வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: Latest Jobs News
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...
Showing posts with label Latest Jobs News. Show all posts
Showing posts with label Latest Jobs News. Show all posts

Tuesday, December 07, 2021

அரசு வேலை | செங்கல்பட்டு மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு | Govt Job in Chengalpattu District | வில் அம்பு செய்திகள் | Vil Ambu News

மாவட்ட சுகாதார சங்கத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் பல்நோக்கு சுகாதார பணியாளர், மத்திய நிலை சுகாதார வழங்குநர் காலியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு கல்வித்தகுதியாக 12 ஆம் வகுப்பு, பி. எஸ்சி நர்சிங், டி.ஜி.என்.எம் கொடுக்கப்பட்டுள்ளது.


இந்த வேலைவாய்ப்புக்கு பணியிடமாக செங்கல்பட்டு கொடுக்கப்பட்டுள்ளது. தகுதியுடையோர் மற்றும் திறமைமிக்க விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். 

தகுதி மற்றும் விருப்பம் உடையவர்கள் இந்த வேலைக்கு உடனே விண்ணப்பியுங்கள்.

நிறுவனம்:  மாவட்ட சுகாதார சங்கம்

பணியின் பெயர்:  பல்நோக்கு சுகாதார பணியாளர், மத்திய நிலை சுகாதார வழங்குநர்

கல்வித்தகுதி:  12 ஆம் வகுப்பு, பி. எஸ்சி நர்சிங், டி.ஜி.என்.எம்

பணியிடம்:  செங்கல்பட்டு

தேர்வு முறை:  நேர்காணல்

மொத்த காலியிடங்கள்:  197

விண்ணப்பிக்கும் முறை:  ஆன்லைனில் படிவம் பதிவிறக்கி நேரில் அனுகவும்

கடைசி தேதி:  15/12/2021

முழு விவரம்:  https://www.chengalpattu.nic.in/notice_category/recruitment என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள்.

இந்த வேலைக்கு தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் இந்த அறிவிப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள்.


சமீபத்திய செய்திகள் 

Tuesday, January 29, 2019

வேலைவாய்ப்பு - மெட்ரோ ரெயில்வேயில் வேலை. விண்ணப்பிக்க கடைசி நாள் 2-2-2019

மெட்ரோ ரெயில் நிறுவனங்களில் ஒன்று பெங்களூரு மெட்ரோ.



சுருக்கமாக பி.எம்.ஆர்.சி.எல். என அழைக்கப்படும் இந்த நிறுவனம் தற்போது ஜூனியா் என்ஜினீயா், செக்சன் என்ஜினீயர் மற்றும் மெயின்டனர் போன்ற பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. 
  (தொடர்ச்சி கீழே...)
 இதையும் படிக்கலாமே !!!

மொத்தம் 174 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
இதில் மெயின்டனர் பணிக்கு 134 இடங்களும், ஜூனியர் என்ஜினீயர் பணிக்கு 21 இடங்களும், செக்சன் என்ஜினீயர் பணிக்கு 19 இடங்களும் உள்ளன.
10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் 2 ஆண்டு ஐ.டி.ஐ. படித்தவர்கள் மெயின்டனர் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். 3 ஆண்டுகள் கொண்ட டிப்ளமோ என்ஜினீயரிங் படித்தவர்கள் ஜூ‌னியர் என்ஜினீயர் பணிக்கும், என்ஜினீயரிங் பட்டப்படிப்பு படித்தவர்கள் செக்சன் என்ஜினீயர் பணிகளுக்கும் விண்ணப்பிக்கலாம்.
35 வயதுக்கு உட்பட்ட பொது பிரிவினர் விண்ணப்பிக்கலாம். மாற்றுத்திறனாளிகள், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் ஓ.பி.சி. பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படுகிறது.

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். 2-2-2019-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். இது பற்றிய விரிவான விவரங்களை http://bmrc.co.in/ என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

வேலைவாய்ப்பு - அனல்மின் நிறுவனத்தில் என்ஜினீயர்களுக்கு வேலை - 207 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். விண்ணப்பிக்க கடைசி நாள் ஜனவரி 31

அனல்மின் நிறுவனத்தில் ‘கேட்’ தேர்வு அடிப்படையில் என்ஜினீயர்களுக்கான பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. மொத்தம் 207 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.




