பதோடு, தமக்கான நம்பிக்கையையும், புத்துணர்ச்சியையும் அளிக்கும் என்பது தான் நாம் தெரிந்து கொள்ளும் சேதி.

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


பொழிந்த பணமழை.. மாடியிலிருந்து மக்கள் மீது ரூ.18 லட்சத்தை வீசிய இளைஞர்.. 24 வயது ராபின் ஹுட்!ஹாங்காங்கை சேர்ந்த இளைஞர் ஒருவர் மாடி ஒன்றில் இருந்து மக்கள் மீது 18 லட்சம் ரூபாயை வீசி எறிந்த சம்பவம் பெரிய வைரலாகி உள்ளது. 


ஹாங்காங்கை சேர்ந்தவர் வாங் சிங் கிட். 24 வயதே நிரம்பி இருக்கும் இருக்கும் இவர் பல கோடிகளுக்கு அதிபர் என்று கூறப்படுகிறது. 
 (தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!
சமீபத்திய இணைய வைரலான கிரிப்டோகரன்சி மூலம் இவர் பல கோடிகளை சம்பாதித்து இருக்கிறார் என்று கூறுகிறார்கள். இந்த நிலையில் இவர் மக்கள் மீது பணத்தை வீசி எறிந்த சம்பவம் பெரிய வைரல் ஆகியுள்ளது.


யார் இவர் 
வாங் சிங் கிட் கிரிப்டோகரன்சிகளில் செய்த முதலீடு மூலம் நிறைய கோடிகளை சம்பாதித்து உள்ளார் என்று கூறுகிறார்கள். அதேபோல் புதிய புதிய கிரிப்டோகரன்சிக்கு இவர் கொடுத்த விளம்பரங்கள் மூலம் நிறைய வருமானம் பெற்றார் என்றும் கூறுகிறார்கள். தற்போது இவரது வங்கி கணக்கில் சில கோடிகள் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

மக்கள் மீது கொட்டினார் 
இந்த நிலையில்தான் இவர் நேற்று முதல்நாள் ஹாங்காங்கின் ஷாம் ஷு பேய் என்று பகுதியில் உள்ள மாடிக்கட்டிடம் ஒன்றில் ஏறிக்கொண்டு மக்கள் மீது பணத்தை தூக்கி வீசி எறிந்துள்ளார். இதனால் உடனே அந்த பகுதியில் பெரிய அளவில் கூட்டம் கூடியது. கீழே கூடிய மக்கள் அவர் தூக்கி எறிந்த பணத்தை சண்டையிட்டு எடுத்துக் கொண்டு இருந்தனர்.


எவ்வளவு பணம் 
மொத்தம் இவர் 18 லட்சம் ரூபாயை இப்படி வீசியதாக கூறுகிறார்கள். இது எல்லாம் கிரிப்டோகரன்சிகளை விளம்பரம் செய்ததன் மூலம் இவர் ஈட்டிய பணம் என்று கூறப்படுகிறது. இதை மக்கள் சண்டையிட்டு எடுத்து செல்லும் வீடியோ இணையதளத்தில் வெளியாகி வைரலாகி உள்ளது.

கைது செய்யப்பட்டார் 
இந்த நிலையில் அவர் இப்படி பணத்தை தூக்கி எறிந்த சில மணி நேரங்களில் கைது செய்யப்பட்டார். தற்போது இவரை ஹாங்காங் போலீசார் விசாரித்து வருகிறார்கள். பொது அமைதியை கெடுத்ததாக இவர் மீது வழக்கு பதியப்பட்டு இருக்கிறது.


காரணம் என்ன  
இவர் மக்களுக்கு உதவ வேண்டும் என்று இப்படி செய்ததாக கூறியுள்ளார். ஏழை மக்கள் பயன் பெற வேண்டும் என்று பணத்தை வீசியதாக கூறப்படுகிறது. நான் ஒரு ராபின் ஹுட் போல செயல்பட வேண்டும் என்று ஆசைப்பட்டு பணத்தை வீசி எறிந்தேன் என்று இவர் கூறியுள்ளார்.

