Run World Media: 12/24/18

எங்களது பிற செய்திகளை இங்கு தேடவும்

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Monday, December 24, 2018

பகல் முழுவதும் திருவான்மியூர் பீச்சில் பிச்சைக்காரர் வேடம்.. இரவானால் வீடு புகுந்து திருடும் வேடம்காலையில் தெருக்களில் பிச்சையெடுப்பது போல் நடித்து இரவு நேரங்களில் வீடு புகுந்து கொள்ளையடித்து வந்த திருடனை போலீஸார் கைது செய்தனர்.

 
சென்னை புறநகர் பகுதிகளில் பழவந்தாங்கல், மடிப்பாக்கம், பள்ளிக்கரணை, சேலையூர், ஆதம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் பூட்டப்பட்ட வீடுகளின் பூட்டை உடைத்து கொள்ளை சம்பவங்கள் நடந்து வந்தன.
(தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!

இதுகுறித்து புகார்கள் வந்ததை அடுத்து ஆதம்பாக்கம் காவல் துறை சார்பில் சம்பவம் நடந்த இடங்களில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். 
 
இதில் ராமநாதபுரத்தை சேர்ந்த முகமது அனீஸ் என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில் திருவான்மியூர் கடற்கரையில் பிச்சைக்காரர் வேடத்தில் பகல் முழுவதும் தூங்கிவிட்டு விட்டு பின்னர் ரயில் ஏறி சென்று சில பகுதிகளில் உள்ள வீடுகளை கண்காணிப்பாராம். அதில் எந்த வீட்டில் பாதுகாப்பு குறைபாடு உள்ளதோ அந்த வீட்டிற்குள் இறங்கி திருடிவிட்டு தப்பிவிடுவது அனீஸின் பணியாக இருந்தது. இதையடுத்து போலீஸார் அவரை கைது செய்தனர். பின்னர் அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்தனர்.

அரியானாவில் கடுமையான பனிமூட்டம்… ஒரே நேரத்தில் 50 வாகனங்கள் மோதி விபத்து.. 7 பேர் பலிஅரியானா மாநிலத்தில் நெடுஞ்சாலையில் 50 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. 

 
இந்த விபத்தில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இந்தியாவின் வட மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கடும் பனிப்பொழிவு காணப்படுகிறது.
 (தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!

பகல் நேரத்திலும் கடுமையான பனிமூட்டம் காணப்படுவதால், விபத்தை தவிர்ப்பதற்காக, வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கை எரியவிட்டபடியே சாலையில் வாகனங்களை இயக்குகின்றனர்.


இந்நிலையில், அரியானா மாநிலத்தில், ரோஹ்தக் - ரேவாரி தேசிய நெடுஞ்சாலையில் கடும் பனிமூட்டத்தால், வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகின. முன்னால் சென்ற வாகனங்கள் விபத்தில் சிக்கியதை அறியாமல், பின்னால் வந்த வாகனங்களும் அதிவேகமாக ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டன. தேசிய நெடுஞ்சாலையில் மொத்தம் 50க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி ஏற்பட்ட விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் கவலைக்கிடமான முறையில் இருப்பதால், மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

' அஜித்துக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலை'....போனி கபூர் தயாரிப்பில் அஜித் நடிக்க உள்ள பிங்க் திரைப்படம் ரசிகர்களை ஏமாற்றமடைய செய்துள்ளது. 

 
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அஜித்துக்கு ரசிகர்கள் பட்டாளம் மிக அதிகம். ரசிகர் மன்றங்களை கலைத்துவிட்டாலும், சமூக வலைதளங்களில் அவரது ரசிகர்கள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். 
 (தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!
மாஸ் ஹீரோவாக இருந்தாலும், குணச்சித்திர வேடங்களில் நடிப்பதிலும் அஜித்துக்கு விருப்பம் அதிகம். அதேபோல நல்லவன் இமேஜ் கொண்ட பாத்திரங்கள் தான் என்றில்லாமல், மங்காத்தா போன்ற எதிர்மறையான கதாபாத்திரங்களிலும் அவர் நடிக்க தயங்கியதில்லை.


