வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: மருமகள்களை ரூ1.50 லட்சத்திற்கு விற்பனை செய்த மாமனார் மற்றும் மாமியார்
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Tuesday, October 23, 2018

மருமகள்களை ரூ1.50 லட்சத்திற்கு விற்பனை செய்த மாமனார் மற்றும் மாமியார்ராஜஸ்தான் மாநிலத்தில் ரூ5 லட்சம் வரதட்சணை கொடுக்காத மருமகள்களை ரூ1.50 லட்சத்திற்கு விற்பனை செய்த மாமனார் மற்றும் மாமியார் உட்பட 9 பேர் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது.

ராஜஸ்தானை சேர்ந்த நிர்மலா, சர்மிளா ஆகிய இரு சகோதரிகளும் மும்பை அருகில் உள்ள விராரைச் சேர்ந்த சகோதரர்கள் சஞ்சய் ராவல் மற்றும் வருண் ராவல் ஆகிய இரண்டு பேருக்கும் 2015ம் ஆண்டு திருமணம் செய்து வைக்கப்பட்டனர். திருமணமான ஆறு மாதத்தில் அவர்களிடம் கணவன் வீட்டார் ரூ.9 லட்சம் வரதட்சணை வாங்கி வரும்படி சித்ரவதை செய்தனர். அவர்கள் தங்களது பெற்றோரிடம் சொல்லி ரூ.5 லட்சம் வாங்கிக்கொண்டு வந்து கொடுத்தனர்

ஆனால் மேலும் ரூ 5 லட்சம் வாங்கி வரும்படி கட்டாயப்படுத்தி சித்ரவதை செய்தனர். ஆனால் அவர்கள் வரதட்சணை வாங்கி வரவில்லை. இதனால் இரண்டு மருமகள்களையும் கணவன் வீட்டார் அடித்து உதைத்து சித்ரவதை செய்தனர். அதோடு அப்பெண்கள் இரண்டு பேரையும் ராஜஸ்தானில் உள்ள பிந்த்வாரே நகருக்கு அழைத்து சென்று அங்கு அடைத்து வைத்தனர். 
  (தொடர்ச்சி கீழே...) 
இதையும் படிக்கலாமே !!!

10 நாட்களுக்கு பிறகு அப்பெண்கள் இருவரையும் மும்பைக்கு அடையாளம் தெரியாத ஒருவருடன் அனுப்பிவைத்தனர்.அந்த நபர், ‘‘உங்களை ரூ1.50 லட்சத்திற்கு விலைக்கு வாங்கி உள்ளேன். அதனை வசூலிக்கும் வரை விடமாட்டேன்’’ என்று தெரிவித்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த அப்பெண்கள், அந்த நபரிடம் இருந்து தப்பித்து வந்து, போலீசில்  புகார் அளித்துள்ளனர். அப்பெண்களின் கணவன்கள், மாமனார் மோகன்லால், மாமியார் லீலாதேவி மற்றும் உறவினர்கள் 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்யபட்டு உள்ளது.

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts

No comments:

Post a Comment