வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: 2019-09-15
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Wednesday, September 18, 2019

இரவு 9 மணிக்கு மேல் தாம்பரத்திற்குள் பேருந்து வராததால் பொதுமக்கள் அவதி | பொதுமேலாளர் தலையிட்டு பொறுப்பேற்பாரா...? | Padappai Bus Problem Latest News

அரசு பேருந்து என்றாலே அவல நிலைதான் என்ற கூக்குரல் எப்போதும் ஒலித்துக் கொண்டே இருப்பது அனைவரும் அறிந்ததே.....!
தமிழக முதல்வர் திரு.எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் சமீப காலமாக கலர்கலராக புதுப்புதுப் பேருந்துகளை கண்கவர் பொலிவுடன் போக்குவரத்துக் கழகத்துடன் இணைத்து வருகிறார். முதலமைச்சரின் இதுபோன்ற செயல்கள் மூலம் தமிழக மக்களுக்கு தரமான மற்றும் பாதுகாப்பான பேருந்து வசதிகள் புதிய தொழில்நுட்பத்துடன் கிடைத்தது என்பது மிகவும் மகிழ்ச்சியான செய்தி.




ஆனால் இதே போக்குவரத்துக் கழகத்தில்தான் பொதுமக்கள் அவதிக்குள்ளாக்கும் பல்வேறு செயல்களும் நடைபெற்று வருகிறது. பல்வேறு வழித்தடங்களில் பேருந்துகள் முறையான வழியிலோ அல்லது குறித்த நேரத்திலோ இயக்கப்படுவதில்லை.


குறிப்பாக தற்போது தாம்பரம்   முதல் காஞ்சிபுரம் மற்றும் வேலூர் வரை படப்பை வழியாக இயக்கப்படும் பேருந்துகள் இரவு 9 மணிக்கு மேல் தாம்பரம், பெருங்களத்தூர், வண்டலூர் வழியாக செல்வதில்லை. 
மாறாக, வள்ளுவர் குருகுலம் பள்ளி வழியாக திருப்பிவிடப்பட்டு சென்றுவிடுகின்றன.

எனவே, படப்பை மற்றும் அதைத் தாண்டி செல்லும் பொதுமக்கள் முதல் ஐ.டி ஊழியர்கள் வரை அனைவரும் மிகுந்த சிரமத்திற்குள்ளாகுகின்றனர்.  பகல் முழுவதும் உழைத்துவிடு பணி முடிந்து இரவு வீடு திரும்பும் சாதாரண பொதுமக்கள் இரவு ஓய்வு எடுக்க குறித்த நேரத்திற்கு வீடு செல்ல இயலவில்லை.  
 
போக்குவரத்துக்கழக பணிமனையைச் சார்ந்த பொதுமேலாளர் அவர்கள் தங்கள் கீழ் பணிபுரியும் ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களை உரிய முறையில் கண்கானிக்கவில்லையா...? அல்லது தனியார் வாகனங்கள் வருவாய் ஈட்டுவதற்காக பொது மேலாளர் துணை போகிறாரா என்பதே கேள்விக்குறியாக உள்ளது. மேலும் பொதுமக்கள் காஞ்சிபுரம் பணிமனை பொது மேலாளர் அவர்களை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டும் உரிய நடவடிக்கை  மேற்கொள்ளவில்லை. 
 
எனவே, மேல் அதிகாரிகளின் அலட்சியத்தால் தான் இதுபோன்ற செயல்களின் மூலம் அரசாங்கத்திற்கு அவப்பெயர் ஏற்படுகிறது. தமிழக அரசு இதுபோன்ற ஓட்டுநர், நடத்துனர் மற்றும் சம்மந்தப்பட்ட பணிமனை பொது மேலாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமா...? 
 

ஆசிரியர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டத்தில், டி.ஐ.ஜி., சத்யபிரியா உரையாடல் | சட்டங்கள் தெரிந்தால் குற்றங்கள் குறையும் | Kancheepuram Teachers Meeting with DIG Sathiyapriya | Run World Media

''மாணவர்கள், படிக்கும்போதே, சட்டங்களையும், நல்ல பழக்கங்களையும் கற்றுகொண்டால், வரும் காலத்தில் குற்றங்கள் குறையும்'' என, ஆசிரியர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டத்தில், டி.ஐ.ஜி., சத்யபிரியா பேசினார். 
 


காஞ்சிபுரத்தில், மாணவர் காவலர் படை, கடந்தாண்டு துவங்கப்பட்டது. இப்படை குறித்தும், இதில், ஆசிரியர்களின் பங்கு குறித்தும் அறிய, ஆலோசனை கூட்டத்திற்கு, ஏற்பாடு செய்யப்பட்டது. காஞ்சிபுரத்தில், போலீஸ் அதிகாரிகள், பள்ளி ஆசிரியர்கள் ஆலோசனை கூட்டம், நேற்று நடந்தது.
இதில் பங்கேற்ற, போலீஸ் பயிற்சி, டி.ஐ.ஜி., சத்யபிரியா பேசியதாவது:'மாணவர் காவலர் படை' முதலில், கேரளாவில் ஏற்படுத்தப்பட்டது. இதையடுத்து, நாடு முழுவதும் ஏற்படுத்த முடிவானது. தமிழகத்தில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலுார் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில், இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். 
 