எதிர்மறையான மங்காத்தா  
மங்காத்தாவை பொறுத்தவரைஇ அது ஒரு டிரெண்ட் செட்டராகவே அமைந்தது. ரசிகர்களிடம் தன்னை நல்லவனாக தான் காட்டிக்கொள்ள வேண்டும் என்று தான் பெரும்பாலமான ஹீரோக்கள் நினைப்பார்கள். ஆனால் தன்னை எப்படி காட்டிக்கொண்டாலும், ரசிகர்கள் கொண்டாடுவார்கள் என அஜித் நிரூபித்த படம் தான் மங்காத்தா.


சிறுத்தை சிவா படங்கள்
அந்த படத்தை தொடர்ந்து சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடித்த வீரம், வேதாளம், விவேகம் ஆகிய மூன்று படங்களுமே மாஸ் ஹீரோ படங்கள் தாம். குறிப்பாக இந்த படங்களில் அண்ணன் தம்பி, அண்ணன் தங்கச்சி, கணவன் மனைவி என குடும்ப செண்டிமெண்ட் அதிகமாக இருக்கும்.


விரைவில் விஸ்வாசம் 
இவர்களது கூட்டணியில் நான்காவதாக வரவுள்ள படம் தான் விஸ்வாசம். இதில் தூக்குதுரை கதாபாத்திரத்தில் வரும் அஜித்,கிராமத்து ஹீரோவாக நடித்துள்ளார். இந்த படமும் குடும்ப செண்டிமெண்ட் படம் தான்.


பிங்க் ரீமேக்  
ஆனால் அவரது அடுத்தப்படம் இதில் இருந்து முற்றிலும் வேறுபட்டது. இந்தியில் அபிதாப் பச்சன், டாப்ஸி நடித்த பிங்க் படித்தின் ரீமேக் தான் இது. இந்த படத்தை எச்.வினோத் இயக்க, மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கனவர் போனி கவுர் தயாரிக்கிறார்.


அபிதாப் ரோலில் அஜித் 
இந்த படத்தில் அபிதாப்பின் ரோலில் அஜித் நடிக்கிறார். அது ஒரு கெஸ்ட் ரோல் என்பதால், படத்தில் அஜித் தனது ரசிகர்கள் விரும்பும் காட்சிகளை இடம்பெற செய்வாரா என்பது கேள்விக்குறி தான். ஏனென்றால், இயக்குனரின் வேலைகளில் அஜித் அவ்வளவாக தலையிடமாட்டார். அதுவும் எச்.வினோத் போன்ற ஒரு இயக்குனரின் வேலையில் அவர் தலையிடவே மாட்டார் என்பது அவரை அறிந்தவர்களுக்கு நன்றாக தெரியும்.


அஜித்துக்கு செட்டாகுமா?
பிங்க் படத்தை பொறுத்த வரை அமிதாப் பச்சன் பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணுக்காக வாதாடுவார். கிட்டத்தட்ட தமிழில் பல ஆண்டுகளுக்கு முன் வெளியான பிரியங்கா படத்தில் ரேவதிக்காக பிரபு வாதாடுவதைப் போல. இந்த ரோலில் நடிப்பதில் அஜித்துக்கு எந்த பிரச்சினையும் இருக்காது. ஆனால் அவரது ரசிகர்கள் இதை ஏற்றுக்கொள்வார்களாக என்பது கேள்விக்குறியே.

திருப்பூரில் பட்டப்பகலில் பகீர் கொலை.. கொலைக்கான காரணத்தை துண்டு பிரசுரமாக கொடுத்த கொடூரன்!திருப்பூரில் பட்டப்பகலில் ஜோசியர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 


திருப்பூரின் குமரன் ரோடு அருகே இந்த சம்பவம் நடந்து இருக்கிறது. இன்று காலை 11 மணி அளவில் இந்த கொலை நடந்துள்ளதாக தெரிகிறது. இந்த கொலை குறித்து திருப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். 
(தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!


யார் கொலை  
கொல்லப்பட்ட நபர் பெயர் ரமேஷ் (எ) குமார். இவர் கிளி ஜோசியராக வேலை பார்த்து வந்துள்ளார். இன்று மதியம் குமரன் ரோட்டில் இவர் சென்று கொண்டு இருந்த போது வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

கொலைகாரன் யார் 
இவரை கொன்றது யார் என்று தெரியவில்லை. கொலை செய்த நபர் ஹெல்மெட் அணிந்து இருந்தான். போலீசார் இவனை தீவிரமாக தேடி வருகிறார்கள். ஜோசியர் ரமேஷ் சம்பவ இடத்திலேயே பலியாகிவிட்டார்.

என்ன காரணம்
கொலை செய்த பின் கொலைகாரன் மக்களை நோக்கி ''இவன் பெண்களை ஏமாற்றினான். அதனால்தான் கொன்றேன்'' என்று கூறியுள்ளான். அதேபோல் இந்த ஜோசியர் ரமேஷ், பல பெண்களை ஏமாற்றி இருக்கிறான் என்றும் துண்டு பிரசுரங்களை மக்களிடம் அந்த கொலைகாரன் வழங்கியுள்ளான்.

வீடியோவாக வந்தது  
இந்த கொலை சம்பவம் தற்போது வீடியோவாக வெளியாகி உள்ளது. கொலைகாரன் ரமேஷை கொன்றுவிட்டு, பின் பைக்கில் ஏறி தப்பித்துள்ளான். மக்கள் கொலையை வேடிக்கை பார்க்கும் நிகழ்வும் இதில் பதிவாகி உள்ளது.

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


கிறிஸ்துமஸ்க்காக நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் சேர்ந்து செய்த வேலை...நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் சேர்ந்து தங்கள் வீட்டில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை துவக்கியுள்ளனர். 


நடிகை நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் நீண்ட நாட்களாக காதலித்து வருகின்றனர். நானும் ரவுடி தான் படத்தில் இருந்து இருவருக்குள்ளும் காதல் இருந்து வருகிறது.
  (தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!
இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாக தகவல் பரவினாலும், நயன்தாராவின் சினிமா வாழ்க்கையை கவனத்தில் கொண்டு அந்த திட்டத்தை தள்ளிப்போட்டு வருகின்றனர். இருப்பினும் லிவிங் டுகேதர் பாணியில் இருவரும் ஒரே வீட்டில் தான் வசிக்கின்றனர்.

சுற்றுலா புகைப்படம்  
மேலும் அவ்வப்போது வெளிநாடு மற்றும் இந்தியாவிற்குள்ளும் இருவரும் சுற்றுலா செல்வதும் வழக்கம். அப்போது எடுக்கப்படும் புகைப்படங்களை விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் தங்கள் சமூக வலைதளப்பக்கங்களில் வெளியிடுவர்.

கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்
அதுபோல் தற்போது சில புகைப்படங்களை அவர்கள் வெளியிட்டுள்ளனர். அதில் நயன்தாரா வீட்டில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்கான வேலைகளில் இருவரும் ஈடுபட்டுள்ளனர். இருவரும் சேர்ந்து கிறிஸ்துமஸ் மரம் செட் செய்து அலங்கரித்துள்ளனர்.

கிறிஸ்துமஸ் செல்பி  
அந்த மரத்திற்கு அருகில் இருந்தபடியே இருவரும் செல்பி எடுத்து அதனை தங்களது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். அதில், "கிறிஸ்துமஸ் மரம் செட் செய்துவிட்டோம். இனி எங்கும் கொண்டாட்டம் தான்", என நயன்தாரா தெரிவித்துள்ளார்.

ரசிகர்கள் கமெண்ட்  
இதற்கு நயன்தாரா ரசிகர்கள் பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர். "வாவ் அற்புதமான ஜோடி, சூப்பர் தலைவி", என்பது உள்பட ஏராளமான கமெண்ட்டுகள் விழுந்த வண்ணம் உள்ளன. மேலும் நயன்தாராவின் தீவிர ரசிகர்கள் சிலர், இந்த புகைப்படங்களை வாட்ஸ்அப் குழுக்களில் பகிர்ந்தும் வருகின்றனர்.

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts

பால் குடித்துவிட்டு தூங்கிய பெண் குழந்தை பலி.. மூச்சுத்திணறலா? பெண் சிசு கொலையா?கொருக்குப்பேட்டையில் பால் குடித்துவிட்டு தூங்கிய 2 மாத பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


சென்னை கொருக்குப்பேட்டை சிபி ரோடு ரயில்வே காலனி குடிசை பகுதியை சேர்ந்தவர் மணி (28). இவருடைய மனைவி தேவி (25). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். (தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!

கடந்த அக்டோபர் மாதம் இவர்களுக்கு 3 ஆவதாக ஒரு பெண் குழந்தை பிறந்தது. இன்று அதிகாலை 4 மணியளவில் குழந்தை அழுததால் குழந்தைக்கு பால் கொடுத்துவிட்டு தூங்க வைத்துள்ளனர்.

மருத்துவமனைக்கு

காலையில் எழுந்து குழந்தையை குளிக்க வைப்பதற்காக தூக்கியபோது குழந்தை எந்தவித அசைவும் கொடுக்காததால் பதறியடித்து கொண்டு உடனடியாக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

உயிரிழப்பு  

அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள் குழந்தை ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு ஆர்.கே. நகர் போலீஸார் விரைந்து குழந்தையின் உயிரிழப்பு குறித்து விசாரணை மேற்கொண்டனர்.

காரணம்  

குழந்தையின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பின்னரே குழந்தையின் உயிரிழப்பிற்கான காரணம் தெரியவரும் என போலீஸார் தெரிவித்தனர்.

பரபரப்பு  

பால் குடிக்கும் போது மூச்சுத்திணறி குழந்தை இறந்துவிட்டதா அல்லது ஏற்கெனவே இரு பெண் குழந்தைகள் இருக்க மூன்றாவதாக ஒரு பெண் குழந்தை பிறந்ததால் திட்டமிட்டு கொல்லப்பட்டதா என போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். கொருக்குப்பேட்டை பகுதியில் இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


த்ரிஷாவுடன் என்ன தான் உறவு: பிரபல இயக்குனரிடம் சொன்ன ராணாத்ரிஷாவுடனான உறவு குறித்து விளக்கம் அளித்துள்ளார் நடிகர் ராணா. பாகுபலி படத்தில் வேலை செய்த பிரபாஸ், ராணா, இயக்குனர் எஸ்.எஸ். ராஜமவுலி ஆகியோர் காபி வித் கரண் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள்.

 
நிகழ்ச்சியை நடத்திய பாலிவுட் இயக்குனர் கரண் கோஹார் கேட்ட கேள்விகளுக்கு எல்லாம் பதில் அளித்தார்கள்.
(தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!

ராணா
சிங்கிளாக உள்ளீர்களா என்று கரண் பிரபாஸ் மற்றும் ராணா ஆகியோரை பார்த்து கேட்டார். அதற்கு இருவருமே ஆமாம் என்றார்கள். சிங்கிளாக இருப்பது தான் சிறந்தது என்றார் ராணா. அப்படி என்றால் நீங்கள் நடிகை த்ரிஷாவை காதலிக்கவில்லையா என்று கரண் ராணாவை பார்த்து கேள்வி எழுப்பினார்.

காதல்  
த்ரிஷாவை நான் காதலிக்கவே இல்லை. 10 ஆண்டுகளாக அவர் என் நல்ல நண்பர் மட்டுமே. ஆனால் எங்களுக்கு இடையே சரிபட்டு வரவில்லை என்று தெரிவித்தார் ராணா. ராணா, பிரபாஸ் ஆகியோரில் ராணா தான் முதலில் திருமணம் செய்து கொள்வார் என்றார் ராஜமவுலி. ஆனால் அந்த திருமணம் எவ்வளவு காலம் நிலைக்கும் என்பது தெரியவில்லை என்று மேலும் தெரிவித்தார் ராஜமவுலி.

தோழிகள்
தனக்கு friends with benefits இருந்ததாகவும், இருப்பதாகவும் தெரிவித்தார் ராணா. தனக்கு அப்படி யாரும் இல்லை என்று கூறிய பிரபாஸ் பின்னர் நிகழ்ச்சியில் பொய் சொன்னதாக கூறினார். ராணாவின் பெயர் அவ்வப்போது ஏதாவது ஒரு நடிகையுடன் அடிபடும் நிலையில் அவர் இப்படி தெரிவித்துள்ளார்.

அனுஷ்கா  
தற்போதுள்ள நடிகைகளில் தீபிகா படுகோனே தான் மிகவும் ஹாட்டான நடிகை என்றார் ராணா. பிரபாஸை கத்ரீனா கைஃபுடன் செட் அப் செய்வேன், கிசுகிசுக்க ரன்பிர் கபூரை அழைப்பேன், தெலுங்கு திரையுலகில் கவர்ச்சியான நடிகை என்றால் அது அனுஷ்கா தான் என்று தெரிவித்தார் ராணா.

பிரபாஸ்
ராணாவை த்ரிஷாவுடன் செட் அப் செய்வேன், தெலுங்கு திரையுலகில் கவர்ச்சியான மற்றும் எனக்கு பிடித்த நடிகை என்றால் அது அனுஷ்கா தான். இந்த பதிலை வைத்து எதையும் யூகிக்க வேண்டாம். பாலிவுட் நடிகை தீபிகாவை பார்த்தால் அசந்து போவதாக கூறினார் பிரபாஸ்.

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts

படுக்கைக்கு செல்ல மறுத்ததால் 8 மாதங்களாக பட வாய்ப்பு இல்லாமல் இருந்த அதிதிபாலியல் தொல்லையால் 8 மாதங்களாக பட வாய்ப்பு இல்லாமல் இருந்ததாக நடிகை அதிதி ராவ் ஹைதரி தெரிவித்துள்ளார். 


பாலியல் தொல்லை குறித்து துணிச்சலாக பேசிய நடிகைகளுக்கு நடந்ததை பார்த்து மற்றவர்கள் அமைதியாகியுள்ளனர்.
 (தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!
இந்நிலையில் பாலிவுட் நடிகை அதிதி ராவ் ஹைதரி துணிச்சலாக பேசியுள்ளார். விசாகப்பட்டினத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அதிதி பேசியதாவது,

சினிமா 
என்னை ரொம்பவே பொத்திப் பொத்தி வளர்த்துவிட்டார்கள். அதனால் சினிமா துறைக்கு வந்தபோது ரொம்ப அப்பாவியாக இருந்தேன். அந்த வதந்திகள் எல்லாமே உண்மை என்பது எனக்கு தெரியாது. (பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைப்பது). அது எல்லாம் நடந்து கொண்டிருந்தது.

நம்பிக்கை 
எனக்கு அப்படி ஒன்றும் மோசமாக நடக்கவில்லை. இருப்பினும் ஒரு சம்பவம் நடந்தது. அதனால் நான் பெரிதாக பாதிக்கப்படவில்லை. இருந்தாலும் இது அல்லது அது என்று எனக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. நான் அப்படி ஒன்றும் பட வாய்ப்பு தேவை இல்லை என்று நினைத்து நடையை கட்டிவிட்டேன். அதன் பிறகு எனக்கு பட வாய்ப்புகள் கிடைக்கும் என்ற நம்பிக்கையை இழந்துவிட்டேன்.

சம்பவம் 
அந்த சம்பவத்திற்கு பிறகு 8 மாதங்களாக எனக்கு வேலை இல்லை. பாதிக்கப்பட்டவர்கள் அது குறித்து பேச அவர்களுக்கு கால அவகாசம் அளிக்க வேண்டும். அவர்கள் தயாராக இருந்தால் மட்டுமே அது குறித்து பேச வேண்டும். அப்படி பேசவில்லை என்றால் ஓ, பணம் வாங்கியிருப்பார், இல்லை என்றால் மிரட்டி அமைதியாக இருக்குமாறு கூறியிருப்பார்கள் என்று மக்கள் பேசுவார்கள்.

அதிதி  
தங்களுக்கு எது சரி என்று படுகிறதோ அதை தான் தான் செய்ய வேண்டும். மீ டூ இயக்கம் வேறு மாதிரியாக திசை திரும்புகிறது. நீ பேச வேண்டும். இல்லை என்றால் விட்டுக் கொடுத்துவிடுகிறாய் என்று அர்த்தம் என்பது போன்று சென்று கொண்டிருக்கிறது என்கிறார் அதிதி. பாலியல் தொல்லை குறித்து அதிதி பேசுவது இது முதல் முறை அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


Featured Post

ரத்தம் சொட்ட சொட்ட.. மனைவியின் தலையுடன் தெருவில் நடந்து சென்ற இளைஞர்..

பட்டபகலில் மனைவியின் தலையை வெட்டி, ரத்தம் சொட்ட சொட்ட.. கையில் வைத்து கொண்டு தெருவில் நடந்து சென்ற இளைஞரை கண்டு பொதுமக்கள் அலறி அடி...

நமது சேனலில் வீடியோக்களை காண்க

சமூக சீரழிவு செய்திகள்