வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: 2019-01-13
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Saturday, January 19, 2019

தாசில்தாரை சிறைப்பிடித்த விஏஓக்கள்: திருக்கழுக்குன்றத்தில் நள்ளிரவு பரபரப்பு


திருக்குழுக்குன்றம் தாசில்தாரை விஏஓக்கள் சிறைப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டம் திருக்கழுக்குன்றம் தாசில்தாராக மனோகரன் பணியாற்றி வருகிறார்.



இவர், விஏஓக்களை மிரட்டி தவறான சான்றிதழ்கள் வழங்க நிர்ப்பந்தித்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த 13ம் தேதி புதுப்பட்டினம் கிராமத்தில் உள்ள ஒரு இடத்தில் கூட்டுப்பட்டாவில் சம்பந்தமில்லாத நபரை சேர்த்து பட்டா வழங்கும்படி புதுப்பட்டினம் விஏஓ (பொறுப்பு) மணிக்கு தாசில்தார் மனோகரன் நிர்ப்பந்தம் செய்ததாக தெரிகிறது. அதற்கு அவர், ‘தவறான சான்றிதழ் வழங்க முடியாது’ என்று மறுத்துவிட்டாராம். 


இதனால் ஆத்திரம் அடைந்த தாசில்தாரர், ‘உயரதிகாரியான நான் சொல்லும் சான்றிதழை நீங்கள் வழங்கிதான் ஆக வேண்டும். இல்லையென்றால் துறைரீதியாக நடவடிக்கை எடுப்பேன்’ என்று மிரட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து, சக விஏஓக்களிடம் மணி கூறி வருத்தப்பட்டு உள்ளார்.

இந்நிலையில், விஏஓக்கள் அனைவரும் நேற்றிரவு, திருக்கழுக்குன்றம் தாலுகா அலுவலகத்தில் திரண்டனர். தாசில்தார் அலுவலகத்துக்குள் புகுந்து, தாசில்தாரை வெளியே விடாமல் சிறைபிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. நள்ளிரவு வரை சிறைப்பிடித்து வைத்ததால் மேலும் பரபரப்பு ஏற்பட்டது.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் மாமல்லபுரம் டிஎஸ்பி எட்வர்ட், திருக்கழுக்குன்றம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அனுமந்தன் ஆகியோர் நள்ளிரவு 12.30 மணியளவில் தாசில்தார் அலுவலகத்துக்கு விரைந்தனர். சம்பந்தப்பட்ட விஏஓக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, தாசில்தாரை விடுவித்தனர்.
எனினும் விஏஓக்கள் போராட்டம் இரவு முழுவதும் தொடர்ந்தது. இன்று காலையிலும் இந்த போராட்டம் நீடித்தது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகாக்களில் இருந்தும் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட விஏஓக்கள், இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர். தாசில்தார் மனோகரன் மீது உயரதிகாரிகள் துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கான உத்தரவாதம் அளிக்கும்வரை இந்த போராட்டம் தொடரும்’ என்றனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.



Friday, January 18, 2019

6 தலைமுறையினர் ஒன்றுகூடினர்: ஒரே குடும்பத்தை சேர்ந்த 361 பேர் கொண்டாடிய காணும் பொங்கல்

சின்னாத்தேவர் ஆங்கிலேயர் காலத்தில் ரேகை சட்டத்தை எதிர்த்ததினால் சிறையில் அடைக்கப்பட்டார். இதனால் அவருக்கு ஜெயில் சின்னாத்தேவர் என்று பெயர் வந்தது.





உசிலம்பட்டி அருகே உள்ள கல்லூத்து கிராமத்தை சேர்ந்தவர் ஜெயில் சின்னாத் தேவர்-வீரம்மாள் தம்பதி. சின்னாத்தேவர் ஆங்கிலேயர் காலத்தில் ரேகை சட்டத்தை எதிர்த்ததினால் சிறையில் அடைக்கப்பட்டார். இதனால் அவருக்கு ஜெயில் சின்னாத்தேவர் என்று பெயர் வந்தது. இவருக்கு 4 மகன்களும், 2 மகள்களும் உண்டு.
 (தொடர்ச்சி கீழே...)
 இதையும் படிக்கலாமே !!!

இந்த வாரிசுகள் வெளிநாடு, வெளியூர்களில் ஆங்காங்கே வசித்து வருகின்றனர். இந்தநிலையில் ஜெயில் சின்னத்தேவரின் வாரிசுகள் அனைவரையும் ஒன்று சேர்த்து, உறவை மேம்படுத்தும் வகையில் ஒரு விழா எடுக்க முடிவு செய்தனர்.


அதன்படி காணும் பொங்கல் அன்று ஜெயில் சின்னாத்தேவரின் வாரிசுகள் 6 தலைமுறையினர் அனைவரும் உசிலம்பட்டியில் ஒரு மண்டபத்தில் ஒன்றுகூடினர். 
முதலில் அவர்கள் பொங்கல் வைத்து கொண்டாடினர். தொடர்ந்து ஒருவொருவர் தங்களை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஜெயில் சின்னாத்தேவரின் கடைசி மகனான ராசுத்தேவர் (வயது 97) மேடையில் நின்று அவரின் வாரிசுகளை வாழ்த்தி ஆசி வழங்கினார்.


