Run World Media: July 2020

உங்கள் இமெயிலை உள்ளிடுங்கள்-உங்கள் Inboxல் Confirm செய்யுங்கள் நமது செய்தி உடனுக்குடன் வந்து சேரும்

எங்களது பிற செய்திகளை இங்கு தேடவும்

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Wednesday, July 15, 2020

முழுபாதுகாப்புடன் சேகரிக்கப்பட்ட 10,11-ம் வகுப்பு காலண்டு மற்றும் அரையாண்டு விடைத்தாள்கள் | SSLC and 11th Student's quarterly and half yearly exam paper collection


செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் கல்வி மாவட்டத்தில் ரத்து செய்யப்பட்ட பத்தாம் வகுப்பு மற்றும் பதினொன்றாம் வகுப்பு மாணவர்களின் காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகளின் விடைத்தாட்கள் மதுராந்தகம் வி.எம்.மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் சேகரிக்கப்படுகிறது.
இந்த விடைத்தாள்கள் சேகரிப்பு மையத்திற்கு கடந்த 08.07.2020 அன்று முதன்மைக் கல்வி அலுவலர் ஏஞ்சலோ மற்றும் மதுராந்தகம் கல்வி மாவட்ட அலுவலர் முரளி (பொறுப்பு) நேரில் பார்வையிட்டு ஆசிரியர்களுக்கு தக்க ஆலோசனை வழங்கினார்.


கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ள மதுராந்தகம் கல்வி மாவட்ட சாரணர் மற்றும் சாரணிய இயக்கத்தின் சார்பாக விடைத்தாள் சேகரிப்பு மையத்தில் சானிடைசர் மற்றும் மாஸ்க் ஆகியவை விடைத்தாள் ஒப்படைக்கும் தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டது


எனவே, இதுநாள்வரை விடைத்தாள்கள் சேகரிக்கும் பணிகள் மற்றும் அடுத்தகட்ட பணிகளானது முழுப்பாதுகாப்புடன் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Monday, July 13, 2020

செத்தா சாகட்டும்..! போலீஸின் அலட்சிய பேச்சு | Police Careless speech | Vil Ambu News

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் புதுமனை பகுதியைச் சேர்ந்த மூர்த்தி என்பவரின் மகன் முகிலன் (27), ஊரடங்கை மீறி நேற்று வெளியில் வந்துள்ளார். 


போலீஸார் அவரது பைக்கைப் பறிமுதல் செய்ததால், ஆத்திரமடைந்த முகிலன் அருகில் உள்ள அக்காள் வீட்டிற்குச் சென்று மண்ணெண்ணெய் கேனை தூக்கிக் கொண்டுவந்துள்ளார்.


`போலீஸ்தான் என் சாவுக்கு காரணம்' என்று கூறி தேசிய நெடுஞ்சாலையில் நின்றபடி தீக்குளித்தார். பலத்த தீக்காயமடைந்த முகிலன் சிகிச்சைக்காக வேலூரில் உள்ள சி.எம்.சி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகமே சிகிச்சைக்கான செலவுகளை ஏற்க முன்வந்துள்ளது.


சம்பவம் குறித்து திருப்பத்தூர் எஸ்.பி விஜயகுமார், ``தீக்குளித்த இளைஞர் வந்துசெல்லும் காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகியிருக்கிறது.

சம்பவ இடத்தில் 5 போலீஸார் இருந்துள்ளனர். போலீஸ் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்லியிருக்கிறார். அட்ரஸும் கொடுத்திருக்கிறார். அதன் பின்னரே பக்கத்தில் உள்ள வீட்டுக்குப் போய் மண்ணெண்ணெய்யை ஊற்றிக்கொண்டு வந்துதான் தீக்குளித்தார். 

ஆம்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது அந்த இளைஞரே மது போதையில் இருப்பதாகக் கூறினார். சி.எம்.சி மருத்துவர்களும் அவர் மது போதையில் இருப்பதாகக் கூறியிருக்கிறார்கள்'' என்றார்.

