வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: 2019-09-15
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Tuesday, September 24, 2019

`ஹெல்மெட்டுடன் வந்த 7 பேர்; அலறி ஓடிய மாணவன்!' - கல்லூரி அருகில் கொல்லப்பட்ட பயங்கரம் - Helmet Persons are murdering someone

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகில் உள்ள செய்துங்கநல்லூரைச் சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன். இவரது மகன் அபிமணி என்ற திலீப். இவர் செய்துங்கநல்லூரில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் மெக்கானிக்கல் பிரிவில் 3-ம் ஆண்டு பயின்று வருகிறார்.
 



இன்று வழக்கம் போல் கல்லூரிக்கு வந்தார் அபிமணி. மதிய உணவு சாப்பிடுவதற்காக 1 மணி அளவில் அவரது வீட்டிற்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார். செய்துங்கநல்லூரிலிருந்து சிவந்திபட்டி ரோட்டில் உள்ள ரயில்வே கேட் அருகில் சென்று கொண்டிருந்த போது, ஹெல்மட் அணிந்து கொண்டு 3 பைக்கில் வந்த 7 பேர் அவரை வழி மறித்தனர். அக்கும்பலைப் பார்த்ததும் பைக்கை கீழே போட்டுவிட்டு காட்டுப்பகுதிக்குள் பயந்து ஓடினார் அபிமணி.




கையில் அரிவாள்களுடன் துரத்தி அவரை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடினர். கழுத்துப் பகுதியில் ஆழமாக வெட்டுபட்ட அபிமணி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கல்லுரி அருகில் கொலை நடந்ததால் பொதுமக்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் திரண்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கொலைக்கான காரணம் குறித்து விசாரித்தோம். கடந்த ஏப்ரல் மாதம், இதே ஊரைச் சேர்ந்த காமராஜ் என்பவருக்கும் தீலிப்பின் தாத்தா ஓய்வுபெற்ற பி.எஸ்.என்.எல் ஊழியர் காளிதாசன் என்பவருக்கும் அப்பகுதியில் உள்ள சுடலைமாடசுவாமி கோயில் திருவிழாவின் வரவு செலவு கணக்கு காட்டுவதில் தகராறு வந்துள்ளது.




இதில் காமராஜை ஒரு கும்பல் வெட்டியது. இந்த வழக்கில் காளிதாசன் மகன் பொன்ராஜ், கொலை செய்யப்பட்ட அபிமணி உட்பட 4 பேரை போலீஸார் கைது செய்து வழக்குப்பதிவு செய்தனர். காமராஜின் கொலைச் சம்பவத்திற்குப் பழிக்குப் பழி வாங்குவதற்காக இந்தச் சம்பவம் நடந்திருக்கலாம் எனச் சொல்லப்படுகிறது. இக்கொலைச் சம்பவத்தில் காமராஜின் சகோதரர் குமார் உட்பட 7 பேர் மீது வழக்கு பதிவு செய்து தப்பியோடியவர்களை தேடி வருகின்றனர். அபிமணியின் தாயார் பொன்ராணி அப்பகுதியிலுள்ள தனியார் பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக உள்ளார்.


இவருக்கு வளர்மதி என்ற தங்கையும், கண்ணன் என்ற தம்பியும் உள்ளனர்.
கடந்த மூன்று மாதங்களில் தூத்துக்குடி மாவட்டத்தில் நடந்த கொலைகளின் பட்டியலில் இது 20வது கொலையாகும். இதுகுறித்து எஸ்.பி.அருண் பாலகோபாலன் கூறுகையில், ``தூத்துக்குடி மாவடத்தில் தொடர்ந்து நடைபெறும் குற்றச் செயல்கள், கொலைகளை தடுக்கும் வகையில் அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. மாவட்டம் முழுவதும் 200 வாகனங்களில் போலீஸ் ரோந்து இரவு பகலாக தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.


பழைய குற்றவாளிகளின் நடமாட்டம் ரகசியமாகக் கண்காணிக்கப்படுகிறது. இதில் உள் பகையால் ஏற்படும் கொலைகளையும் தடுக்க மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கல்லூரி மாணவர் கொலை சம்பந்தப்பட்ட கொலையாளிகளைப் பிடிக்க மூன்று தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது” என்றார். கல்லூரி அருகில் பட்டப்பகலில் நடந்த இக்கொலைச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்பத்தியுள்ளது.