அவர் கூறுகையில், எனது தந்தையின் 6 தலைமுறையை சேர்ந்த 361 வந்துள்ளனர். இப்படி எனது பேர பிள்ளைகளை ஒன்றாக நான் பார்பேன் என்று கனவில் கூட நினைத்து பார்த்ததில்லை. ஆனால் இன்று அனைவரையும் ஒரே இடத்தில் பார்த்தது எனக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இப்படி உறவுகளை வளர்த்துக் கொண்டால் ஏதாவது ஒரு வழியில் உறவுகள் ஒருவருக்கு ஒருவர் உதவியாக இருக்கும். மேலும் முதியோர் இல்லம், ஆனாதை ஆசிரமம் போன்றவை குறைந்து விடும் என்றார்.



 கண்ணுக்கு தெரியாத ஊர்களில் வசித்து வந்த உறவினர்கள் ஒன்றுகூடிய நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவரும் ஒருவரை ஒருவர் சந்தித்து மகிழ்ந்தனர். இந்த விழாவில் இலங்கை, அந்தமான், சீனா போன்ற நாடுகளில் வசித்து வருபவர்களும், சென்னை, பெங்களூரு, சேலம், ஈரோடு போன்ற பகுதிகளில் இருந்து வந்திருந்தனர்.


ஆண்களே! முகம் கழுவும் போது இந்த தவறுகளை செய்யாதீங்க...

ஆண்கள் பலர் தங்களின் அழகைப் பராமரிக்க அதிக நேரம் செலவழிக்க மாட்டார்கள். ஏன் க்ரீம்கள், மாய்ஸ்சுரைசர்கள் என்று எதையும் பயன்படுத்தமாட்டார்கள். 


ஆனால் இக்காலத்தில் அதிகப்படியான மாசடைந்த சுற்றுச்சூழல் மற்றும் தூசிகளால் கட்டாயம் ஒவ்வொருவரும் சருமத்திற்கு போதிய பராமரிப்பை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகிறது.
(தொடர்ச்சி கீழே...)
 இதையும் படிக்கலாமே !!!

அதுமட்டுமின்றி, தற்போது சில ஆண்கள் பெண்களுக்கு இணையாக தங்கள் அழகின் மீது அக்கறை காட்டத் துவங்கியுள்ளார்கள். ஆனால் பெரும்பாலானோர் அப்படி இல்லை. அத்தகைய ஆண்களிடம் சாதாரணமாக முகத்தைக் கழுவ என்ன பயன்படுத்துகிறீர்கள் என்று கேட்டால், 10 இல் 8 பேர், சோப்பைத் தவிர வேறு எதுவும் இல்லை என்று சொல்வார்கள்.
முகம் கழுவுவது சாதாரணமாக இருக்கலாம். ஆனால் அந்த சாதாரணமான விஷயத்தில் சிறு தவறு செய்தால் கூட, சருமத்தின் ஆரோக்கியம் பாழாகும். இங்கு ஆண்களின் சரும ஆரோக்கியத்தைக் கெடுக்கும் சில விஷயங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.


அதிகமாக முகம் கழுவுவது  

அளவுக்கு அதிகமாக முகத்தை கழுவினால், விரைவில் சருமம் முதுமையாக காட்சியளிக்கும். சோப்பு என்பது உடலுக்கு தானே தவிர, முகத்திற்கு அல்ல. நாளுக்கு ஒருமுறை முகத்திற்கு பயன்படுத்தலாம். ஆனால் அழுக்கு போக வேண்டுமென்று சோப்பைக் கொண்டு அடிக்கடி முகத்தை கழுவினால், அதனால் சருமத்தின் pH அளவு பாதிக்கப்படும். இதனால் சருமத்தின் ஈரப்பசை குறைந்து, வறட்சி அதிகரித்து, நாளடைவில் அதுவே சருமத்தை முதுமையாக வெளிப்படுத்தும். ஆகவே முகத்தைக் கழுவ மைல்டு கிளின்சரைப் பயன்படுத்தலாம்.


வாசனைமிக்க கிளின்சர்கள்  

வாசனை சூப்பராக உள்ளது என்று பலர் நல்ல நறுமணமிக்க கிளின்சர்களைப் பயன்படுத்துவார்கள். உண்மையில் நறுமணம் வீசும் கிளின்சர்களில் கெமிக்கல் அதிகம் இருக்கும். எனவே அதனைக் கொண்டு முகத்தை அதிகம் கழுவினால், அது சருமத்தில் உள்ள இயற்கை எண்ணெயை முற்றிலும் நீக்கி, எரிச்சல் மற்றும் அரிப்பை ஏற்படுத்தும். உங்கள் சருமம் சென்சிடிவ் என்றால், டீ-ட்ரீ ஆயில் நிறைந்த கிளின்சரைப் பயன்படுத்துங்கள். அதுவே முகப்பரு அதிகம் இருந்தால், சாலிசிலிக் ஆசிட் நிறைந்த கிளின்சரைப் பயன்படுத்துங்கள்.


