For Advertisement
விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...
"2 கிலோ கறி போடுடா" என்று வயதான மட்டன்கடைக்காரரை போலீஸ் அதிகாரிகள்
தாக்கிய சம்பவம்தான் விவகாரமாக வெடித்து கிளம்பியது.
சேலம் கம்மாளப்பட்டி பகுதியை சேர்ந்தவர் மூக்குத்திக்கவுண்டர். 75
வயதாகிறது.
இவர், அன்னதானப்பட்டி போலீஸ் ஸ்டேஷன் அருகே மட்டன் கடை
வைத்திருக்கிறார்.
அன்னதானப்பட்டி ஸ்டேஷனில் வேலை பார்க்கும் சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணி,
சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சிவபெருமாள் ஆகிய 2 பேரும் இந்த கடையில்தான்
எப்பவுமே ஓசியில் மட்டன் வாங்கி போவதுதான் வழக்கம். ஒருநாளும் இவர்கள்
வாங்கிய கறிக்கு காசு தந்ததே கிடையாது.
மட்டன் போடுடா
இந்நிலையில் நேற்று கறி கடையில் வியாபாரம் நடந்து கொண்டிருந்தது. அந்தநேரம்
பார்த்து ரெண்டு போலீஸ் அதிகாரிகள் உட்பட 3 பேரும் ஜீப்பில் வந்து கடைக்கு
வந்தனர். அப்போது, ஜீப்பில் உட்கார்ந்துகொண்டே, "2 கிலோ கொழுப்பா மட்டன்
போடுடா" என்று சத்தமாக கேட்டனர். என கறிக்கடைக்காரரிடம் சப்-இன்ஸ்பெக்டர்
பாலசுப்பிரமணி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சிவபெருமாள், அதிகாரமாக கேட்டதாக
கூறப்படுகிறது.
கெட்ட வார்த்தைகள்
அதற்கு மூக்குத்தி கவுண்டர், "நான் உங்களை விட வயசில் பெரியவன். கொஞ்சம்
மரியாதையாக பேசுங்கள்" என்றார். இதைக் கேட்டதும் கோபமடைந்த 3
போலீஸ்காரர்களும், ஜீப்பை விட்டு கீழே இறங்கி வந்து, மூக்குத்திக்கவுண்டர்,
அவருக்கு உதவியாக கடையில் நின்றிருந்த அவருடைய மனைவி ராமாயியை கெட்ட கெட்ட
வார்த்தைகளில் திட்டி இருக்கிறார்கள்.
ஏன் அடிச்சீங்க?
பிறகு மூக்குத்தி கவுண்டரை ஆத்திரம் தீராமல், அடித்து உதைத்து ஜீப்பில்
ஏற்றி வலுக்கட்டாயமாக போலீஸ் ஸ்டேஷனுக்கும் கொண்டு சென்றதாக தெரிகிறது.
விஷயம் கேள்விப்பட்ட மூக்குத்தி கவுண்டர் மகன் விஜயகுமார் ஸ்டேஷன் சென்று,
"எதுக்காக என் அப்பாவை அடிச்சீங்க?" என்று கேட்டார். இதை கேட்ட அங்கிருந்த
போலீஸ்காரர் விஜயகுமாரையும் சரமாரியாக அடித்ததாக கூறப்படுகிறது.
ரத்த காயங்கள்
கடைசியாக ஒரு வெள்ளை பேப்பரில் தந்தை-மகன் இருவரிடமும் போலீசார் கைரேகை
வாங்கி கொண்டு வீட்டுக்கு அனுப்பிவிட்டனர். போலீசார் அடித்த அடியில்
உடம்பெல்லாம் ரத்த காயமடைந்த தந்தையும், மகனும் ஆஸ்பத்திரியில்
சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இந்த விவகாரம் குறித்து, மாநகர போலீஸ்
கமிஷனருக்கு தகவல் பறந்தது. இதையடுத்து, கமிஷனர் சங்கரே இது சம்பந்தமாக
விசாரணை நடத்த போவதாக கூறப்பட்டது.
கமிஷனர் சங்கர்
ஆனாலும், சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்
சிவபெருமாள் இருவரையும் சேலம் மாநகர போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றி
கமிஷனர் சங்கர் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
விஷாலை போலீசார் கைது செய்து அழைத்துச் செல்லும் புகைப்படங்கள்
வெளியாகி வைரலாகியுள்ளது.
