எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...
For Advertisement
விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...
திருப்போரூர் அடுத்த காலவாக்கம் கிராமத்தில் தனியார் அடுக்குமாடி
குடியிருப்பு உள்ளது. இங்கு தனியார் பல்கலைக்கழகம் ஒன்றில் 3ம் ஆண்டு
படிக்கும் கேரளாைவ சேர்ந்த முகம்மது அப்ரிடி உள்பட மாணவர்கள் சிலர்,
வாடகைக்கு வீடு எடுத்து தங்கியுள்ளனர்.
நேற்று காலை கல்லூரிக்கு புறப்பட்ட
மாணவர்கள், வீட்டின் சாவியை உள்ளே வைத்து விட்டு வீட்டை பூட்டி
சென்றனர்.மாலையில் கல்லூரியில் இருந்து திரும்பி வந்தபோது, சாவி இல்லாமல்
திகைத்தனர். பின்னர், பூட்டை உடைத்து கதவை திறப்பது சிரமம் என நினைத்த
அவர்கள், மொட்டை மாடியில் இருந்து கயிறு கட்டி இறங்கி, ஜன்னல் வழியே
உள்ளே செல்ல முடிவு செய்தனர்.
இதை தொடர்ந்து, முகம்மது அப்ரிடி
உடலில் கயிறு கட்டி மொட்டை மாடியில் இருந்து கீழே இறங்கினார். அப்போது
திடீரென கயிறு அறுந்து 14வது மாடியில் இருந்து முகம்மது அப்ரிடி கீழே
விழுந்தார். அதில், அவரது மண்டை உடைந்து சம்பவ இடத்திலேயே
இறந்தார்.தகவலறிந்து திருப்போரூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று
சடலத்தை கைப்பற்றி செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும்
போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
பெருந்துறை: கள்ளக்காதலில் ஈடுபட்ட மனைவியின் தலையை அறுத்து உடலை பைக்கில்
வைத்துக்கொண்டு கணவன் ஊர்வலமாக வந்தது மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும்
பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. இதுபற்றிய விவரம் வருமாறு: ஈரோடு
மாவட்டம், பெருந்துறை அருகே வேப்பம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் முனியப்பன்
(28). இவர், முனியப்பன் கேஸ் லாரிகளுக்கு சிலிண்டர் லோடுமேனாக வேலை செய்து
வருகிறார். கர்நாடக மாநிலம் ஷிமோகா நகரை சேர்ந்தவர்.
இவரது மனைவி நிவேதா
(19). இவர் தனியார் டிப்பார்மெண்ட் ஷோரூமில் வேலை செய்து வந்தார்.
இவர்களுக்கு கடந்த 7 மாதத்துக்கு முன் திருமணம் நடந்தது. நேற்று
இரவு முனியப்பன் வேலைக்கு சென்று விட்டு, வேலை குறைவாக இருந்ததால் இரவு 10
மணிக்கே வீடு திரும்பினார்.
அப்போது வீட்டில் நிவேதா, வேறொரு வாலிபரோடு
உல்லாசமாக இருப்பதை கண்டு கடும் அதிர்ச்சி அடைந்தார். இதன்காரணமாக
நிவேதாவிற்கும் முனியப்பனுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.
அப்போது
முனியப்பன், ‘நிவேதாவிடம் உனது தாய் வீட்டில் விட்டு விடுகிறேன் வா’ என்று
கூறி தனது பைக்கில் அழைத்து வந்துள்ளார். பவானி செல்லும் தேசிய
நெடுஞ்சாலையில் எருக்காட்டுவலசு பகுதியில் வந்தபோது இருவருக்கும்
வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது முனியப்பன், தான் வைத்திருந்த
கத்தியால் நிவேதாவை கழுத்தை அறுத்துள்ளார். பின்னர் தலையை தனியே எடுத்து
பைக்கின் முன்புறம் வைத்துவிட்டு, உடலை எடுத்து பெட்ரோல் டேங்கின் மீது தன்
பக்கமாக திருப்பி உட்கார வைத்து பைக்கில் ஊர்வலமாக சென்றுள்ளார்.
அப்போது
வேகமாக வந்து பைக்கை திருப்பியபோது அப்பகுதியில் உள்ள வீட்டு சுவரின் மீது
மோதி விழுந்துள்ளார்.இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் கொடுத்த தகவல்படி
பெருந்துறை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று முனியப்பனை கைது செய்தனர்.