பின், பிற மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப்படும்.இதற்காக, அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில், 8, 9ம் வகுப்பு படிக்கும் மாணவ - மாணவியர், இந்த மாணவர் படையில் சேர்க்கப்படுவர். ஒரு பள்ளியில் இருந்து, 44 பேர் தேர்வாவர்.மாணவர்களுக்கு பயிற்சி வழங்க, பள்ளிக்கு இரு ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.காஞ்சிபுரம் மாவட்டத்தில், 210 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. 

அந்த பள்ளி ஆசிரியர்களுக்கு, செங்கல்பட்டு செயின்ட் ஜோசப் பள்ளியில், இன்று நடக்கிறது.மாணவர்கள் படிக்கும்போதே, நல்ல பழக்கங்களையும், சட்டங்களையும் தெரிந்து கொண்டால், எதிர்காலத்தில் குற்றங்கள் குறையும். இதற்காகவே, இந்த மாணவர் படை.பணி ஓய்வுக்கு பின், நிம்மதியாக உறங்க வேண்டுமானால், போலீசார், பயமின்றி, நேர்மையுடன் பணிபுரிய வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.

Monday, September 16, 2019

ஆனைக்குன்னம் கிராமத்தில் குவாரிக்கு எதிரான போராட்டம் தீவிரம் | பொதுமக்கள் தங்களது அடையாள அட்டைகளை அரசாங்கத்திடமே ஒப்படைக்க முடிவு | Anaikunnam Quarrying of Stone Problem ahead

காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் வட்டம், அச்சிறுபாக்கம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஆனைக்குன்னம் கிராமத்தில் கல்குவாரிக்கு எதிரான போரட்டம் அடுத்தகட்டத்தினை எட்டியுள்ளது.




பல ஆண்டுகளாக கல்குவாரியினை எதிர்த்து போராட்டம் மற்றும் கிராமசபை கூட்ட புறக்கணிப்பு போன்ற செயல்களில் ஈடுபட்டுவந்த பொதுமக்கள் தற்போது தங்களது ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஸ்மார்ட் ரேஷன் கார்டு போன்ற மத்திய, மாநில அரசுகளிடமிருந்து வழங்கப்பட்ட அனைத்து விதமான அடையாள அட்டைகளையும் வருகின்ற காந்தி ஜெயந்தி அன்று நடைபெறவுள்ள கிராமசபை கூட்டத்தில் அரசாங்கத்திடமே ஒப்படைக்க உள்ளதாக இன்று 16.09.2019 அன்று மாவட்ட ஆட்சியர் காஞ்சிபுரம் அவர்களுக்கு அளித்துள்ள மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
 

ஏற்கனவே பலமுறை பல்வேறு துறைசார்ந்த அதிகாரிகளிடமும், கனிமவள உதவி இயக்குநர் மற்றும் மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கும் மேற்படி குவாரிக்கு எதிரான புகார் மனுவினை அளித்தும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளாதது குறிப்பிடத்தக்கது.


மேலும் இந்த புகார் சம்மந்தமாக சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுமக்கள் சார்பாகவே வழக்கும் தொடரப்பட்டு விசாரணைக்கு வர உள்ளது. இந்த மனுவானது பல்வேறுகட்ட போராட்டங்களுக்கு பிறகு கிராம பொதுமக்கள் சார்பில் மாவட்ட ஆட்சியர் காஞ்சிபுரம் அவர்களிடம் நேரடியாக இன்று கொடுக்கப்பட்ட மனுவாகும்.

அரசுத் துறையில் காத்திருக்கும் டாப் 7 வேலை வாய்ப்புகள்! விண்ணப்பித்துவிட்டீர்களா? Top 7 Government Jobs in Banks

நம்மில் பெரும்பாலானோர் அரசுத் துறையில் பணியாற்ற வேண்டும் என குறிக்கோளுடன் அதற்காக தயாராகி வருவர். அவ்வாறாக அரசுப் பணிகளுக்கு என தயாராகிவருவோர் முறையான வழிகாட்டுதல் இன்றி சில சமயங்களில் பணி குறித்தான தகவல் கிடைக்காமல் தவறவிடுவதும் உண்டு.


இந்தத் தொகுப்பில் கடந்த வாரம் வெளியாக வேலை குறித்த அறிவிப்பில் முக்கியப் பணிகள் தொகுக்கப்பட்டுள்ளன. விரைவில் விண்ணப்பித்துப் பயனடையுங்கள்.