ஸ்கரப்  

சருமத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்த ஸ்கரப் செய்ய வேண்டும். இதனால் சருமத் துளைகளில் தங்கியுள்ள அழுக்குகள் அரனைத்தும் வெளியேறி, சருமத்தின் நிறம் மேம்பட்டு காணப்படும். மேலும் ஸ்கரப் செய்வதற்கு சிறந்த நேரம் இரவு தான். இரவு நேரத்தில் சரும செல்கள் புதுப்பிக்கப்படுவதால், இரவில் ஸ்கரப் செய்வது நல்லது. சில ஆண்கள் தினமும் ஸ்கரப் பயன்படுத்துவார்கள். இப்படி தினமும் பயன்படுத்தினால் சருமத்துளைகள் தான் பாதிக்கப்படும். ஆகவே வாரத்திற்கு 2 முறை ஸ்கரப் செய்வது நல்லது.


படுக்கும் முன் முகம் கழுவாமல் இருப்பது  

சில ஆண்கள் இரவில் படுக்கும் முன் முகத்தைக் கழுவமாட்டார்கள். ஆனால் இப்படி கழுவாமலேயே இருந்தால், சருமத்துளைகளை அடைத்துள்ள அழுக்குகள் அப்படியே படிந்து, நாளடைவில் அது சருமத்தில் முகப்பருக்களையும், முகத்தை பொலிவின்றியும் வெளிப்படுத்தும். எனவே தினமும் படுக்கும் முன் முகத்தை கழுவாமல் படுக்காதீர்கள்.


ஈரப்பதமிக்க டிஸ்யூ பேப்பர்கள்  

ஈரப்பதமிக்க டிஸ்யூ பேப்பர்களில் கலந்துள்ள வாசனையூட்டும் கெமிக்கல்களை அளவுக்கு அதிகமாக முகத்தில் பயன்படுத்தினால், அதனால் சருமத்தில் உள்ள எண்ணெய் பசை முற்றிலும் நீக்கப்பட்டு, முகத்தில் வறட்சி ஏற்பட்டு, அதனைத் தொடர்ந்து அரிப்புக்கள் ஏற்படும். எனவே முகத்தை சுத்தம் செய்கிறேன் என்று ஈரப்பதமிக்க டிஸ்யூ பேப்பர்களை அளவுக்கு அதிகமாக பயன்படுத்தாதீர்கள்.


சுடுநீரில் கழுவுவது  

குளிர்காலத்தில் சுடுநீரைத் தான் பெரும்பாலானோர் பயன்படுத்துவார்கள். ஆனால் அப்படி சுடுநீரை முகத்திற்கு அதிகம் பயன்படுத்தினால், அதனால் சருமத்தில் வறட்சி அதிகரித்து, அதன் மூலம் சருமத்தில் சுருக்கங்களும் அதிகமாகும். வேண்டுமெனில் வெதுவெதுப்பான நீரில் அல்லது குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவலாம்.

பொண்டாட்டி பாஸ்வோர்டு கேட்ட சொல்லிடுங்க.! இல்லனா கொளுத்திடுவாங்க ஜாக்கிரதை.!

மொபைல் போன் இன் ரகசிய பாஸ்வோர்டு எண்களைச் சொல்ல மறுத்த கணவனை, உயிருடன் நெருப்பிட்டு கொளுத்திய மனைவியின் கொடூர கொலை முயற்சி சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் உறையவைத்துள்ளது.



இந்தோனேசியாவைச் சேர்ந்த தம்பதியினர் டேடி பூர்னாமா(26) மற்றும் அவரது மனைவி இலம் காஹானி(25) இடையிலான ஒரு சிறிய வாக்குவாதம் கொலை முயற்சி வரை சென்று ஒருவரின் உயிரைப் பறித்துள்ளது.
(தொடர்ச்சி கீழே...)
 இதையும் படிக்கலாமே !!!


பாஸ்வோர்டு எண்களை தரமறுத்த கணவன்  

டேடி பூர்னாமாவிடம் அவரின் மனைவி இலம் காஹானி, தனது கணவரின் மொபைல் போன் பாஸ்வோர்டு எண்களைக் கேட்டிருக்கிறார். பாஸ்வோர்டு எண்களை தரமறுத்த டேடி பூர்னாமாவிடம் கோபம் கொண்ட மனைவி காஹானி சண்டையிட துவங்கியுள்ளார்.


பூர்னாமாவை உயிருடன் கொளுத்திய மனைவி  

இருவரின் வாக்குவாதம் சிறிது நேரத்தில் கைகலப்பிற்கு சென்று விட்டது. தனது பாஸ்வோர்டு எண்களை காஹானியிடம் தெரிவிக்க முடியாதென்று பூர்னாமா, காஹானியை அடிக்கத்துவங்கியுள்ளார். ஆத்திரம் அடைத்த மனைவி காஹானி அருகில் இருந்த பெட்ரோல் கேனை எடுத்து பூர்னாமா மீது ஊற்றி சிகிரெட் பற்றவைக்கும் லைட்டர் மூலம் பூர்னாமாவை உயிருடன் கொளுத்தி இருக்கிறார்.