இதனிடையே, சம்பவத்தின்போது அருகில் நின்று வேடிக்கை பார்த்ததாகக் கூறப்படும் ஆம்பூர் நகரக் காவல் நிலையத்தைச் சேர்ந்த 5 போலீஸாரும், ஊர்க்காவல் படையினரும் திருப்பத்தூர் நகரக் காவல் நிலையத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் காவல்துறையினர் நடந்து கொண்ட விதம் பொதுமக்களைத் கொந்தளிக்கவும் செய்திருக்கிறது.
``முகிலன் மண்ணெண்ணெய்யை உடலில் ஊற்றும்போது அருகில் இருந்த போலீஸார் தடுக்க முன்வராதது ஏன்? கொளுத்திக் கொண்ட பிறகும் தீயை அணைத்து அவரைக் காப்பாற்றவும் முயற்சி செய்யவில்லை. தீயை அணைக்க வந்த மக்களிடமும் அச்சுறுத்தும் வகையில் பேசியிருக்கிறார்கள் காக்கிகள். `செத்தா சாகட்டும்' என்ற வார்த்தையை விட்டிருக்கிறார் சந்திரசேகர் என்ற காவலர்.

`மது போதையில் இருந்தார்' என்றால் அதுதொடர்பாக ஏன் வழக்கு பதியவில்லை? சம்பவ இடத்திற்கு வந்த 108 ஆம்பலன்ஸ் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. தனியார் ஆம்புலன்ஸ் மூலமாகத்தான் முகிலனை ஆம்பூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். அங்கிருந்துதான் சி.எம்.சி-க்கு மாற்றப்பட்டார். தீக்குளித்த இளைஞர் முகிலனுக்கு போலீஸாரால் வேறு ஏதோ பிரச்னை நடந்திருக்கிறது. 

இந்த விவகாரத்தில் எஸ்.பி-யும் பொய் சொல்கிறார். `தற்செயலாக நடந்த விபத்து' என்று திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை அறிக்கை வெளியிட்டிருக்கிறது. இது, மிகவும் கண்டிக்கத்தக்கது'' என்று கொந்தளிக்கிறார்கள், சம்பவத்தை நேரில் பார்த்த மக்கள்.

இந்த சம்பவத்தில், புலன் விசாரணை அதிகாரியாக மாவட்ட குற்றப்பிரிவு டி.எஸ்.பி பிரவீன்குமாரை நியமித்திருக்கிறார் எஸ்.பி விஜயகுமார். விசாரணை நகர்வுகளை அறிய டி.எஸ்.பி பிரவீன்குமாரை போனில் தொடர்புகொண்டோம். போனை எடுத்துப் பேசிய அவர், `கொஞ்சம் பிஸியாக இருக்கிறேன்' என்றுகூறி அழைப்பைத் துண்டித்தார்.

Wednesday, July 8, 2020

செங்கை எஸ்.பி. தலைமையில் மதுராந்தகத்தில் நடைபெற்ற கொரோனா விழிப்புணர்வு கூட்டம் | Chengalpattu SP Meeting | Vil Ambu News


செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெ.கண்ணன் தலைமையில் காவலர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், மினி வேன் உள்ளிட்ட சில தொழிலாளர்களுக்கு கொரோனா விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
மதுராந்தகம் சி.எஸ்.ஐ நடுநிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு கூட்டத்தில் மதுராந்தகம் காவல் துணை கண்காணிப்பாளர் ஆர்.மகேந்திரன் முன்னிலை வகித்தார்.
தற்போது மதுராந்தகம் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தின் பல்வேறு பகுதிகளில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வரும் நிலையில் முகக்கவசம் அணிதல், கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்தல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் போன்றவற்றை பொதுமக்களுக்கு அறிவுறுத்த வேண்டும் எனவும், வியாபாரிகள், வாகன ஓட்டிகளும் கட்டாயம் இந்த செயல்களை கட்டாயம் பின்பற்ற வேண்டும் எனவும் எஸ்.பி. கண்ணன் அறிவுறுத்தினார்.
மேலும், பொதுமக்கள் காவல் துறையினர் எப்போதும் நண்பர்களாக இருக்க வேண்டும் எனவும், பொதுமக்கள் புகார் அளிக்க வரும் தருணத்தில் எக்காரணத்தை கொண்டும் அவர்களிடம் அசாதாரணமாக நடந்து கொள்ள கூடாது எனவும் சுமூகமாக நடந்து கொள்ளவேண்டும் எனவும் காவலர்களுக்கு அறிவுறுத்தினார். காவல் துறையில் முறையாக புகார்கள் ஏற்றுக் கொள்ளப்படாத தருணத்தில் என்னை நேரடியாகவோ அல்லது தொலைபேசி வாயிலாகவோ தொடர்புகொண்டு புகார் அளிக்கலாம் எனவும் தெரிவித்தார்.
ஆட்டோ ஓட்டுநர்கள், லோடு வாகன ஓட்டுநர்கள், நடைபாதை வியாபாரிகள், பாஸ்ட் புட் உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட சுமார் 200 நபர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
இந்த விழிப்புணர்வு கூட்டத்தில் மதுராந்தகம் காவல் ஆய்வாளர் ருக்மாங்கதன், அச்சிறுபாக்கம் காவல் ஆய்வாளர் டி.எஸ்.சரவணன், சூணாம்பேடு காவல் ஆய்வாளர் தரனேஸ்வரி, மேல்மருவத்தூர் காவல் ஆய்வாளர் தமிழ்வாணன், போக்குவரத்து காவல் ஆய்வாளர் ஆனந்த்ராஜ் மற்றும் அனைத்து காவல் உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tuesday, July 7, 2020

வேலாமூரில் தொண்டு நிறுவனம் வழங்கிய கொரோனா நிவாரணம் மற்றும் மரக்கன்றுகள் | Velamur Corona Relief | Vil Ambu News

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், அச்சிறுபாக்கம் ஒன்றியத்திற்குட்பட்ட வேலாமூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசிக்கும் 50-க்கும் மேற்பட்ட ஏழை எளிய பெண்களுக்கு சென்னை மேக்னம் சாரிட்டபிள் டிரஸ்ட் தொண்டு நிறுவனமானது வேலாமூர் ரூரல் ஸ்டார் டிரஸ்ட் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்புகளை கொரோனா நிவாரண உதவியாக வழங்கியது.
சென்னை மேக்னம் சாரிட்டபிள் டிரஸ்ட் தொண்டு நிறுவனத்தின் தலைவர் டாக்டர்.எஸ்.கோமதி தலைமையில் ரூரல் ஸ்டார் டிரஸ்ட் தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் அ.டோமினிக் முன்னிலையில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்ட இந்த நிகழ்வில் வேலாமூர், இராமாபுரம், காட்டுக்கரணை, செண்டிவாக்கம் உள்ளிட்ட கிராமங்களைச் சார்ந்த ஏழை எளிய பெண்கள் பயனடைந்தனர். 
இந்த நிகழ்வில் யு.எஸ்.எப் தொண்டு நிறுனத்தின் நிறுவனர் அன்பழகன், தன்னார்வலர் தணிகைக்குமார் மற்றும் மேக்னம் சாரிட்டபிள் டிரஸ்ட்டின் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியின் கலந்துகொண்ட அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. மேலும், பின்வரும் காலங்களில் மகளிர்களுக்கு தேவையான கைவினைப் பொருட்கள் உற்பத்தி செய்யும் பயிற்சி, தையற்பயிற்சி உள்ளிட்ட பயிற்சிகள் இலவசமாக வழங்கப்படும் என மேக்னம் சாரிட்டபிள் டிரஸ்ட் தொண்டு நிறுவனத்தின் தலைவர் டாக்டர்.எஸ்.கோமதி தெரிவித்தார்.

Sunday, July 5, 2020

FO போலீஸ்-க்கு தடை | முழு காரணம் என்ன..? | Will stop Friends of Police | Vil Ambu News

போலீஸ் நண்பர்கள் குழுவிற்கு விழுப்புரம், திருச்சி, கரூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்கள் மற்றும் நெல்லை சரகத்தில் தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
போலீஸ் என்ற வார்த்தை மரியாதைக்குரியதும், பயபக்தியுடன் சட்டத்தை மதிக்க வைப்பதற்கும் ஓர் மந்திர வார்த்தையாக உள்ளது. மக்களில் சிலர் கூறுவர் போலீஸ்தான் நாட்டை ஆளுகிறது என...! ஆம் சட்ட ஒழுங்கை நிலைநாட்டி பொதுமக்கள் மற்றும் குடிமக்கள் இப்படிதான் இருக்கவேண்டும் என ஆயிரம் சட்டங்கள் இயற்றப்பட்டிருந்தாலும் அது போலீஸ்காரர்கள் மூலமாகதான் பிரதிபலிக்கிறது.


போலீஸ்காரர்களுக்கு போதிய நேர நிர்ணயம் இன்றி பணி செய்து வந்த நாட்களில் பணிச்சுமையை குறைப்பதற்காக காவல் துறை மூலமாக 1946 -ம் ஆண்டு சைனோ-இந்தியன் போருக்கு பிறகு பலகட்டங்களாக பணியமர்த்தப்பட்டவர்கள் ஊர்காவல்படையினர் (Home Guard Police).


தற்போது அதிகரித்துவரும் காவல் துறையினரின் பணிச்சுமையின் காரணமாக போக்குவரத்து சீர்செய்தல் உள்ளிட்ட பணிகளுக்கு தன்னார்வலராக பணியமர்த்தப்பட்டவர்கள்தான் தற்போதைய போலீஸ் நண்பர்கள் குழு (Friends of Police)


இவர்கள் அரசு பணியாளர்கள் அல்ல. காவல் துறையினரால் தன்னார்வலராக பணியமர்த்தப்பட்டவர்கள் இவர்கள். ஆனால் இவர்கள் தங்களை நிஜ போலீசாக பாவித்துக் கொண்டு செய்யாத அட்டகாசமே இல்லை.


போக்குவரத்து சோதனைச் சாவடிகள் அல்லது ஏதேனும் பந்தோபஸ்துகளில் காவல் துறையினருடன் சேர்ந்து பணியாற்றும்போது உண்மையான போலீஸ் முறையாக ஓர் நபரிடம் கேள்வி கேட்டு குறிப்பிட்ட நபரை விசாரணை செய்வதற்கு முன்னரே முந்திரிக் கொட்டை போல முந்திக் கொண்டு குறிப்பிட்ட நபரை பாடாய் படுத்துபவர்களும் இவர்களே (FOP).


இதையெல்லாம் யோசித்தால் ஊர்காவல்படையினருக்கே ஓர் சல்யூட் அடிக்கலாம். ஆம்...! காவல் துறையினரின் உரிய வழிகாட்டுதல்களை பின்பற்றி முறையாக பணியாற்றிவரும் ஊர்காவல் படையினர்கள் எங்கே..? ஊரைச் சுற்றித் திரிந்த இந்த புள்ளிங்கோக்கள் எங்கே..?


பொதுமக்கள் கூறுவது என்னவென்றால்... நேற்றுவரை எனது ஏரியாவில் சுற்றித் திரிந்த புள்ளீங்கோ கும்பல் இன்று போலீசாருடன் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் என்ற போர்வையில் சுற்றித் திரிவதாக வேதனை தெரிவிக்கின்றனர். மேலும், தற்போது இவர்களுக்கு பதிலாக ஊர்காவல்படை மற்றும் முன்னாள் இராணுவத்தினரை பணியமர்த்தலாம் என ஆலோசிக்கப்பட்டுள்ளது.


அதாவது, சட்டம் என்றால் என்ன..? பொதுமக்களை எப்படி வழிநடத்த வேண்டும்...?  நமக்கு என்ன பணி வழங்கப்பட்டுள்ளது என்பதை சிறிதும் அறியாத இந்த FOP பசங்களின் பணி தற்போது சாத்தான்குளம் பிரச்சனை காரணமாக பறிபோய் உள்ளது என்பதை பொதுமக்கள் பலரும் வரவேற்கின்றனர். மேலும், தமிழகம் முழுவதும் இந்த தடை அமல்படுத்தப்படவேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். யுனிபார்ம் போட்டுகிட்டு கெத்தாக திரிந்த இவர்கள் மறுபடியும் புள்ளீங்கோக்களாக திரிந்து போலீஸ் ஸ்டேஷனுக்கே செல்லும் நாள் எங்கே....???
-வில் அம்பு ஆசிரியர், பழனிவேல் பாலாஜி

Featured Post

ரத்தம் சொட்ட சொட்ட.. மனைவியின் தலையுடன் தெருவில் நடந்து சென்ற இளைஞர்..

பட்டபகலில் மனைவியின் தலையை வெட்டி, ரத்தம் சொட்ட சொட்ட.. கையில் வைத்து கொண்டு தெருவில் நடந்து சென்ற இளைஞரை கண்டு பொதுமக்கள் அலறி அடி...

நமது சேனலில் வீடியோக்களை காண்க

சமூக சீரழிவு செய்திகள்