கருங்குழி பேரூராட்சியில் நுாலகம் வைத்து அசத்தல் | New Library in Karunguzhi Town Panchayat

கருங்குழி பேரூராட்சி அலுவலகத்தில், சிறிய அளவிலான நுாலகத்தை அமைத்து, அதில் பல வகையான புத்தகங்கள் வைத்திருப்பது பயன் அளிப்பதாக உள்ளது என, ஊழியர்கள் கூறுகின்றனர்.மதுராந்தகம் ஒன்றியத்திறகு உட்பட்டது, கருங்குழி பேரூராட்சி.



இப்பேரூராட்சி அலுவலகத்தில், அங்கு பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் பேரூராட்சி அலுவலக அனைத்து பணியாளர்களுக்குமான சிறிய அளவிலான நுாலகம் ஒன்று, பேரூராட்சி நிர்வாகம் சார்பில் அமைக்கப்பட்டுள்ளது.இந்த நுாலகத்தில், திடக்கிழவு மேலாண்மை உள்ளிட்ட, அரசு திட்டங்கள் சார்ந்த பல புத்தகங்களும், அரசியல் அமைப்பு மற்றும் மூலிகை செடி வகைகள் புத்தகங்கள் உள்ளன.மேலும், மண் வகைகளின் தன்மைகள், பிளாஸ்டிக் விளைவுகள், பூமி வெப்பமாதல் உள்ளிட்ட, விளக்கங்கள் தரும், பல வகையான புத்தகங்களும் உள்ளன.


அலுவலகத்தில், மதிய உணவு இடைவெளி உள்ளிட்ட நேரங்களில், பேரூராட்சி அலுவலக ஊழியர்கள், இப்புத்தகங்களை படிக்கின்றனர்.இந்த நுாலகத்தில் உள்ள புத்தகங்கள் மூலம், பல்வேறு தகவல்களை அறிந்து, விழிப்புணர்வுபெற வசதியாக உள்ளதாக அலுவலக பணியாளர்கள் பெருமையோடு கூறுகின்றனர்.

Wednesday, September 18, 2019

இரவு 9 மணிக்கு மேல் தாம்பரத்திற்குள் பேருந்து வராததால் பொதுமக்கள் அவதி | பொதுமேலாளர் தலையிட்டு பொறுப்பேற்பாரா...? | Padappai Bus Problem Latest News

அரசு பேருந்து என்றாலே அவல நிலைதான் என்ற கூக்குரல் எப்போதும் ஒலித்துக் கொண்டே இருப்பது அனைவரும் அறிந்ததே.....!
தமிழக முதல்வர் திரு.எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் சமீப காலமாக கலர்கலராக புதுப்புதுப் பேருந்துகளை கண்கவர் பொலிவுடன் போக்குவரத்துக் கழகத்துடன் இணைத்து வருகிறார். முதலமைச்சரின் இதுபோன்ற செயல்கள் மூலம் தமிழக மக்களுக்கு தரமான மற்றும் பாதுகாப்பான பேருந்து வசதிகள் புதிய தொழில்நுட்பத்துடன் கிடைத்தது என்பது மிகவும் மகிழ்ச்சியான செய்தி.




ஆனால் இதே போக்குவரத்துக் கழகத்தில்தான் பொதுமக்கள் அவதிக்குள்ளாக்கும் பல்வேறு செயல்களும் நடைபெற்று வருகிறது. பல்வேறு வழித்தடங்களில் பேருந்துகள் முறையான வழியிலோ அல்லது குறித்த நேரத்திலோ இயக்கப்படுவதில்லை.


குறிப்பாக தற்போது தாம்பரம்   முதல் காஞ்சிபுரம் மற்றும் வேலூர் வரை படப்பை வழியாக இயக்கப்படும் பேருந்துகள் இரவு 9 மணிக்கு மேல் தாம்பரம், பெருங்களத்தூர், வண்டலூர் வழியாக செல்வதில்லை. 
மாறாக, வள்ளுவர் குருகுலம் பள்ளி வழியாக திருப்பிவிடப்பட்டு சென்றுவிடுகின்றன.