தயாரிப்பாளர் சங்க கட்டிடங்களுக்கு போடப்பட்ட பூட்டை உடைப்பேன் என்று அடம்
பிடித்த தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் அண்மையில் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் அவர் மீண்டும் கைதாகியுள்ள புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
(தொடர்ச்சி கீழே...)
கைது
விஷாலை கைது செய்து போலீசார் அழைத்துச் செல்வது போன்ற புகைப்படங்கள் சமூக
வலைதளங்களில் வெளியாகின. அதை பார்த்த சிலர் அதிர்ச்சி அடைந்தனர். சிலரோ
இந்த விஷாலுக்கு அரஸ்ட் ஆவதே வேலையாப் போச்சு என்று விமர்சித்தனர்.
புகைப்படம்
விஷாலை யாரும் கைது செய்யவில்லை. அவர் நடித்து வரும் அயோக்யா படத்தின் ஒரு
காட்சி தான் அது. அதை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விளம்பரம்
தேடியுள்ளனர். நல்லா தேடுறாங்கய்யா விளம்பரத்த!
செட்
புதுமுகம் வெங்கட் மோகன் இயக்கி வரும் அயோக்யா படத்தில் விஷாலுக்கு ஜோடியாக
ராஷி கன்னா நடித்து வருகிறார். இருவரும் செட்டில் பேசிக் கொண்டிருந்தபோது
எடுத்த புகைப்படங்களும் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
சர்ச்சை
அயோக்யா ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் விஷால் கையில் மது பாட்டில்
வைத்திருந்ததால் சர்ச்சை கிளம்பியது. போலீஸ் அதிகாரியான தான் ஒரு வழக்கை
விசாரிக்கும்போது கிடைக்கும் முக்கிய ஆதாரம் அது. படத்தை பார்க்கும்போது
புரியும் என்று விஷால் விளக்கம் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட நடிகர்கள் தயாராகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியாவில் 50-க்கும் மேற்பட்ட நடிகர்கள் அரசியலில் இருப்பதாக புள்ளி
விவரம் சொல்கிறது. இவர்களில் பலர் அமைச்சர்களாகவும் எம்.பி.,
எம்.எல்.ஏக்களாகவும் பதவி வகித்துள்ளனர். மறைந்த எம்.ஜி.ஆர், ஜெயலலிதா,
என்.டி.ராமராவ் ஆகியோர் முதல்-அமைச்சராகி ஆட்சி நடத்தி உள்ளனர்.
(தொடர்ச்சி கீழே...)
இப்போது கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கி அரசியலில்
குதித்துள்ளார். வருகிற பாராளுமன்ற தேர்தலில் இந்த கட்சி போட்டியிடுகிறது.
ரஜினிகாந்தும் விரைவில் கட்சி தொடங்குகிறார். இந்த வருடம் புதிதாக மேலும்
சில நடிகர்கள் அரசியலுக்கு வருகிறார்கள்.
வில்லன் நடிகர் பிரகாஷ்ராஜ் வருகிற பராளுமன்ற தேர்தலில் சுயேச்சை
வேட்பாளராக போட்டியிடுவதாக அறிவித்து உள்ளார். கர்நாடக மாநிலத்தில் உள்ள
பெங்களூரு மத்திய தொகுதியில் அவர் நிற்கிறார். அவருக்கு ஆம் ஆத்மி கட்சி
ஆதரவு தெரிவித்து உள்ளது. தமிழ் படங்களில் நடித்துள்ள பிரபல மலையாள நடிகர்
மோகன்லால் திருவனந்தபுரம் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட தயாராவதாக
தகவல். பா.ஜனதா கட்சி அவருக்கு டிக்கெட் கொடுக்க ஆர்வமாக உள்ளது. நரேந்திர
மோடியை மோகன்லால் சந்தித்து விட்டு வந்துள்ளார்.
ரஜினிகாந்தின் 2.0 படத்தில் வில்லனாக வந்த அக்ஷய்குமாரும் பாராளுமன்ற
தேர்தலில் டெல்லி அல்லது பஞ்சாப் மாநிலத்தில் ஏதேனும் ஒரு தொகுதியில்
போட்டியிட விரும்புகிறார். நடிகை ஜெனிலியாவின் கணவரும் இந்தி நடிகருமான
ரிதேஷ் தேஷ்முக் காங்கிரஸ் சார்பில் லத்தூர் தொகுதியில் போட்டியிட
முயற்சிக்கிறார்.
சிங்கப்பூரில் மகனை பார்க்க சென்ற தாய் ஒருவர், பிளாட்பாரத்தில்
மிளகாய் வத்தலை காய வைத்து அதற்கு காவலாக பக்கத்திலேயே படுத்து தூங்கிய
காட்சி மனதை உருக்குலைய வைத்துள்ளது.
முன்பெல்லாம் வீட்டில் பெண்களுக்கு மிளகாய் அரைப்பது என்பதே பெரிய வேலை.
இதற்காக மிளகாய், தனியா, மஞ்சள் பொருட்களை வாங்கி சுத்தப்படுத்துவர்.
பிறகு
அதை வெயிலில் காய வைத்து எடுத்து, அதனை வாணலியில் லேசாக வாட்டி எடுத்து,
அதனுடன் சில பொருட்களையும் வாசனைக்காக வறுத்து எடுப்பார்கள்.
கடைசியில் அதற்கென இருக்கும் ஒவ்வொரு டப்பாக்களில் அதனை போட்டு மாவு
மிஷினில் கொடுத்து அரைத்து எடுத்து வந்து, அதனை ஒருபேப்பரில் சூடு போக காய
வைத்து அதே டப்பாக்களில் 6 மாதம் தாங்குவது போல் அரைத்து எடுத்து வைத்து
கொள்வர்.
யாரும் செய்வதில்லை
இதனை தன் மகன், மகள்களுக்கு பிரித்து தரும்போது பெற்ற தாயின் மன சந்தோஷம்
யாராலும் உணர முடியாது. அம்மா கொடுத்த அந்த மிளகாய்தூள் வாசனையுடன்
சேர்த்து பாசமும் ஆறு மாசத்துக்கு தாங்கும். நவீன உலகில் இதை இப்போது
பெரும்பாலும் செய்வதில்லை.
தூங்கி விட்டார்
ஆனால் ஒரு தாய், சிங்கப்பூரில் இருக்கும் தன்னுடைய மகனை பார்க்க
சென்றிருக்கிறார். அப்போது பிளாட்பாரத்தில் மிளகாய், மல்லி, மஞ்சள்
போன்றவற்றை காயவைத்து அதற்கு பக்கத்திலேயே காவலுக்கும் உட்கார்ந்தார்.
உச்சி வெயில் மண்டையை பிளக்க களைப்பான அவர் பேப்பர் ஒன்றினை தரையில்
விரித்து கொஞ்ச நேரத்தில் அப்படியே படுத்து தூங்கியும் விட்டார்.
விதிமுறைகள்
இதை போட்டோ எடுத்து, தனா டெல்டாகாரன் என்பவர் தனது பேஸ்புக்கில் போட்டு தன்
கருத்தையும் உருக்கத்துடன் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில்
"இந்தியாவிலிருந்து யாரோ ஒரு நண்பர் சிங்கப்பூருக்கு அம்மாவை அழைத்து
வந்திருக்கிறார் இங்குள்ள விதிமுறைகள் சட்டதிட்டங்கள் பற்றி கூறாமல்
உள்ளார் போல.
தாய் அன்பு
பணத்தைக்கொடுத்து பொருளை வாங்கித்திண்ணும் நெட்டிசன்களுக்கு, வயலில்
விளைந்ததை பிள்ளைகளுக்காக பொட்டலம் கட்டி வானூர்தியில் கொண்டு வந்து, அதை
வெயில் உலர்த்தி தேக்காவில் உள்ள மில்லில் அரைத்துக்கொண்டு வந்து
பிள்ளைகளுக்கு சமைக்க எண்ணிய தாயன்பு ஏளனம் செய்து பதிவிடும் உயர்தட்டு
கணிணி உலக நண்பர்களுக்கு புரியாது. உழவை அறியாத பூமி, அறியாமையை ஏளனம்
செய்வது வேதனை" என பதிவிட்டுள்ளார்.
மனது கஷ்டப்பட்டது
அந்தம்மா மிளகாய், மல்லி, மஞ்சள் என மசாலா பொருள்களை நடைபாதையில் காயவைத்து
அதற்கு பாதுகாவலராக பக்கத்திலேயே படுத்து உறங்கியும் உள்ளார்.
உள்ளூர்வாசிகள் பேஸ்புக்கில் அதை பதிவிட்டுள்ளனர். பார்க்க கொஞ்சம் மனது
கஷ்டப்பட்டது. பெற்றோரை வரவழைக்கும் போது இது போன்ற செயல்களை தவிர்க்க
அறிவுறுத்துங்கள்.
சொத்துக்காக பெற்ற தகப்பனையே அடியாட்கள் வைத்து தெருவில் தூக்கி வீசி
மகள் செய்த காரியம் தமிழக மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.
ஓசூர்
மூவேந்தர் நகர் பகுதியில் வசித்து வருபவர் தனராஜ். 80 வயதான இவர் ஓய்வு
பெற்ற காவல்துறை அதிகாரி ஆவார். ராஜ்குமார், பாபு என்ற இரு மகன்களும்,
தனலட்சுமி என்ற மகளும் உள்ளனர்.
பிள்ளைகள் அனைவருக்கும் தனராஜ் கல்யாணம் செய்து விட்டார். ஆனால் மனைவி இறந்துவிடவும், பிள்ளைகள் அவ்வப்போது இவரை கவனித்து வந்தனர்.
(தொடர்ச்சி கீழே...)
கேன்சர் நோயாளி
தன்ராஜ் தனக்கு சொந்தமான ஒரு வீட்டை மகள் தனலட்சுமிக்கு தான பத்திரமாக
எழுதி கொடுத்துள்ளார். ஆனால் மகள் இப்போது அமெரிக்காவில் கணவருடன் வசித்து
வருவதால், மகளுக்கு எழுதி கொடுத்த வீட்டில்தான் தனராஜ் வசித்து வருகிறார்.
80 வயதான தனராஜ் கேன்சர் நோய் பாதிக்கப்பட்டுள்ளார்.
சொத்து தகராறு
இந்நிலையில், மகளிடம் பேச்சுவாக்கில் தானமாக எழுதி கொடுத்த வீடு தனக்குதான்
என்று சொல்லி இருக்கிறார். இதைக் கேட்டதும் தனலட்சுமிக்கு ஆத்திரம் வந்து
விட்டது. உடனடியாக அமெரிக்காவிலிருந்து கிளம்பி ஊருக்கு வந்து விட்டார்.
உடனடியாக வீட்டை தனக்கு தர வேண்டும் என்று சொல்லி, தகராறில் ஈடுபட்டார்.
கூடவே இந்த சொத்து பிரச்சனையில் மருமகனும் சேர்ந்து கொண்டார்.
தெருவில் எறிந்தனர்
வீட்டை தருவதில் சிக்கல் ஏற்பட்டதால் ஆத்திரமடைந்த மகளும், மருமகனும், 10
அடியாட்களை ரெடி செய்து அழைத்து வந்தார்கள். வீட்டில் இருந்த பெற்ற
தகப்பனின் கட்டில், மெத்தை உள்ளிட்ட பொருட்களை தெருவில் வீசி எறிந்தனர்.
அந்த பொருட்களோடு, பெற்ற தகப்பனையும் குண்டு கட்டாக தெருவில் தூக்கி
எறிந்திருக்கிறார்கள். எறிந்த பொருட்களுடன் தனராஜின் மருந்து மாத்திரைகளும்
தெருவில் சிதறி விழுந்தன.
மதிக்கவில்லை
இதை பார்த்து அக்கம் பக்கத்தினர் ஆடிப்போய் விட்டனர். தனராஜின் மனைவி
இருந்தவரை குடும்பத்தை ஒற்றுமையாகவும், அமைதியாகவும் கொண்டு
சென்றிருந்திருக்கிறார். ஆனால் அவர் மறைந்துவிடவும், தனராஜை வீட்டில்
உள்ளவர்கள் மதிக்கவே இல்லை என்று அப்பகுதி மக்கள் வருத்தத்துடன்
சொன்னார்கள்.
80 வயது முதியவர்
ஓய்வு பெற்ற ஒரு போலீஸ் அதிகாரி என்றும் பார்க்காமல், 80 வயது முதியவர்
என்றும் பார்க்காமல், பெற்ற தகப்பன் என்றும் பார்க்காமல்... கேன்சர் நோயாளி
என்றும் பார்க்காமல்.. செல்லமாக வளர்த்த மகளே இப்படி தெருவில் தூக்கி
அப்பாவை எறிந்த சம்பவத்தினை கேட்டு தமிழக மக்கள் அதிர்ச்சியாகி உள்ளனர்.
தனராஜ் முன்னாள் காவல்துறை அதிகாரி என்பதால், இதுகுறித்து ஓசூர் ஹட்கோ
போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Featured Post
பட்டபகலில் மனைவியின் தலையை வெட்டி, ரத்தம் சொட்ட சொட்ட.. கையில் வைத்து கொண்டு தெருவில் நடந்து சென்ற இளைஞரை கண்டு பொதுமக்கள் அலறி அடி...