இருதினங்களாக தீவிர அவசரசிகிச்சை பிரிவில் சிகிச்சை 

நெருப்பு பற்றிய பூர்னாமா அலறி வீட்டிலிருந்து வெளியே ஓடி இருக்கிறார். அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து நெருப்பை அணைத்து விரைவாக அருகிலிருந்த கெரூக் ஹெல்த் சென்டர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று தீவிர அவசரசிகிச்சை பிரிவில் அவரை அனுமதித்துள்ளனர். 


மனைவி காஹானி கைது  

அதிகப்படியான தீக்காயங்களுடன் அனுமதிக்கப்பட்ட பூர்னாமா இரண்டு நாள் சிகிச்சைக்கு பின் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கணவனை உயிருடன் கொளுத்திய குற்றத்திற்காக அவரின் மனைவி காஹானி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கட்டிய கணவனை மொபைல் பாஸ்வோர்டு எண்ணிற்காக உயிருடன் கொளுத்திய சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

1.900 கிராம் தங்கத்தில் பொங்கல் அடுப்பு, பானை, காளைமாடு…

ஆம்பூர் அருகே 1 கிராம் 900 மில்லி தங்கத்தில் பொங்கல் அடுப்புடன் கூடிய பானை மற்றும் காளைமாடு செய்து நகை தொழிலாளி ஒருவர் சாதனை படைத்துள்ளார். 


வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த சான்றோர்குப்பம் பகுதியை சேர்ந்தவர் தேவன். அவர் ஆம்பூர் ஷராப் பாஜாரில் 35 ஆண்டுகளாக நகைத்தொழில் செய்து வருகிறார்.பரம்பரை நகைத் தொழிலாளியான இவர், கின்னஸ்சாதனைப் புரிவதற்காக மில்லி கிராம்தங்கத்தில் நுண்ணிய அளவில் பல்வேறுமாதிரி பொருட்களை திறம்பட உருவாக்கி வருகிறார்.
(தொடர்ச்சி கீழே...)
 இதையும் படிக்கலாமே !!!

ஏற்கனவே மிகச்சிறிய அளவில் இந்திய வரை படத்தை உருவாக்கியிருந்தார். ஆம்பூரில் புகழ்பெற்ற காலணிகள், தங்கத்தில் தூய்மை இந்தியா மாதிரி வரைபடம், கிரிக்கெட் உலகக் கோப்பையின் மாதிரி வடிவம், திருக்குறள்சுவடி, மகாத்மா காந்தி, அப்துல்கலாம், மறைந்த முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, ஆகியோரின் உருவப்படங்களை ஏற்கனவே வரைந்துள்ளார்.

தமிழக அரசின் பசுமை வீட்டையும் அவர் உருவாக்கி உள்ளார். அது மட்டுமின்றி கடந்தமாதம் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, 3 கிராம் 700 மில்லி தங்கத்தில் இயேசு கிறிஸ்துவின் பிறப்பையும் தத்ரூபமாக காட்டும் வகையில் கிறிஸ்துமஸ் குடில் உட்பட பலவற்றை உருவாக்கியுள்ளார்.
இந் நிலையில், பொங்கல் பண்டிகையையொட்டி, 1 கிராம் 900 மில்லி தங்கத்தில் மிக நுண்ணிய அளவில் மூன்று கரும்பு, பானை, அடுப்பு, விறகு,காளை மாடு, கரண்டி ஆகியவற்றைத்தத்ரூபமாக உருவாக்கி சாதனை படைத்துள்ளார். 24 மணி நேர இடைவிடாத தொடர் முயற்சியால் இவற்றை உருவாக்கியதாக நகைத் தொழிலாளி தேவன் கூறினார். மேலும் கின்னஸ் சாதனையில் இடம் பெறவேண்டும். அதுவரையில் தொடர்ந்து மிக குறைந்த அளவிலான தங்கத்தில் பல பொருட்களை செய்வதாக கூறினார்.

“பிரண்டிடா.. நாங்க பிரண்டிடா..” ஓவியா ஆர்மிக்கு புது ‘ரிங்டோன்’ தந்த சிம்பு!

ஓவியா நடிக்கும் 90 எம் எல் படத்தின் வீடியோ பாடல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. களவாணி படம் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமான ஓவியா. 


பிக் பாஸ் முதல் சீசன் மூலம் தமிழக மக்களிடையே மிகவும் பிரபலமானார். பிக் பாஸ் வீட்டில் அவர் நடந்து கொண்ட விதம் மக்களுக்கு மிகவும் பிடித்துப் போனதால், இன்றளவும் அவரை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
(தொடர்ச்சி கீழே...)
 இதையும் படிக்கலாமே !!!

பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த பிறகு பல படங்களில் ஒப்பந்தமானார் ஓவியா. அவற்றில் ஒன்று தான் 90 எம் எல். அனித் உதீப் இயக்கும் இப்படத்திற்கு நடிகர் சிம்பு இசையமைத்துள்ளார். நடிப்பிற்கு இடையேயும் இப்படத்திற்கு இசையமைக்கும் வேலைகளில் அவர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். 