சில வழக்கு  
அதே சமயம் இவர் மீது ஏற்கனவே சிலர் மோசடி புகார்கள் உள்ளது. இவர் கிரிப்டோகரன்சியை வைத்து மோசடி செய்ததாக கூறுகிறார்கள். நிறைய பணக்காரர்களை இவர்கள் இப்படி ஏமாற்றி இருக்கிறார் என்றும் இவர் மீது புகார் உள்ளது.

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


புயலையும் கொடுத்து பொரியலுக்கு மீனையும் கொடுத்த பேய்ட்டி!சென்னைவாசிகள் புயல் என்றாலே வருத்தப்படுகிறார்கள், ஆனால் ஆந்திரவாசிகளோ மகிழ்ச்சியில் திளைத்தார்கள். 


ஏன் தெரியுமா, பேய்ட்டி புயலின்போது அவர்களுக்கு மழையுடன் மீனும் சேர்ந்து கிடைத்தது. வங்கக் கடலில் பேய்ட்டி புயல் உருவானது. இந்த புயல் சென்னைக்கு வரும் என கூறியபோது சென்னை மக்கள் கடும் அச்சத்தில் இருந்தனர். 
 (தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!

அவர்கள் முன் வர்தா, தானே புயல் நினைவுக்கு வந்தது. இதையடுத்து அந்த புயல் மதியாதார் தலைவாசல் மிதியாதே என பழமொழிக்கேற்ப ஆந்திர மாநிலத்துக்கு சென்றது. அங்கு இரு நாட்களுக்கு முன் கரையை கடந்தது.நல்ல பெயர் 
அப்போது பலத்த காற்று வீசியதுடன் கனமழை பெய்தது. கஜா அளவுக்கு சேதத்தை ஏற்படுத்தாவிட்டாலும் பேய்ட்டி நல்ல பெயரை வாங்கிவிட்டு சென்று விட்டது.


வீடியோ வைரல் 
கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள யானம் என்ற இடத்தில் உள்ள அமலாபுரம் பகுதியில் மழையுடன் சேர்ந்து மீன்களும் வந்ததாம். சுமார் 100 மீன்கள் வரை மழையுடன் சேர்ந்து வந்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இதை ஒருவர் வீடியோவாக எடுத்து அதை ஷேர் செய்துள்ளார்.மீன்கள் வரவில்லை
ஆலங்கட்டி மழை சரி, அதெப்படி மீன் மழை என யோசனையில் இந்த வீடியோவை பார்ப்பவர்களுக்கு தொற்றிக் கொண்டது. இது குறித்து வானிலை ஆய்வாளர்கள் கூறுகையில் வானில் இருந்து மீன்கள் வரவில்லை.


காற்றின் வேகம்  
பேய்ட்டி போன்ற வலுவான புயல்கள் கரையை கடக்கும் போது சில நேரங்களில் நீர் நிலைகளில் உள்ள மீன்கள், தவளைகள் ஆகியவற்றை கரையில் போட்டு விடும். மேலும் புயல் காலங்களில் காற்றின் வேகம் காரணமாக நீரின் தன்மை மாறுபடும்.மீன் மழை அல்ல 
அப்போது மீன் சுவாசிக்க தேவையான கரையும் தன்மை கொண்ட ஆக்சிஜன் அளவு குறையும். இதனால் மீன்கள் குளங்கள், குட்டைகளை விட்டு வெளியேற முயற்சிக்கும். அச்சமயம் புயல் காற்று அடித்துக் கொண்டு நிலத்தில் போட்டுவிடும். அறிவியல் ரீதியாக இன்னும் நிரூபணம் ஆகாத நிலையில் இதை மீன் மழை என நாம் சொல்லக் கூடாது என்றனர்.

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts

Featured Post

ரத்தம் சொட்ட சொட்ட.. மனைவியின் தலையுடன் தெருவில் நடந்து சென்ற இளைஞர்..

பட்டபகலில் மனைவியின் தலையை வெட்டி, ரத்தம் சொட்ட சொட்ட.. கையில் வைத்து கொண்டு தெருவில் நடந்து சென்ற இளைஞரை கண்டு பொதுமக்கள் அலறி அடி...

நமது சேனலில் வீடியோக்களை காண்க

சமூக சீரழிவு செய்திகள்