தேசிய அனல்மின் நிறுவனம் சுருக்கமாக என்.டி.பி.சி. என அழைக்கப்படுகிறது. தற்போது இந்த நிறுவனத்தில் எக்சிகியூட்டிவ் டிரெயினி-2019 பணியிடங்களை கேட் 2019 தேர்வின் அடிப்படையில் நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. 
 (தொடர்ச்சி கீழே...)
 இதையும் படிக்கலாமே !!!

மொத்தம் 207 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். என்ஜினீயரிங் பிரிவு வாரியாக பணியிடங்கள் விவரம் : எலக்ட்ரிக்கல் - 47, மெக்கானிக்கல் - 95, எலக்ட்ரானிக்ஸ் - 25, இன்ஸ்ட்ருமென்டேசன் - 25, மைனிங் - 15.
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்ப்போம்...

வயது வரம்பு

விண்ணப்பதாரர்கள் 31-1-2019-ந் தேதியில் 27 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும்.

கல்வித்தகுதி

எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், எலக்ட்ரானிக்ஸ், இண்டஸ்ட்ரியல் என்ஜினீயரிங், புரொடக்சன், தெர்மல், மெக்கானிக்கல் அண்ட் ஆட்டோமேசன், பவர் என்ஜினீயரிங், இன்ஸ்ட்ருமென்டேசன், எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ், பவர் சிஸ்டம்ஸ், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் இன்ஸ்ட்ருமென்டேசன், மைன் என்ஜினீயரிங் உள்ளிட்ட பிரிவுகளில் என்ஜினீயரிங் பட்டப்படிப்பு படித்து, கேட் 2019 தேர்வு எழுதுபவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செய்யும் முறை

கேட் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவார்கள். ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்காணல் நடத்தப்பட்டு தகுதியானவர்கள் பணி நியமனம் செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசிநாள் ஜனவரி 31-ந் தேதியாகும்.

வேலைவாய்ப்பு - ரெயில்பெட்டி தொழிற்சாலையில் அப்ரண்டிஸ் வேலை - 220 பேருக்கு வாய்ப்பு

சென்னை ஐ.சி.எப்.-ல் ரெயில்பெட்டி தொழிற்சாலை செயல்படுகிறது.
தற்போது இந்த நிறுவனத்தில் பட்டதாரி மற்றும் டிப்ளமோ என்ஜினீயர்களை பயிற்சிப் பணியில் சேர்க்க விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. 


மொத்தம் 220 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் பட்டதாரிகளுக்கு 100 இடங்களும், டிப்ளமோ என்ஜினீயர்களுக்கு 120 இடங்களும் உள்ளன. 
 (தொடர்ச்சி கீழே...)
 இதையும் படிக்கலாமே !!!

எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு 30 இடங்களும், மெக்கானிக்கல் என்ஜினீயரிங் பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு 70 இடங்களும் உள்ளன. 
டிப்ளமோ பிரிவில் எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் படித்தவர்களுக்கு 40 இடங்களும், மெக்கானிக்கல் படித்தவர்களுக்கு 80 இடங்களும் உள்ளன.
அப்ரண்டிஷிப் விதிமுறைக்கு உட்பட்ட வயது வரம்புடையவர்கள் பயிற்சி யில் சேர்க்கப்படுவார்கள். விண்ணப்பதாரர் குறிப்பிட்ட உடல் தகுதி பெற்றிருக்க வேண்டும்.
விருப்பமுள்ளவர்கள் http://www.mhrdnats.gov.in/ என்ற இணையதளத்திற்குச் சென்று தங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும். தேவையான சான்றுகளை பதிவேற்றம் செய்ய வேண்டும். பிப்ரவரி 6-ந் தேதிக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும். தகுதியான விண்ணப்பதாரர்களின் பட்டியல் என்ற இணையதளத்தில் 28-2-2019-ந் தேதி வெளியிடப்படும்.

