வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: 6 மாதங்களில் 100 கோடி ஆதார் தகவல் கசிவு: சர்வதேச இணையப் பாதுகாப்பு நிறுவனம் தகவல்
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Tuesday, October 16, 2018

6 மாதங்களில் 100 கோடி ஆதார் தகவல் கசிவு: சர்வதேச இணையப் பாதுகாப்பு நிறுவனம் தகவல்2018ம் ஆண்டின் முதல் ஆறு மாதங் களில் 100 கோடி ஆதார் தகவல்கள் கசிந்துள்ளதாக கெமல்டோ என்ற சர்வதேச அளவிலான இணையப் பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
                                   

கெமல்டோ என்ற சர்வதேச இணையப் பாதுகாப்பு நிறுவனம், இணையத்தில் நடைபெறும் தகவல் கசிவு தொடர்பான விவரங்களைச் சேகரித்துவருகிறது. மேலும் இணையப் பாதுகாப்பு, தகவல் பாதுகாப்பு உள்ளிட்ட நடவடிக்கை களுக்குத் தேவையான சேவைக ளையும் கெமல்டோ செய்து வருகிறது.


இந்நிறுவனம் சமீபத்தில் ஆதார் தகவல்களில் நடந்த அத்துமீறல் களைப் பதிவு செய்துள்ளது. இது தொடர்பாக அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது.

தகவல் பாதுகாப்பு அத்துமீறல்கள

இந்த அறிக்கையில் ஆதார் தக வல் அத்துமீறல் நிகழ்வுகளில் இந்த வருடத்தின் முதல் ஆறு மாதங் களில் 100 கோடி அளவிலான தனி நபர் தகவல்கள் கசிந்துள்ளதாகக் கூறுகிறது. இவற்றில் தனிநபரு டைய பெயர், முகவரி மற்றும் பிற தனிப்பட்ட விவரங்களும் அடங் கும். மேலும் இதில் கவலை தரும் விஷயம் என்னவெனில், கசிந் துள்ள தகவல்களில் 12ல் ஒரு தகவல் மட்டும்தான் என்க்ரிப்ஷன் மூலம் பாதுகாக்கப்பட்டுள்ளது என்று கெமல்டோ கூறியுள்ளது.(தொடர்ச்சி கீழே...)

இதையும் படிக்கலாமே !!!

உலக அளவில் இந்த வருடத் தின் முதல் ஆறு மாதத்தில் 945 தகவல் அத்துமீறல்கள் நடந்துள்ள தாகவும் அதன் மூலம் 450 கோடி தகவல்கள் கசிந்துள்ளதாகவும் கெமல்டோ கூறுகிறது. இது கடந்த 2017ம் ஆண்டின் இதே காலகட் டத்தில் கசிந்த தகவல் களைக் காட்டிலும் 133 சதவீதம் உயர்வு என்று கூறுகிறது.


அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts

 

No comments:

Post a Comment