வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: [அரசு வேலை] ரூ.60 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை! (Last Date - 02.11.2018)
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Tuesday, October 23, 2018

[அரசு வேலை] ரூ.60 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை! (Last Date - 02.11.2018)தமிழக அரசின் தொழிலாளர் நலத்துறையின் கீழ் இயங்கி வரும் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம், 177 இளநிலை உதவியாளர், கணினி இயக்குபவர் உள்ளிட்ட பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்ழுமும் உடையோர் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

ரூ.60 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை!
 மொத்த காலிப் பணியிடம் : 177
 பணி விபரம் :- 
 இளநிலை உதவியாளர் : 66
 கணினி இயக்குபவர் : 111    (தொடர்ச்சி கீழே...) 

இதையும் படிக்கலாமே !!!
கல்வித் தகுதி:-
 இளநிலை உதவியாளர் : பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 
கணினி இயக்குபவர் : 10-ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் கணினி துறையில் சான்றிதழ் அல்லது பட்டம் பெற்றிருக்க வேண்டும். கணினியில் ஒரு மணி நேரத்தில் 8 ஆயிரம் எழுத்துக்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

 ஊதியம் : ரூ. 19,500 முதல் ரூ. 62,000 வரையில்

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம் :
  •   பொது மற்றும் ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு - ரூ.100
  •  இதர விண்ணப்பதாரர்களுக்குக் கட்டணம் இல்லை. 
 கட்டணம் செலுத்தும் முறை : விண்ணப்பக் கட்டணத்தை "The Secretary, TNCWWB" என்னும் பெயருக்கு சென்னையில் மாற்றத்தக்க வகையில் வங்கி வரவோலையாக எடுத்து விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும்.


விண்ணப்பிக்கும் முறை : http://www.labour.tn.gov.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இப்பணியிடத்திற்கான விண்ணப்பம் உள்ளது. அதனைப் பதிவிறக்கம் செய்து குறிப்பிட்ட சான்றிழ்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : செயலாளர், தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியம், 8- வள்ளுவர் கோட்டம் நெடுஞ்சாலை, நுங்கம்பாக்கம், சென்னை - 600034


விண்ணப்பிக்க வரவேற்கப்படும் கடைசி தேதி : 2018 நவம்பர் 02

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறிந்து கொள்ளவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://www.labour.tn.gov.in அல்லது http://govtjobsbest.com/wp-content/uploads/2018/10/TNCWWB-Official-Notification-Application-Form.pdf என்னும் லிங்குகளை கிளிக் செய்யவும்.


அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


No comments:

Post a Comment