வேலைவாய்ப்பு - துணை ராணுவத்தில் 429 பணியிடங்கள். விண்ணப்பிக்க கடைசிநாள் 20-2-2019

துணை ராணுவ படையில் 429 ஹெட்கான்ஸ்டபிள் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இது பற்றிய விவரம் வருமாறு:-








மத்திய தொழிற்சாலைகள் பாதுகாப்பு படை சுருக்கமாக சி.ஐ.எஸ்.எப். என அழைக்கப்படுகிறது. துணை ராணுவ படைப்பிரிவுகளில் ஒன்றான இந்த பிரிவில் தற்போது ஹெட்கான்ஸ்டபிள் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
 (தொடர்ச்சி கீழே...)
 இதையும் படிக்கலாமே !!!

மொத்தம் 429 போ் தேர்வு செய்யப்படுகிறார்கள். நேரடி சேர்க்கையின் மூலம் 328 ஆண்களும், 37 பெண்களும் சேர்க்கப்படுகிறார்கள். 64 பணியிடங்கள் எல்.டி.சி.இ. (துறையினருக்கான போட்டி) இடங்களாகும்.
இந்த பணியில் சேர விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை பார்க்கலாம்...

வயது வரம்பு

விண்ணப்பதாரர்கள் 20-2-2019-ந் தேதியில் 18 வயது பூர்த்தி அடைந்தவர்களாகவும், 25 வயதுக்கு உட்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும்.

கல்வித்தகுதி

பிளஸ்-2 மற்றும் இன்டர்மீடியட் படித்தவர்கள் இந்த பணியில் சேர விண்ணப்பிக்கலாம்.

கட்டணம்

பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினர் ரூ.100 செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பெண் விண்ணப்பதாரர்கள் இந்த கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.

உடல்தகுதி

விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் ஆண்கள் 165 செ.மீ. உயரமும், பெண்கள் 155 செ.மீ. உயரமும் இருக்க வேண்டும். வயது மற்றும் உயரத்திற்கேற்ற எடையளவு, கண்பார்வைத்திறன் பரிசோதிக்கப்படும். குறிப்பிட்ட பிரிவினருக்கும், பெண்களுக்கும் உயரம் மற்றும் மார்பளவு உள்ளிட்டவற்றில் சில விதிவிலக்குகள் அனுமதிக்கப்படுகிறது.


தேர்வு செய்யும் முறை

எழுத்துத் தேர்வு மற்றும் உடல்தகுதி, மருத்துவ பரிசோதனை ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் சேர்க்கப்படுகிறார்கள்.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசிநாள் 20-2-2019-ந் தேதியாகும்.

வேலைவாய்ப்பு - ராணுவத்தில் சட்டம் படித்தவர்கள் சேரலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி 14-2-2019

ராணுவத்தில் ‘ஜேக் என்ட்ரி ஸ்கீம் (JAG 23-வது பேட்ஜ்) என்ற பயிற்சி சேர்க்கையின்படி சட்டப்படிப்பு படித்த பட்டதாரிகள் ராணுவத்தில் சேர்க்கப்பட்டு வருகிறார்கள். 

தற்போதைய 23-வது சேர்க்கையில் 7 ஆண்களும், 7 பெண்களும் சேர்க்கப்படுகிறார்கள்.
 (தொடர்ச்சி கீழே...)
 இதையும் படிக்கலாமே !!!


இதில் சேர விரும்பபுபவர்கள் 1-7-2019 தேதியில் 21 முதல் 27 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். 

எல்.எல்.பி. சட்டப்படிப்பை 55 சதவீத மதிப்பெண்களுடன் நிறைவு செய்தவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். இவர்கள் பார் கவுன்சிலில் பெயரை பதிவு செய்திருக்க வேண்டும்.
நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விருப்பம் உள்ளவர்கள் https://joinindianarmy.nic.in என்ற இணைய தளம் வழியாக 14-2-2019-ந் தேதிக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம்.



Sunday, January 20, 2019

[வேலை வாய்ப்பு] - ஆவின் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு - சம்பளம் எவ்வளவு தெரியுமா? - கடைசி தேதி : 11.02.2019



தமிழக அரசிற்கு உட்பட்டு கன்னியாகுமரியில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு (ஆவின்) நிறுவனத்தில் காலியாக உள்ள தொழில்நுட்பவியாளர் பணியிடத்தினை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உடையோர் விண்ணப்பித்துப் பயனடையலாம்.