எனவே, படப்பை மற்றும் அதைத் தாண்டி செல்லும் பொதுமக்கள் முதல் ஐ.டி ஊழியர்கள் வரை அனைவரும் மிகுந்த சிரமத்திற்குள்ளாகுகின்றனர்.  பகல் முழுவதும் உழைத்துவிடு பணி முடிந்து இரவு வீடு திரும்பும் சாதாரண பொதுமக்கள் இரவு ஓய்வு எடுக்க குறித்த நேரத்திற்கு வீடு செல்ல இயலவில்லை.  
 
போக்குவரத்துக்கழக பணிமனையைச் சார்ந்த பொதுமேலாளர் அவர்கள் தங்கள் கீழ் பணிபுரியும் ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களை உரிய முறையில் கண்கானிக்கவில்லையா...? அல்லது தனியார் வாகனங்கள் வருவாய் ஈட்டுவதற்காக பொது மேலாளர் துணை போகிறாரா என்பதே கேள்விக்குறியாக உள்ளது. மேலும் பொதுமக்கள் காஞ்சிபுரம் பணிமனை பொது மேலாளர் அவர்களை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டும் உரிய நடவடிக்கை  மேற்கொள்ளவில்லை. 
 
எனவே, மேல் அதிகாரிகளின் அலட்சியத்தால் தான் இதுபோன்ற செயல்களின் மூலம் அரசாங்கத்திற்கு அவப்பெயர் ஏற்படுகிறது. தமிழக அரசு இதுபோன்ற ஓட்டுநர், நடத்துனர் மற்றும் சம்மந்தப்பட்ட பணிமனை பொது மேலாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமா...? 
 

ஆசிரியர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டத்தில், டி.ஐ.ஜி., சத்யபிரியா உரையாடல் | சட்டங்கள் தெரிந்தால் குற்றங்கள் குறையும் | Kancheepuram Teachers Meeting with DIG Sathiyapriya | Run World Media

''மாணவர்கள், படிக்கும்போதே, சட்டங்களையும், நல்ல பழக்கங்களையும் கற்றுகொண்டால், வரும் காலத்தில் குற்றங்கள் குறையும்'' என, ஆசிரியர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டத்தில், டி.ஐ.ஜி., சத்யபிரியா பேசினார். 
 


காஞ்சிபுரத்தில், மாணவர் காவலர் படை, கடந்தாண்டு துவங்கப்பட்டது. இப்படை குறித்தும், இதில், ஆசிரியர்களின் பங்கு குறித்தும் அறிய, ஆலோசனை கூட்டத்திற்கு, ஏற்பாடு செய்யப்பட்டது. காஞ்சிபுரத்தில், போலீஸ் அதிகாரிகள், பள்ளி ஆசிரியர்கள் ஆலோசனை கூட்டம், நேற்று நடந்தது.
இதில் பங்கேற்ற, போலீஸ் பயிற்சி, டி.ஐ.ஜி., சத்யபிரியா பேசியதாவது:'மாணவர் காவலர் படை' முதலில், கேரளாவில் ஏற்படுத்தப்பட்டது. இதையடுத்து, நாடு முழுவதும் ஏற்படுத்த முடிவானது. தமிழகத்தில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலுார் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில், இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். 
 
பின், பிற மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப்படும்.இதற்காக, அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில், 8, 9ம் வகுப்பு படிக்கும் மாணவ - மாணவியர், இந்த மாணவர் படையில் சேர்க்கப்படுவர். ஒரு பள்ளியில் இருந்து, 44 பேர் தேர்வாவர்.மாணவர்களுக்கு பயிற்சி வழங்க, பள்ளிக்கு இரு ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.காஞ்சிபுரம் மாவட்டத்தில், 210 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. 

அந்த பள்ளி ஆசிரியர்களுக்கு, செங்கல்பட்டு செயின்ட் ஜோசப் பள்ளியில், இன்று நடக்கிறது.மாணவர்கள் படிக்கும்போதே, நல்ல பழக்கங்களையும், சட்டங்களையும் தெரிந்து கொண்டால், எதிர்காலத்தில் குற்றங்கள் குறையும். இதற்காகவே, இந்த மாணவர் படை.பணி ஓய்வுக்கு பின், நிம்மதியாக உறங்க வேண்டுமானால், போலீசார், பயமின்றி, நேர்மையுடன் பணிபுரிய வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.