நிவேதா உடலை கைப்பற்றி, ஈரோடு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக
அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து
விசாரிக்கின்றனர். மனைவியின் தலையை அறுத்து உடலை பைக்கில் வைத்துக்கொண்டு
ஊர்வலமாக சென்றது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மேற்குவங்க மாநிலம், கொல்கத்தாவில் உள்ள Garden Reach Ship Builders &
Engineers நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு ஐடிஐ
படித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள் : 1. Mechanical : 5 இடங்கள் (பொது-2, ஒபிசி-2, எஸ்சி-1) 2. Admin & HR : 2 இடங்கள் (பொது-1, எஸ்சி-1) 3. Electrical Maintenance : 5 இடங்கள் (பொது-2, எஸ்சி-1, ஒபிசி-2) 4. Finance : 1 இடம் (பொருளாதார பிற்பட்டோர்) 5. Material Mgmt : 1 இடம் (பொது) 6. Fire Fighting : 1 இடம் (பொது) 7. Chemist : 1 இடம் (பொது) 8. Welder : 1 இடம் (பொருளாதார பிற்பட்டோர்) 9. Painter : 1 இடம் (பொது) 10. Naval Architecture : 2 இடங்கள் (பொது) 11. Junior Hindi Translator : 1 இடம் (எஸ்டி) மேற்குறிப்பிட்ட பணிகளுக்கு வயது : 1.3.2019 அன்று 28க்குள்.
சம்பளம் : ரூ. 23,800-83,300. வயது, கல்வித்தகுதி, தேர்வுமுறை, ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட விவரங்களுக்கு www.grse.in என்ற இணையதளத்தை பார்க்கவும். ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் : 23.4.2019.
நம் நாட்டில் விவாகரத்து கேட்கும் பெண்கள் கருத்து வேறுபாடு, கணவன் அல்லது அவரது குடும்பத்தினர் செய்யும் கொடுமை, கணவன் குடிக்கிறார், வேறு பெண்ணுடன் தொடர்பில் உள்ளார், ஆண்மை இல்லை, இவ்வாறு பல காரணங்களை கூறி பெண்கள் விவகாரத்து பெறுவதுதான் வழக்கம்.
ஆனால் மத்திய பிரதேசம் மாநிலம் போபால் அருகே பாரிகார் என்ற பகுதியைச் சேர்ந்த இளம் பெண்(23 வயது) ஒருவர் தனது கணவர் வாரம் ஒருமுறை மட்டுமே குளிக்கிறார், ஒழுங்காக சேவ் செய்வதில்லை என்றும் புகார் கூறி அவருடன் வாழ முடியாது என்று விவகாரத்து கேட்டு வழக்கு தொடந்துள்ளார்.
இருவருக்கும் திருமணம் ஆகி ஓராண்டு தான் ஆகிறது. அதிலும் இந்த தம்பதிகளுக்கு குழந்தை ஒன்று உள்ளது. இந்த நிலையில் அவர்கள் இருவரும் சம்மதத்துடன், போபால் குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
நீதிமன்றம் இவர்களை 6 மாதம் பிரிந்து இருக்கும் படி கூறியுள்ளது. அதன் பிறகு விவாகரத்து குறித்து நீதிமன்றம் முடிவு செய்யும் என அவர்களது வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளார். இவர்களது விவகாரத்தில் அவர்களது பெற்றோர்களுக்கு உடன்பாடில்லை என்றும் கூறப்படுகிறது.
திருப்போரூர்: சென்னை கேளம்பாக்கம் அருகே தையூர் ஊராட்சி வளர்ச்சி
அடைந்துவந்ததாலும் அதற்கேற்ப உள்கட்டமைப்பு வசதிகள் செய்யப்படவில்லை.
தையூர், கேளம்பாக்கம் ஊராட்சியில் உள்ள வீடுகள், ஓட்டல்கள் மற்றும் திருமண
மண்டபங்களில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர், முறையான வடிகால் வசதி
இல்லாததால் சாலையோரம் உள்ள மழைநீர் கால்வாய்கள் வழியாக பழைய மாமல்லபுரம்
சாலையை ஒட்டி குட்டை போல் தேங்கி நிற்கின்றன.