இந்நிலையில், இப்படத்தில் இடம் பெறும் 'பிரண்டிடா' என்ற பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. லிரிக் வீடியோவாக இந்தப் பாடல் காட்சிகள் உள்ளது. நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இந்த வீடியோ பாடலை வெளியிட்டார். பெண்களுக்கு குறிப்பாக இளம்பெண்களுக்கு பிடித்த பாடலாக இப்பாடல் மாறியுள்ளது. இந்தப் பாடலை ஓவியா ரசிகர்கள் மட்டுமின்றி, சிம்பு ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர். ஏற்கனவே புத்தாண்டையொட்டி இப்படத்தில் இடம் பெற்றிருந்த பீர் பிரியாணி பாடலை படக்குழு வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்திற்கு அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்ய, அந்தோணி படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். விஸ் என்டர்டெயின்மெண்ட் இந்த படத்தை தயாரிக்கிறது.


செல்போன் சார்ஜர் வெடித்து தீ விபத்து: 4 பெண்கள் காயம்.!

இப்போது வரும் ஸ்மார்ட்போன்கள் மற்றும் சார்ஜர் போன்ற புதிய சாதனங்கள் பயன்படுத்த மிகவும் அருமையாக தான் இருக்கும், ஆனால் இவற்றை பயன்படுத்தும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.





சென்னையில் இருக்கும் சூளைமேட்டில் மகேஷ் என்பவருக்கு சொந்தமான பெண்கள் தங்கும் விடுதி உள்ளது, இங்கு 20-க்கும் மேற்பட்ட பணிக்கு செல்லும் பெண்கள் தங்கியுள்ளனர், இதில் பொங்கல் விடுமுறைக்கு சிலர் மட்டும் சொந்த ஊருக்கு சென்றுள்ளனர் என்று கூறப்படுகிறது.
(தொடர்ச்சி கீழே...)
 இதையும் படிக்கலாமே !!!


திடீரென தீ விபத்து 

பின்பு குறிப்பிட்ட பெண்கள் மட்டும் அந்த விடுதியில் தங்கியுள்ளனர், இந்நிலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு விடுதி புகை மண்டலமாக மாறியது. உடனே அருகில் இருந்தவர்கள் விடுதியின் உரிமையாளர் மகேஷ்க்கு தகவல் கொடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது..


மகேஷ்  

மேலும் உடனடியாக அங்கு விரைந்து வந்த மகேஷ், தீயை அணைக்க முயற்சி செய்துள்ளார். அப்போது அவருக்கு தீ காயம் ஏற்பட்டது. அதனையடுத்து, மகேஷ் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.


தீயணைப்புத்துறையினர்  

குறிப்பாக இதில் 4பெண்களுக்கு மூச்சு திணறல், தலைசுற்றல் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர், பின்பு தீயணைப்பு துறையினர் வந்து தான் தீயை அணைத்தனர், செல்போன் சார்ஜர் வெடித்ததால் இந்த தீவிபத்து ஏற்பட்டுள்ளதாக தீயணைப்புத்துறையினர் தெரிவித்துள்ளனர்.


உங்கள் மொபைல் பேட்டரி வெடிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்.!  

ஸ்மார்ட்போன் வெடித்துச் சிதறும் சம்பவம் அடிக்கடி அரங்கேறத் தான் செய்கின்றது. சமீபத்தில் பல நிறுவனங்களின் கருவிகள் வெடித்த நிகழ்வுகள் சார்ந்த செய்திகளை அனைவரும் அறிந்திருப்பீர்கள். இதே போல் பல்வேறு சம்பவங்களை கூற முடியும். இதனால் தான் உங்களது மொபைல் போன் பேட்டரி வெடிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதை இங்கு விவரித்திருக்கின்றோம்..!


காரணம் 

பேட்டரியை தவறாகத் தயாரிக்கப்பட்டிருந்தாலோ அல்லது வேறு ஏதும் தவறு இருந்தால் மட்டுமே எவ்வித மின்சாதன பொருளும் வெடிக்கும். இது போன்ற பிழை ஏற்படுவது மிகவும் அரிதான காரியம் ஆகும். ஒருவேளைக் கருவி ஏதும் வெடிக்கும் பட்சத்தில் இதற்குக் காரணம் பேட்டரி மட்டும் கிடையாது. பொதுவாகப் போலி பேட்டரி அல்லது சார்ஜர் பயன்படுத்தும் போது தான் மின்சாதன கருவிகள் வெடிக்கும்.


தெர்மல் ரன் அவே  

பொதுவாக இன்றைய மொபைல்களில் வழங்கப்படும் லித்தியம் அயன் பேட்டரிகள் தெர்மல் ரன் அவே என்ற பிரச்சனையை சந்திக்கின்றன. இது பேட்டரி அதிகளவு சார்ஜ் செய்வதால் ஏற்படும்.


