வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: தோழிகளிடம் தகராறு செய்ததை தட்டிக்கேட்டதால் பீர் பாட்டிலால் தாக்கி ஓட்டல் ஊழியர் கொலை : 3 வாலிபர்களுக்கு வலைவீச்சு
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Saturday, October 20, 2018

தோழிகளிடம் தகராறு செய்ததை தட்டிக்கேட்டதால் பீர் பாட்டிலால் தாக்கி ஓட்டல் ஊழியர் கொலை : 3 வாலிபர்களுக்கு வலைவீச்சுதோழிகளிடம் தகராறு செய்ததை தட்டிக்கேட்டதால் பீர் பாட்டிலால் தாக்கி ஓட்டல் ஊழியர் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 3 வாலிபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர். உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் ஜெகதீஷ் சிங்(வயது 21). இவர், பெங்களூரு யஷ்வந்தபுரம் அருகே மத்திகெரேயில் தங்கி, ஓட்டல் ஒன்றில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் இரவு தனது நண்பர் சுகாஷ் சிங் என்பவருடன் மத்திகெரே, எல்.சி.ஆர். ரோட்டில் உள்ள ஓட்டலுக்கு ஜெகதீஷ் சிங் சாப்பிட சென்றார். அப்போது அவரது தோழிகள் 2 பேரும் சாப்பிட ஓட்டலுக்கு சென்றிருந்தனர். ஓட்டல் முன்பாக வைத்து ஜெகதீஷ் சிங் தனது நண்பர் மற்றும் தோழிகளுடன் பேசிக் கொண்டிருந்தார். (தொடர்ச்சி கீழே...)
 
இதையும் படிக்கலாமே !!!

அந்த சந்தர்ப்பத்தில் அங்கு குடிபோதையில் 3 வாலிபர்கள் வந்தனர். அவர்கள், ஜெகதீஷ் சிங்கின் தோழிகளை திட்டியதாகவும், தகராறு செய்ததாகவும் கூறப்படுகிறது. இதை பார்த்து ஆத்திரமடைந்த ஜெகதீஷ் சிங், 3 வாலிபர்களையும் தட்டிக்கேட்டதுடன், அங்கிருந்து செல்லும்படி எச்சரித்தார். இதுதொடர்பாக அவர்களுக்குள் வாக்குவாதம் உண்டானது.


இந்த நிலையில், திடீரென்று அந்த வாலிபர்கள் தாங்கள் வைத்திருந்த பீர் பாட்டிலால் ஜெகதீஷ் சிங்கின் தலையில் தாக்கியதாகவும், கத்தியால் குத்தியதாகவும் தெரிகிறது. உடனே அந்த வாலிபர்களை சுகாஷ் சிங் பிடிக்க முயன்றார். இதனால் அவரையும், வாலிபர்கள் தாக்கிவிட்டு தப்பி ஓடிவிட்டார்கள். இதில், ஜெகதீஷ் சிங்கின் தலையில் பலத்தகாயம் ஏற்பட்டது. சுகாஷ் சிங்கும் காயம் அடைந்தார். அவர்கள் 2 பேரும் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ஜெகதீஷ் சிங் இறந்துவிட்டார். சுகாஷ் சிங் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.


இதுபற்றி அறிந்ததும் சம்பவ இடத்திற்கு சென்று யஷ்வந்தபுரம் போலீசார் விசாரித்தனர். அப்போது குடிபோதையில் இருந்த 3 வாலிபர்கள் ஜெகதீஷ் சிங்கை கொலை செய்ததும், அந்த வாலிபர்கள் 3 பேருக்கும் சுமார் 25 வயது இருக்கும் என்றும் தெரிந்தது. இதுகுறித்து யஷ்வந்தபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த 3 வாலிபர்களையும் வலைவீசி தேடிவருகிறார்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


No comments:

Post a Comment