இதனால் கொசுக்கள்
உற்பத்தியாகி மக்களுக்கு பல்வேறு உடல்உபாதைகள் ஏற்படுகிறது. கழிவுநீர்
பாதிப்பில் இருந்து மக்களை பாதுகாக்க வேண்டும் என்று மக்கள் கூறுகின்றனர். ஆனால்
கழிவுநீர் அகற்றி, உள்கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ள கேளம்பாக்கம் மற்றும்
தையூர் ஊராட்சி நிர்வாகத்தில் போதிய நிதி ஆதாரம் இல்லை’’ என சம்பந்தப்பட்ட
துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.
இதுகுறித்து சாத்தாங்குப்பம் குடியிருப்போர்
சங்க நிர்வாகிகள் கூறுகையில், ‘’எங்கள் குடியிருப்போர் நலச் சங்கத்தின்
சார்பில் தையூர், சாத்தங்குப்பம், கேளம்பாக்கம் பகுதிகளில் மழைநீர்
கால்வாய், கழிவுநீர் கால்வாய், சாலைகள் அமைத்து தர வேண்டுமென மாவட்ட
ஆட்சியரை சந்தித்து கோரிக்கை விடுத்தோம். இப்பகுதிகளில் அரசு கூடுதல் நிதி
கொடுத்து, இங்கு பாதாள சாக்கடை திட்டத்தைநிறைவேற்றித் தரவேண்டும்’’
என்றார்.
பெரம்பூர் பகுதியில் வாக்காளர்களுக்கு தபாலில் 500 ரூபாய் நோட்டு டன் கடிதம் வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு வருகிற 18-ந் தேதி
நடக்கிறது. பாராளுமன்ற தேர்தலோடு பெரம்பூர் உள்பட 18 சட்டசபை
இடைத்தேர்தலும், இதைத் தொடர்ந்து மே 19-ந் தேதி அரவக்குறிச்சி,
திருப்பரங்குன்றம், சூலூர், ஓட்டப்பிடாரம் சட்டசபை தொகுதிகளுக்கான
இடைத்தேர்தலும் நடைபெறுகிறது.
வாக்குப்பதிவுக்கு இன்னும் 4 நாட்களே
உள்ள நிலையில் அரசியல் கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு
வருகிறார்கள். வாக்காளர்களுக்கு அரசியல் கட்சியினர் பணம்-பரிசு பொருட்கள்
கொடுப்பதை தடுக்க தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு
வருகிறார்கள். ஓட்டுக்கு பணம் வாங்கும் சில வாக்காளர்களை குறி வைத்து
புதுப்புது விதத்தில் அரசியல் கட்சியினர் பணம் கொடுத்து வருவது
வாடிக்கையாக உள்ளது.
இந்த நிலையில் பெரம்பூர் பகுதியில்
வாக்காளர்களுக்கு தபாலில் 500 ரூபாய் நோட்டு டன் கடிதம் வந்த சம்பவம்
பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பெரம்பூர் பகுதியில் உள்ள பிரபல
தனியார் ஆலை பல ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்டது. அந்த தொழிற் சாலையின்
தொழிற்சங்கம் பெயரில் இந்த தபால் வந்து உள்ளது.
அந்த தபாலில் கடிதத்துடன்
புதிய 500 ரூபாய் நோட்டும் இருந்தது. கடிதத்தில், தேர்தலில் குறிப்பிட்ட வேட்பாளருக்கு வாக்கு அளிக்கும்படி
எழுதப்பட்டு இருந்தது. இதேபோல் 500 ரூபாய் நோட்டுடன் கூடிய தபால்
பெரம்பூர், கொடுங்கையூர், வியாசர்பாடி உள்ளிட்ட பகுதியில் சுமார் 2
ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு வந்து இருப்பதாக தெரிகிறது.
ரூபாய்
நோட்டுடன் வந்த கடிதத்தை சிலர் அக்கம் பக்கத்தினரிடம் தெரிவித்ததால் இது
வெளிச்சத்துக்கு வந்தது. அந்த தபால் பெரம்பூர் தபால் நிலையத்தில் இருந்து
அனுப்பப்பட்டதாக தெரிகிறது. இதேபோல் ரூபாயுடன் மேலும் கடிதம் வருமா?
என்றும் சிலர் ஏக்கத்துடன் காத்து உள்ளனர். இதற்கிடையே ஓட்டுக்காக
வாக்காளர்களின் வீட்டுக்கே தபாலில் ரூ. 500 நோட்டு அனுப்பப்பட்டது பற்றி
தேர்தல் அதிகாரிகளுக்கும் புகார் வந்தது. அவர்கள் அரசியல் கட்சியினரை
தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.
மேலும் தபாலில் பணம் அனுப்பியவர்கள்
யார்? என்பது பற்றி ரகசிய விசாரணையில் ஈடுபட்டு உள்ளனர். பெரம்பூர்
சட்டசபை இடைத்தேர்தலில் வேட்பாளர்களாக ஆர்.எஸ். ராஜேஷ் (அ.தி.மு.க.),
ஆர்.டி.சேகர்(தி.மு.க.), வெற்றிவேல் (அ.ம.மு.க.) ஆகியோர்
போட்டியிடுகிறார்கள். இதேபோல பெரம்பூர் தொகுதியை உள்ளடக்கிய வட சென்னை
பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க. சார்பில் கலாநிதி வீராசாமியும், அழகாபுரம்
மோகன்ராஜ் (தே.மு.தி.க.), சந்தான கிருஷ்ணன் (அ.ம.மு.க.)
போட்டியிடுகிறார்கள்.
டிக்-டாக் செயலிக்கான வீடியோ பதிவின்போது துப்பாக்கி வெடித்து வாலிபர் உயிரிழந்த சம்பவம் டெல்லியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. டெல்லியின் ஜப்ராபாத் பகுதியை சேர்ந்த சல்மான் (வயது 19) என்ற கல்லூரி
மாணவர், தனது நண்பர்களான அமிர், சொகைல் ஆகியோருடன் நேற்று முன்தினம் இரவு
காரில் இந்தியா கேட் பகுதிக்கு சென்றார்.
பின்னர் வீடு திரும்பும் வழியில்
அவர்கள் துப்பாக்கியை உடலில் குறிவைப்பது போன்று டிக்-டாக் வீடியோ ஒன்றை
பதிவு செய்ய முடிவு செய்தனர். இதற்காக காரின் டிரைவர் இருக்கையில் இருந்த சல்மானின் கன்னத்தில்,
நாட்டுத்துப்பாக்கி ஒன்றின் முனையை வைத்தவாறு சொகைல் போஸ் கொடுத்தார்.
அப்போது திடீரென அந்த துப்பாக்கி வெடித்தது. இதில் குண்டுபாய்ந்ததால்
படுகாயமடைந்த சல்மான், காரிலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்தார்.
இதனால் பதறிப்போன நண்பர்கள், உடனே அவரை தங்கள் உறவினர் ஒருவருடன் சேர்ந்து
மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு பரிசோதித்த டாக்டர்கள், சல்மான்
ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து சல்மானின் நண்பர்கள்
அங்கிருந்து தப்பி ஓடினர்.
இந்த சம்பவம் குறித்து மருத்துவமனை நிர்வாகம் அளித்த புகாரின் பேரில்,
சல்மானின் 2 நண்பர்கள் மற்றும் அவர்களின் உறவினரை போலீசார் கைது செய்தனர்.
டிக்-டாக் செயலிக்கான வீடியோ பதிவின்போது துப்பாக்கி வெடித்து வாலிபர்
உயிரிழந்த சம்பவம் டெல்லியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
எல்லா வயதிலும் நமது உடலும், மனதும் ஒரே மாதிரி இருப்பது கிடையாது. ஆனால், நமது பழக்கவழக்கங்கள் மட்டும் “தொட்டில் பழக்கம் சுடுகாடு வரைக்கும்” என்பது போல ஒரே மாதிரி இருக்கும். வாழ்வியல் முறையில் இது ஒரு தவறான அணுகுமுறை ஆகும்.
சாப்பிடும் உணவில் இருந்து, தூங்கும் நேரம் வரை வயதிற்கு ஏற்றார் போல பழக்கவழக்கத்தை மாற்றிக் கொள்ள வேண்டியது அவசியம். கல்லையும் கரைக்கும் பதின் வயது (Teen Age) என்பார்கள் என்பார்கள். ஆனால் நாற்பதை எட்டும் போது கால் கிலோ கறியைக் கரைப்பதே சிலருக்கு கடினம்!
விஷத்தை குறைத்துக் கொள்ளுங்கள் மது, புகை மட்டுமல்ல, நீங்கள் விரும்பி சாப்பிடும் எண்ணெய் சத்து, கொழுப்புச்சத்து அதிகமுள்ள நொறுக்கு தீனிகள், பிஸ்கட்டுகள், என அனைத்தையும் குறைத்துக் கொள்வது அவசியம். வயது ஏற, ஏற உங்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும், அந்த நேரத்திலும் நீங்கள் உடலுக்கு விஷமாக அமையும் இந்த உணவுகளை அதிகமாக உட்கொண்டு வந்தால், உடல்நிலை குறைபாடு அதிகமாக ஏற்படும்.
உடற்பயிற்சி இதுநாள் வரை உடற்பயிற்சி செய்யாவிட்டாலும் இனிமேலாவது உடற்பயிற்சி செய்யுங்கள். ஜிம்மிற்கு தான் போக வேண்டும் என்வது கட்டாயம் கிடையாது. போனால், உடற்திறனை கொஞ்சம் அதிகமாக பேணிக்காக்க முடியும். அல்லது தினசரி காலை மற்றும் மாலை வேளைகளில் 30 நிமிடங்கள் வாக்கிங், ஜாக்கிங் போன்றவற்றில் ஈடுபடலாம்.
உறவுகள் முக்கியம் வேலை, வேலை என்று மெட்ரோ ரயிலை போல நிக்காமல் ஓடிக்கொண்டிருக்காமல் உங்கள் வாழ்வில் உங்களோடு பயணித்து வரும் உறவுகளையும் கொஞ்சம் ஏறெடுத்து பாருங்கள். வேலை தரும் மன அழுத்தத்தை குறைக்க உலகிலேயே சிறந்த மருந்து உறவுகள் தான்.
சேமிப்பு பணம் சேமித்து வைப்பது அவசியம், உங்களுக்கு இல்லாவிட்டாலும் உங்களது வீட்டில் உள்ளவர்களுக்கு, உங்கள் தாய், தந்தை, மனைவி. முப்பதை கடக்கும் போது கண்டிப்பாக சில உடல்நல குறைபாடுகள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கின்றன. நமது உணவு பழக்கத்தின் மாறுபாட்டினால், இப்போது எல்லாம் நீரிழிவு நோய் யாருக்கு, எப்போது வருகிறது என்றே தெரிவதில்லை.
உறக்கம் மிக மிக ம் முக்கியமானது உறக்கம். சரியான நேரத்தில், சரியான அளவு உறக்கம் தேவை. தூக்கமின்மை தான் பல உடல்நல குறைபாடுகள் ஏற்பட காரணமாக இருக்கின்றது. எனவே, எந்த வேலையாக இருந்தாலும் இரவு சரியான நேரத்தில் உறங்க வேண்டியது கட்டாயமான ஒன்றாகும்.
பல்லு முக்கியம் முப்பதை கடக்கும் போது பலருக்கு ஏற்படும் முதல் வலி, பல் வலி தான். எனவே, பல்லை பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள். பின், ஆரோக்கியமான உணவாகவே இருந்தாலும் மென்று சாப்பிட முடியாமல் போய் விடும்.
நண்பர்கள் வேலைக்கு சேர்ந்த பிறகு நண்பர்களுடனான நெருக்கம் குறைந்திருக்க வாய்ப்பிருக்கிறது, நட்பை புதுப்பித்துக் கொள்ளுங்கள். நண்பர்களை விட வேறு யாரும் உங்களை மகிழ்வாய் வைத்துக்கொள்ள முடியாது. உங்கள் மனதை உறுதியாய் வைத்துக் கொள்ள ஒரே மருந்து நண்பர்கள் தான்.
முன்னெச்சரிக்கை இதுவரை எந்த பாதுகாப்பு காப்பீடுகள் எடுத்து வைத்துக்கொள்ளவில்லை எனிலும், முதல் வேலையாக ஓர் குடும்ப மருத்துவ காப்பீட்டை துவங்குங்கள். அது மிகவும் உதவியாக இருக்கும்.
காட்பாடியில் சிக்கிய, 11.50 கோடி ரூபாய், வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்ய வைத்திருந்ததாக தகவல் வெளியான நிலையில், வேலுார், தி.மு.க., வேட்பாளர் கதிர் ஆனந்த் உட்பட மூன்று பேர் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
வேலுார் லோக்சபா தொகுதி, தி.மு.க., வேட்பாளராக, துரைமுருகனின் மகன், கதிர்ஆனந்த் போட்டியிடுகிறார். காட்பாடியில் உள்ள இவரது வீடு மற்றும் ஆதரவாளர்கள் வீடுகளில், வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி, கோடிக்கணக்கான பணத்தை பறிமுதல் செய்தனர். இது குறித்து, நீதிமன்ற அனுமதியுடன் வழக்குப்பதிவு செய்து, அறிக்கை அனுப்ப, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி உத்தரவிட்டார்.
இதையடுத்து, வேலுார் லோக்சபா தொகுதி, தேர்தல் செலவின அலுவலர் சிலுப்பன், காட்பாடி போலீசில், 8ம் தேதி புகார் செய்தார். அதில் கூறியிருப்பதாவது: மார்ச், 29ல், வேலுார் லோக்சபா தொகுதி, தி.மு.க., வேட்பாளர் கதிர்ஆனந்த் வீட்டில் நடத்திய சோதனையில், 19 லட்சத்து, 57 ஆயிரத்து, 10 ரூபாய் சிக்கியது. இது, கதிர் ஆனந்த் வேட்பு மனு தாக்கலின் போது கூறிய கையிருப்பு தொகையை விட, 10 லட்சத்து, 57 ஆயிரத்து, 10 ரூபாய் கூடுதலாக இருந்தது.
அடுத்து, ஏப்., 1ல் வருமான வரித்துறையினர், காட்பாடி அருகே பள்ளிக்குப்பத்தில், தாமோதரன் என்பவருக்கு சொந்தமான குடியிருப்பு பகுதியில் நடத்திய சோதனையில், 11 கோடியே, 48 லட்சத்து, 51 ஆயிரத்து, 800 ரூபாய் சிக்கியது. இதை, பூஞ்சோலை சீனிவாசன் என்பவர், வாக்காளர்களுக்கு வழங்க, வைத்திருந்ததாக தெரிவித்தார். எனவே, வேட்பு மனு தாக்கலின் போது, வழங்கிய உறுதிமொழி பத்திரத்தில், தவறான தகவல் கொடுத்தது மற்றும் வாக்காளர்களுக்கு கொடுக்க பணம் வைத்திருந்தது குறித்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு புகாரில் கூறப்பட்டிருந்தது.
இதையடுத்து, காட்பாடி, டி.எஸ்.பி., சேகர், இன்ஸ்பெக்டர் புகழேந்தி ஆகியோர், புகாரின் மீது, எந்தெந்த பிரிவுகளில் வழக்கு பதிவு செய்வது என, காட்பாடி ஒருங்கிணைந்த நீதிமன்ற மாஜிஸ்திரேட் ஜெயசுதாகரிடம் ஆலோசனை நடத்தினர். அவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய, மாஜிஸ்திரேட் நேற்று உத்தரவிட்டார். இதையடுத்து, கதிர்ஆனந்த், சீனிவாசன், தாமோதரன் ஆகியோர் மீது, பிரமாண பத்திரத்தில், தவறான தகவல் அளித்தல், வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க முயற்சி செய்தல் ஆகிய பிரிவுகளில், வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த விவகாரம் தொடர்பாக, போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர். வழக்கு பதிவு செய்யப்பட்ட விபரம் குறித்த அறிக்கை, வேலுார் லோக்சபா தொகுதி தேர்தல் அதிகாரி, தமிழக தேர்தல் அதிகாரிக்கு அனுப்பி வைத்தார்.வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதால், கதிர்ஆனந்த் உட்பட, மூவரும் எந்நேரமும் கைது செய்யப்படலாம் என தெரிகிறது.
சந்திக்க தயார்: குடியாத்தம் அடுத்த மோர்த்தானா அணை பகுதியில், தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த கதிர் ஆனந்த், நிருபர்களிடம் கூறுகையில், 'வழக்கு குறித்து எனக்கு எதுவும் தெரியாது. வழக்கு குறித்து முழுமையாக அறிந்த பின்பே, அது பற்றி கூற முடியும். என் மீது எத்தனை வழக்கு போட்டாலும், அவற்றை சட்ட ரீதியாக சந்திக்க தயாராக உள்ளேன்.' என்றார்.