அமைப்பு  

இந்த தெர்மல் ரன் அவே பிரச்சனையை தவிர்க்கவே அதிகளவு சார்ஜ் ஆவதை நிறுத்தும் அமைப்பு பேட்டரிகளில் பொருத்தப்படுகின்றது.


மலிவு விலை  

பொதுவாக விலை குறைவாக கிடைக்கும் லோக்கல் பேட்டரிகளும் ஒரிஜனல் பேட்டரிகளையும் தரம் கொண்டவையாக நம்ப முடியும் என்பர். ஆனால் இது முழுமையாக உண்மை கிடையாது.


மெலிவு  

ஸ்மார்ட்போன் பேட்டரிகள் அளவில் மெலிந்து வருவதால் பேட்டரியினுள் இருக்கும் நேர்மறை மற்றும் எதிர்மறை தகடுகளை பிரிக்கச் சிறிதளவு இடம் மட்டுமே கிடைக்கும்.


ஆபத்து  

இது போன்ற சூழ்நிலைகளில் நேர்மறை மற்றும் எதிர்மறை தகடுகளுக்குள் ஏதேனும் நுழைந்தால் ஆபத்து அதிகமாகும். மேலும் வடிவமைப்பு பணிகளில் தரம் பின்பற்றப்படவில்லை என்றால் பேட்டரி அதிகளவு சார்ஜ் செய்வது ஆபத்தாகும்.


பாதுகாப்பு  

ஒரு வேலை பேட்டரி தயாரிப்பவர்கள் போதுமான வழிமுறைகளை முறையாகப் பின்பற்றி பேட்டரிகளை தயாரிக்கும் பட்சத்தில் பேட்டரி பாதுகாப்பானதாக இருக்கும். மாறாக ஏதேனும் பிழை ஏற்பட்டாலோ பேட்டரி வெடிக்கும் சூழல் அதிகமே.


வெடிக்கும்  

நேர்மறை மற்றும் எதிர்மறை தகடுகளின் சுற்றுகளில் ஏதும் தடை ஏற்படும் சூழலில் பேட்டரிகள் வெடிக்கும் தன்மை பல மடங்கு அதிகமாகும்.


பேட்டரி

பேட்டரிகளை வாங்கும் முன் அவற்றின் விலையை மட்டும் பரிசீலனை செய்யாமல் போலி பேட்டரி மூலம் போன் வெடித்து அதனால் ஏற்படும் செலவையும் கணக்கிட்டால் போலி பேட்டரிகளை வாங்க மனம் வராது.


முறை  

பேட்டரி பயன்பாடுகளில் சூடான வெளியில் கருவியை பொருத்தக் கூடாது, கருவியை நீண்ட நேரம் சார்ஜ் செய்ய கூடாது, முழுமையான சார்ஜ் ஆனதும் கருவியை சார்ஜரில் இருந்து எடுத்து விட வேண்டும் போன்றவற்றையும் தவறாமல் பின்பற்றுவது நல்லது. இதோடு பேட்டரி அளவு 50 சதவீதம் வந்ததும் அதனை சார்ஜ் செய்வது நல்லது. பேட்டரி முழுமையாகத் தீரும் வரை காத்திருந்து ஆதனினை 100 சதவீதம் சார்ஜ் செய்வதை தவிர்க்க வேண்டும்.

Wednesday, January 16, 2019

கீழ்கொடுங்காலூர் காவல் துறையினரின் பலே பலே ரோந்து... முழுசா படியுங்க...



திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டம், கீழ்கொடுங்காலூர் பகுதி என்பது காஞ்சிபுரம் மாவட்ட எல்லைக்கு சுமார் 6 கி.மீ தொலைவில் உள்ளது.  இந்த பகுதியானது மேல்மருவத்தூர் - வந்தவாசி செல்லும் சாலையில் உள்ளது. இந்தப் பகுதியில் செந்தமிழ் மெட்ரிகுலேஷன் பள்ளிக்கு அருகில் வேகத்தடை (Speed Breaker) உள்ளது. 



இங்கு வேகத்தடையே இல்லை என்றாலும் வாகன ஓட்டிகள் நின்று தான் செல்ல வேண்டும் என்பதே நிதர்சன உண்மை. காரணம் என்னவெனில் கீழ்கொடுங்காலூர் காவல்துறையினரின் காவல் நிலையம் இந்த வேகத்தடை பகுதியில் தான். இங்கு தான் இவர்கள் நிலையாக தங்கி கடமை தவறாமல் ரோந்து பணியில் ஈடுபடுவது போன்று அப்பாவி வாகன ஓட்டிகளிடம் காந்தி தாத்தா புகைப்படம் கொண்ட காகிதங்களை வாங்கி பைக்குள் போடும் இடம்.



தினமும் காவலர்கள் பலே வேட்டையில் ஈடுபடுவதால் பாக்கெட்டில் பணம் கொண்டுசெல்ல மக்களிடையே பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது. திருடர்களிடமிருந்து கூட நம் பணத்தை காப்பாத்திவிடலாம் போல ஆனால்.......!!!!!!