நிர்வாகம் : தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு (ஆவின்) 
மேலாண்மை : தமிழக அரசு 
மொத்த காலிப் பணியிடம் : 01 
பணி : தொழில் நுட்பவியலாளர் 
கல்வித் தகுதி : 10-வகுப்பு தேர்ச்சி 
முன் அனுபவம் : தேவை இல்லை 
வயது வரம்பு : 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும். 
ஊதியம் : ரூ.19,500 முதல் ரூ.62,000 வரையில்


விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் http://aavinmilk.com என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து அதனைப் பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும். 
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : The General Manager, Kanyakumari District Co-operative Milk Producers‟ Union Limited, K.P.Road, Nagercoil, Kanyakumari District - 629003. 
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 11.02.2019 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். 
தேர்வு முறை : கல்வித் தகுதி மற்றும் வாய்வழி தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும் விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://www.aavinmilk.com/hrkanapp110119.pdf அல்லது http://aavinmilk.com என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.


Monday, December 17, 2018

[வேலை வாய்ப்பு] ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தில் வேலைவாய்ப்பு - டிப்ளமோ என்ஜினீயரிங் தகுதி கடைசிநாள் டிசம்பர் 27



ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தில் டெக்னீசியன் உள்ளிட்ட பணியிடங்களுக்கு 566 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இது பற்றிய விவரம் வருமாறு:- 




இந்திய எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழக நிறுவனம் சுருக்கமாக ஓ.என்.ஜி.சி. என அழைக்கப்படுகிறது. முன்னணி பொதுத்துறை நிறுவனமான இதில் தற்போது டெக்னீசியன், ஜூ‌னியர் அசிஸ்டன்ட் உள்ளிட்ட பணிகளுக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது.
  (தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!

மொத்தம் 422 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் அதிகபட்சமாக அசிஸ்டன்ட் டெக்னீசியன் (புரொடக்சன் பணிக்கு 108 இடங்களும், ஜூ‌னியர் அசிஸ்டன்ட் (பி அண்ட் ஏ) பணிக்கு 31 இடங்களும், ஜூனியர் ரஸ்அபவுட் பணிக்கு 42 இடங்களும் உள்ளன. சிமென்டிக், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், இன்ஸ்ட்ருமென்டேசன், மெக்கானிக்கல் போன்ற பிரிவுகளிலும் அசிஸ்டன்ட் டெக்னீசியன் பணிக்கு கணிசமான இடங்கள் உள்ளன.
 

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை அறிவோம்...

வயது வரம்பு


ஒவ்வொரு பணிக்கும் வயது வரம்பு வேறுபடுகிறது. 35 வயதுக்கு உட்பட்டவர் களுக்கு பணி உள்ளது. குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வும் அனுமதிக்கப்படுகிறது.

கல்வித்தகுதி

மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், டெலிகாம், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் டெலிகம்யூனிகேசன், இன்ஸ்ட்ருமென்டேசன், பெட்ரோலியம், கெமிக்கல், ஆட்டோமொபைல் போன்ற பிரிவில் டிப்ளமோ என்ஜினீயரிங் படித்தவர்கள், வேதியியல் முதுநிலை படிப்பு படித்தவர்களுக்கு பணியிடங்கள் உள்ளன. 10-ம் வகுப்பு முடித்து, பிட்டிங், மெஷினிங், தீயணைப்பு பயிற்சி சான்றிதழ் பெற்றவர்களுக்கும் பணியிடங்கள் உள்ளன.



கட்டணம்

விண்ணப்பதாரர்கள் ரூ.370 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் முன்னாள் ராணுவ வீரர்கள் இந்த கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.

விண்ணப்பிக்கும் முறை

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். 1-1-2019-ந் தேதி விண்ணப்பிக்க கடைசிநாளாகும். ஜனவரி இறுதி வாரத்தில் இதற்கான கணினி அடிப்படையிலான தேர்வு நடத்த உத்தேசிக்கப்பட்டு உள்ளது.



115 இடங்கள்


மற்றொரு அறிவிப்பின்படி இந்த நிறுவனத்தில் ஜூ‌னியர் அசிஸ்டன்ட், மெடிக்கல் அசிஸ்டன்ட், சூப்பிரவைசர் போன்ற பணிகளுக்கு 115 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். டிப்ளமோ என்ஜினீயரிங், பார்மசி, ஆப்டோமெட்ரி டிப்ளமோ படிப்பு படித்தவர்களுக்கு பணிகள் உள்ளன.