நபார்டு வங்கி 
மத்திய அரசிற்கு உட்பட்ட தேசிய வேளாண்மை மற்றும் ஊரக மேம்பாட்டு வங்கியான நபார்டு வங்கியில் காலியாக உள்ள உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 
 
பணி : உதவியாளர் 
மொத்தம் காலிப் பணியிடம் : 91 
விண்ணப்பப் பதிவு தொடங்கும் நாள் : 14 செப்டம்பர் 2019 
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 3 அக்டோபர் 2019 
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
 
கூட்டுறவுச் சங்க உதவியாளர் வேலை 
கோவை மாவட்ட கூட்டுறவுச் சங்கத்தின் ஆள்சேர்ப்பு நிலையத்தில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 
 
மொத்தம், 85 பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். 
மேலாண்மை : தமிழக அரசு 
மொத்த காலிப் பணியிடம் : 85 
ஊதியம் : ரூ. 14,000 முதல் ரூ. 47,500 வரையில் 
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

தமிழ்நாடு சிமெண்ட் நிறுவனத்தில் ரூ.1 லட்சம் ஊதியம் 
தமிழ்நாடு சிமெண்ட் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள நிறுவன செயலாளர், மேலாளர், தொழில்நுட்ப நிர்வாகி, என்ஸ்-ரே உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 
 
நிர்வாகம் : தமிழ்நாடு சிமெண்ட் கார்ப்பரேஷன் லிமிடெட் 
பணி : நிறுவன செயலாளர், மேலாளர், தொழில்நுட்ப நிர்வாகி, என்ஸ்-ரே
மொத்த காலிப் பணியிடம் : 40 
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
 
இந்திய எண்ணெய் நிறுவனத்தில் வேலை 
மத்திய அரசு கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் இந்திய எண்ணெய் நிறுவனத்தில் காலியாக உள்ள மூத்த அதிகாரி பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 
மொத்தம் 48 பணியிடங்களுக்கு பி.இ, பி.டெக் பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

நிர்வாகம் : இந்திய எண்ணெய் நிறுவனம் 
பணி : மூத்த அதிகாரி 
மொத்த காலிப் பணியிடம் : 48 
ஊதியம் : ரூ.60,000 முதல் ரூ.1,80,000 வரையில் 
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 28.09.2019


எஸ்பிஐ வங்கி அதிகாரி பணியிடங்கள் 
பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பாரத ஸ்டேட் வங்கியில் காலியாக உள்ள சிறப்பு அதிகாரிகள் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 
இப்பணியிடங்களுக்கு தனித்தனியான தகுதிகளும், அனுபவங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. 
 
நிர்வாகம் : பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) 
மொத்த காலிப் பணியிடம் : 477 
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 25.09.2019 
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.


நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஃபார் இன்டர்டிஷிகல்னரி சைன்ஸ் அண்ட் டெக்னாலஜி (NIIST) 
மத்திய அரசிற்கு உட்பட்ட நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஃபார் இன்டர்டிஷிகல்னரி சைன்ஸ் அண்ட் டெக்னாலஜி (NIIST) கல்வி நிறுவனத்தில் காலியாக உள்ள தொழில்நுட்ப உதவியாளர், மூத்த தொழில்நுட்ப அதிகாரி மற்றும் மருத்துவ அதிகாரி உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 
 
நிர்வாகம் : நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஃபார் இன்டர்டிஷிகல்னரி சைன்ஸ் அண்ட் டெக்னாலஜி (NIIST) 
மொத்த காலிப் பணியிடம் : 10 
பணி : தொழில்நுட்ப உதவியாளர், மூத்த தொழில்நுட்ப அதிகாரி, மருத்துவ அதிகாரி 
ஊதியம் : ரூ. 35,400 முதல் ரூ.2,08,700 வரையில் 
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

ஐபிபிஎஸ் கிளார்க் (IBPS Clerk Recruitment) 
 இந்தியா முழுவதும் செயல்பட்டு வரும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, கனரா வங்கி, சின்டிகேட் வங்கி, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, பரோடா வங்கி உள்ளிட்ட பல்வேறு வங்கிகளில் பணியாற்ற வேண்டும் என்றால் ஐபிபிஎஸ் சார்பில் நடைபெறும் தேர்வில் பங்கேற்று வெற்றி பெறவேண்டியது கட்டாயம். இந்த அமைப்பின் சார்பில் ஐபிபிஎஸ் கிளார்க் பணியிடங்களுக்கான விண்ணப்ப தேதிகளும், தேர்வு தேதிகளும் வெளியிடப்பட்டுள்ளது. 
 
மொத்த காலிப் பணியிடம் : 12,075 
பணி : கிளார்க் 
விண்ணப்பங்கள் வரவேற்கப்படும் நாள் : 17 செப்டம்பர் 2019 
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 09 செப்டம்பர் 2019 (மாலை 5)
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.