ஒருசில வாகன ஓட்டிகள் டபுள் செலவு செய்கின்றனர். ஏன் தெரியுமா...? காஞ்சிபுரம் மாவட்டம், மேல்மருவத்தூர் காவல்நிலையத்திற்குட்பட்ட செண்டிவாக்கத்தில் ரோந்து (வசூல்) பணியில் ஈடுபட்டுள்ள காவல் துறையினரின் கையை மூடிவிட்டு, பின்னர் கீழ்கொடுங்காலூர் காவல் துறையினரின் கையையும் தழுவி கொடுக்க வேண்டும். 

இப்படி ஒரு அவல நிலை இருக்கும் காரணத்தினாலேயே வாகன ஓட்டிகள், பேருந்திலேயே சென்றுவிடலாமா என யோசிக்கும் அளவிற்கு மனமுடைந்துள்ளனர். நீதிமன்றத்தின் தீர்ப்பு பொதுமக்களின் உயிர்க்கு சேதாரம் ஏற்படக்கூடாது என்பதற்காக தான். ஆனால் அந்த தீர்ப்பானது இது போன்ற காவல் துறையினரின் பாக்கெட் நிறைவிற்கும், அதிகார அச்சுறுத்தலுக்கும் தான் வழிவகை செய்கிறது. 

எனவே, இது போன்ற செயல்களில் ஈடுபடும் காவல்துறையினர்களை நவீன தொழில்நுட்பங்களை கொண்டு நீதிமன்றம் கண்கானிக்க உத்தரவிட வேண்டும். மேலும், ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் துறையினர்கள் அனைவரும் கட்டாயமாக கேமரா வைத்திருக்க வேண்டும் என தீர்ப்பு அளிக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல், 10 ரூபாய் பணம் அபராதமாக செலுத்தினால் கூட அந்த நிமிடமே அது Centralized Server மூலம் பதிவேற்றம் செய்யப்பட்டு வாகன ஓட்டியின் கைப்பேசிக்கு குறுஞ்செய்தியாக வர வேண்டும் என்பதே தொழில்நுட்ப யோசனையாளர்களின் உச்சக்கட்ட யோசனை. 

எனவே இந்த அவல நிலைக்கு தமிழக அரசு மற்றும் நீதிமன்றம் மூலமாக முற்றுப்புள்ளி வைக்க ஏதேனும் வாய்ப்பு உள்ளதா என்பதே பொதுமக்களின் ஆதங்கம்.


அச்சிறுபாக்கம் ஒன்றியம் மின்னல் சித்தாமூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சமத்துவ பொங்கல்


அச்சிறுபாக்கம் ஒன்றியம் மின்னல் சித்தாமூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சமத்துவ பொங்கல்...  உடன் : ஊராட்சி செயலர் திரு.M.S.தயாநிதி.. .




Tuesday, January 15, 2019

டிராஃபிக் போலீஸாக ரோபோ அறிமுகம்! Robot as traffic police.in Chennai

சென்னையில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க, முதன்முறையாக டிராஃபிக் போலீஸாக ரோபோ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் போக்குவரத்து நெரிசல் மிக முக்கிய பிரச்சினையாக உள்ளது. 
இதற்கென்று போக்குவரத்து காவலர்கள் நியமிக்கப்பட்டு, நெரிசலைச் சீர்ப்படுத்தி வந்தாலும், முழுமையாகக் கட்டுப்படுத்த முடியவில்லை.
இந்த நிலையில், ROADEO என்று பெயரிடப்பட்ட டிராஃபிக் போலீஸ் ரோபோவை நேற்று (ஜனவரி 14) சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் அறிமுகப்படுத்தியுள்ளார். இது சாலை போக்குவரத்தைச் சீரமைத்தல், மாணவர்கள் சாலையை கடக்க உதவுவது உள்ளிட்ட பல பணிகளை மேற்கொள்ளவுள்ளது.
இதை புளூடூத் மூலமும் இயக்க முடியும். மக்களுடன் தொடர்பு கொள்ளவும், போக்குவரத்து சிக்னல்களைக் காண்பிக்கவும் ரோபோவுக்கு இரண்டு கைகள் உள்ளன. பக்கத்தில் உதவுவதற்கு ஒருவர் உள்ளார் என்ற உணர்வை உண்டாக்கும் வகையில் இதனுடைய கண்கள் உள்ளன. இந்த ரோபோவில் முக்கிய செய்திகள் திரையில் ஓடிக் கொண்டிருக்கும்.
சென்னையைச் சேர்ந்த தனியார் ரோபாட்டிக்ஸ் ஆய்வகத்தின் மாணவர்கள், இந்த ரோபோவை வடிவமைத்துள்ளனர். மும்பைக்கு அடுத்தபடியாக போக்குவரத்துப் பணியில் ரோபோக்களை நியமிக்கும் இரண்டாவது நகரமாகச் சென்னை உள்ளது.

16 பள்ளி மாணவிகள் கர்ப்பம்: பேரதிர்ச்சியில் பள்ளி நிர்வாகம்


ஜிம்பாவேவில் 16 பள்ளி மாணவிகள் கர்ப்பமாக இருப்பது பள்ளி நிர்வாகத்தினரையும், பெற்றோரையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஜிம்பாப்வேயின் சிருமன்சு மாகாணத்தில் உள்ள ஓர்டன் டிரிவிட் என்ற பள்ளியில் படித்து வரும் மாணவிகளுக்கு தேசிய எய்ட்ஸ் கவுன்சில் சார்பில் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 16 மாணவிகள் கர்ப்பமடைந்திருப்பது தெரியவந்தது. இந்த மாணவிகள் கர்ப்பத்திற்கு காரணமானது யார் என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மாணவிகள் கர்ப்பமானது பள்ளி நிர்வாகத்தினரையும், பெற்றோரையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Monday, January 14, 2019

நல்ல கொழுப்பு கறியா போடுடா.. 75 வயது கடைக்காரரிடம் போலீஸார் அடாவடி.. மன்னிப்பு கேட்க வைத்த கமிஷனர்

"2 கிலோ கறி போடுடா" என்று வயதான மட்டன்கடைக்காரரை போலீஸ் அதிகாரிகள் தாக்கிய சம்பவம்தான் விவகாரமாக வெடித்து கிளம்பியது. சேலம் கம்மாளப்பட்டி பகுதியை சேர்ந்தவர் மூக்குத்திக்கவுண்டர். 75 வயதாகிறது.


இவர், அன்னதானப்பட்டி போலீஸ் ஸ்டேஷன் அருகே மட்டன் கடை வைத்திருக்கிறார். 
 (தொடர்ச்சி கீழே...)
 இதையும் படிக்கலாமே !!!

அன்னதானப்பட்டி ஸ்டேஷனில் வேலை பார்க்கும் சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சிவபெருமாள் ஆகிய 2 பேரும் இந்த கடையில்தான் எப்பவுமே ஓசியில் மட்டன் வாங்கி போவதுதான் வழக்கம். ஒருநாளும் இவர்கள் வாங்கிய கறிக்கு காசு தந்ததே கிடையாது.


மட்டன் போடுடா 

இந்நிலையில் நேற்று கறி கடையில் வியாபாரம் நடந்து கொண்டிருந்தது. அந்தநேரம் பார்த்து ரெண்டு போலீஸ் அதிகாரிகள் உட்பட 3 பேரும் ஜீப்பில் வந்து கடைக்கு வந்தனர். அப்போது, ஜீப்பில் உட்கார்ந்துகொண்டே, "2 கிலோ கொழுப்பா மட்டன் போடுடா" என்று சத்தமாக கேட்டனர். என கறிக்கடைக்காரரிடம் சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சிவபெருமாள், அதிகாரமாக கேட்டதாக கூறப்படுகிறது.


கெட்ட வார்த்தைகள் 

அதற்கு மூக்குத்தி கவுண்டர், "நான் உங்களை விட வயசில் பெரியவன். கொஞ்சம் மரியாதையாக பேசுங்கள்" என்றார். இதைக் கேட்டதும் கோபமடைந்த 3 போலீஸ்காரர்களும், ஜீப்பை விட்டு கீழே இறங்கி வந்து, மூக்குத்திக்கவுண்டர், அவருக்கு உதவியாக கடையில் நின்றிருந்த அவருடைய மனைவி ராமாயியை கெட்ட கெட்ட வார்த்தைகளில் திட்டி இருக்கிறார்கள்.


ஏன் அடிச்சீங்க?  

பிறகு மூக்குத்தி கவுண்டரை ஆத்திரம் தீராமல், அடித்து உதைத்து ஜீப்பில் ஏற்றி வலுக்கட்டாயமாக போலீஸ் ஸ்டேஷனுக்கும் கொண்டு சென்றதாக தெரிகிறது. விஷயம் கேள்விப்பட்ட மூக்குத்தி கவுண்டர் மகன் விஜயகுமார் ஸ்டேஷன் சென்று, "எதுக்காக என் அப்பாவை அடிச்சீங்க?" என்று கேட்டார். இதை கேட்ட அங்கிருந்த போலீஸ்காரர் விஜயகுமாரையும் சரமாரியாக அடித்ததாக கூறப்படுகிறது.


ரத்த காயங்கள் 

கடைசியாக ஒரு வெள்ளை பேப்பரில் தந்தை-மகன் இருவரிடமும் போலீசார் கைரேகை வாங்கி கொண்டு வீட்டுக்கு அனுப்பிவிட்டனர். போலீசார் அடித்த அடியில் உடம்பெல்லாம் ரத்த காயமடைந்த தந்தையும், மகனும் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இந்த விவகாரம் குறித்து, மாநகர போலீஸ் கமிஷனருக்கு தகவல் பறந்தது. இதையடுத்து, கமி‌ஷனர் சங்கரே இது சம்பந்தமாக விசாரணை நடத்த போவதாக கூறப்பட்டது.


கமிஷனர் சங்கர்  

ஆனாலும், சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சிவபெருமாள் இருவரையும் சேலம் மாநகர போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றி கமி‌ஷனர் சங்கர் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.