பட்டப்படிப்புடன், கணினி அறிவு பெற்றவர்கள், பி.எஸ்சி. வேதியியல், ஜியாலஜி படித்தவர்களுக்கும், 10-ம் வகுப்பு படித்தவர்கள், டிரைவிங் லைசென்சு பெற்றவர்களுக்கும் குறிப்பிட்ட பணிகள் உள்ளன. விண்ணப்பதாரர்கள் 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.. அந்தந்த பணிக்கான சரியான கல்வித்தகுதி, வயது வரம்பு விவரத்தை இணையதளத்தில் பார்த்துவிட்டு விண்ணப்பிக்கலாம்.

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க கடைசிநாள் டிசம்பர் 27-ந் தேதியாகும். இதற்கான தேர்வு வருகிற பிப்ரவரி மாதத்தில் நடத்த உத்தேசிக்கப்பட்டு உள்ளது. இவை பற்றிய விரிவான விவரங்களை www.ongcindia.com என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.


அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts












Saturday, December 15, 2018

[வேலை வாய்ப்பு] ஐடிஐ முடித்தவர்களுக்கு வாய்ப்பு..! கடைசி தேதி: 21.12.2018



திருச்சியில் செயல்பட்டு வரும் பொதுத்துறை நிறுவனமான பாரத் ஹெவி எலக்ட்ரானிக்கல் லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 71 பணியிடங்களுக்கான அறிவிப்பு  வெளியிடப்பட்டுள்ளது.



 

இதற்கு ஐடிஐ முடித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. (தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!

மொத்த காலியிடங்கள்: 71  

பதவி: Welder - 26

பதவி: Fitter - 38

பதவி: Machinist - 07

சம்பளம்: மாதம் ரூ.34,300

வயதுவரம்பு: 

01.11.2018 தேதியின்படி 32 வயதிற்குள் இருக்க வேண்டும். இடஒதுக்கீடு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.
 

தகுதி:

பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட பிரிவில் 60 சதவீத மதிப்பெண்களுடன் என்டிசி மற்றும் என்ஏசி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: 

தகுதியானவர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் தொழிற்திறன் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
 

விண்ணப்பக் கட்டணம்:

ரூ.200. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, முன்னாள் மாற்றுத்திறனாளிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: 

www.careers.bhel.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

எழுத்துத்தேர்வு நடைபெறும் தேதி:

21.01.2019 எழுத்துத் தேர்வு நடைபெறும்

இடம்:   திருச்சி
 

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


Saturday, December 08, 2018

[வேலை வாய்ப்பு] சர்வதேச மரபணு பொறியியல் மற்றும் பயோடெக்னாலஜி துறையில் பல்வேறு வேலைவாய்ப்புகள் கடைசி தேதி: 14.12.2018



புதுதில்லியில் செயல்பட்டும் வரும் சர்வதேச மரபணு பொறியியல் மற்றும் பயோடெக்னாலஜி துறையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
 
இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள உயிர் தகவலியல், கணினி, ஐடி துறைகளில் இளங்கலை, முதுகலை பட்டம் மற்றும் முன்னைவர் பட்டம் பெற்றவர்களிடம் இருந்தும் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 
(தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!

பதவி மற்றும் காலியிடங்கள் விவரம்:

பதவி: Senior Information Scientist - 2 
பதவி: Senior System Analyst - 1 
பதவி: Programmer - 1
பதவி: Programme Officer - 1 
பதவி: Research Assistant - 1
பதவி: Computer Operator - 2 
பதவி: Attendant - 1 பதவி: Administrative Assistant - 1

தகுதி:  

computer sciences, Information technology, Bioinformatics போன்ற துறைகளில் இளங்கலை, முதுகலை மற்றும் முனைவர் பட்டம் பெற்றவர்கள், 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் சம்பந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

தேர்வு செய்யப்படும் முறை: 

நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள்  தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பிக்கும் முறை: www.icgeb.org என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து அஞ்சல் மூலமாகவோ அல்லது மின் அஞ்சல் மூலமாகவோ கீழ் வரும் முகவரிக்கு அனுப்பலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 14.12.2018

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts