வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: வந்துட்டார்ல எங்க சிங்கம்.. குஷியில் சரவணன் அருள் ரசிகர்கள்.. ரஜினி பாணியில் கலக்கல் டான்ஸ்!
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Thursday, October 11, 2018

வந்துட்டார்ல எங்க சிங்கம்.. குஷியில் சரவணன் அருள் ரசிகர்கள்.. ரஜினி பாணியில் கலக்கல் டான்ஸ்!வெள்ளையும் ஜொல்லையுமா வந்த சரவணா ஸ்டார் அண்ணாச்சி
  சிறு இடைவேளைக்கு பிறகு மீண்டும் விளம்பரங்களில் கால் வைத்துள்ளார், சரவணா ஸ்டோர் உரிமையாளர் சரவணன் அருள். முன்னணி நிறுவனங்கள், விளம்பர மாடல்களை கொண்டோ, நடிகர், நடிகைகளை கொண்டோதான், தங்களது விளம்பரங்களை நடிக்க வைப்பார்கள். வசந்த் அன்டு கோ உள்ளிட்ட சில நிறுவனங்களில் உரிமையாளர்களே விளம்பர படங்களில் தோன்றுவார்கள். சரவணா ஸ்டோர்ஸ்சை பொருத்தளவில் முதலில், விளம்பர மாடல்கள், சினிமா ஸ்டார்கள்தான் நடித்து வந்தனர். ஆனால், பின்னர்தான், 'தி லெஜெண்ட் சரவணா ஸ்டோர்' உரிமையாளர் சரவணன் அருள், விளம்பர உலகில் கால் பதித்தார்.

நடிகைகளுடன் நடித்தார் 
 அதுவரை, 'தி லெஜெண்ட் சரவணா ஸ்டோர்' உரிமையாளர் எப்படி இருப்பார் என அறியாதவர்கள் எல்லோருமே, விளம்பர படத்தை பார்த்துதான், சரவணன் அருள் யார் என்பதை அறிந்து கொண்டனர். தமன்னா, ஹன்சிகா ஆகிய நடிகைகளுடன் சரவணன் அருள் நடித்த விளம்பர படங்கள் பட்டிதொட்டியெங்கும் சென்று சேர்ந்தன.


வயிற்றெரிச்சல்
 புகழை பார்த்தால் சிலருக்கு உள்ளுக்குள் புழுங்கும் இல்லையா.. அதுபோலத்தான், சரவணன் அருள் புகழ் பரவியதும், அவரை கிண்டல் செய்வது போன்ற மீம்களை சில வயிற்றெரிச்சல் பார்ட்டிகள் வெளியிட்டு, அதில் சந்தோஷப்பட்டனர்.
(தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!
ஆனால், இவையெல்லாம், சரவணன் புகழை குறைக்கவில்லை. அவர் மக்கள் மத்தியில் நல்ல அறிமுகத்தை பெற்றபடிதான் இருந்தார்.

மகள் திருமணம்

இந்த விளம்பர படங்களில் நடித்த நிலையில்தான், சரவணன் அருள் மகளுக்கு திருமணமானது. அப்போது, அடேங்கப்பா, மகளுக்கே திருமணம் செய்து வைக்கும் வயதா இவருக்கு என தமிழகமே ஆச்சரியத்தில் மூக்கில் விரல் வைத்தது. இப்படியாக, தன்னம்பிக்கைக்கு உதாரணமாக விளங்கினார் சரவணன் அருள். தனது மகள் திருமணத்திற்கு, நிறுவனத்தில் பணியாற்றுவோர் குடும்பத்திற்கு பரிசுப்பொருட்கள் வழங்கி அவர்களையும் திருமண விழாவில் தங்கள் குடும்பத்தாரை போலவே கவனித்ததாக பூரிக்கிறார்கள் அங்கு பணியாற்றுவோர்.


ஆடி மாத விளம்பரம் 
ஆனால், கடந்த ஆடி மாத தள்ளுபடி நேரத்தில் வெளியான, 'தி லெஜெண்ட் சரவணா ஸ்டோர்' விளம்பரத்தில், சரவணன் நடிக்கவில்லை. விளம்பர படங்களை உன்னிப்பாக கவனிப்போர் இதை கவனிக்க தயங்கவில்லை. உடம்பு சரியில்லையா என்று சிலர் நகைச்சுவையாக மீம்கள் வெளியிட்டு கேள்வி எழுப்பினர். ஆனால், இதோ மீண்டும் வந்துவிட்டார் சரவணன் அருள். தீபாவளிக்கு என்ட்ரி தீபாவளியையொட்டி, வெளியாகியுள்ள தி லெஜண்ட் சரவணா ஸ்டோர் விளம்பரத்தில், சரவணன் அருள் நடித்துள்ளார். அஸார், ராமர், வடிவேல் பாலாஜி உள்பட பல டிவி சேனல் பிரபலங்களும் அதில் நடித்துள்ளனர். ரஜினிகாந்த்தின் அருணாச்சலம், படையப்பா திரைப்பட நடன பாணியில் உள்ளது சரவணனின் ஆக்ஷன்கள். விளம்பரங்களில் மீண்டும் சரவணன் அருளை கண்டதால் அவரது ரசிகர்கள் படு உற்சாகமாகிவிட்டனர்.
தீபாவளிக்கு என்ட்ரி
தீபாவளியையொட்டி, வெளியாகியுள்ள தி லெஜண்ட் சரவணா ஸ்டோர் விளம்பரத்தில், சரவணன் அருள் நடித்துள்ளார். அஸார், ராமர், வடிவேல் பாலாஜி உள்பட பல டிவி சேனல் பிரபலங்களும் அதில் நடித்துள்ளனர். ரஜினிகாந்த்தின் அருணாச்சலம், படையப்பா திரைப்பட நடன பாணியில் உள்ளது சரவணனின் ஆக்ஷன்கள். விளம்பரங்களில் மீண்டும் சரவணன் அருளை கண்டதால் அவரது ரசிகர்கள் படு உற்சாகமாகிவிட்டனர்.

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


No comments:

Post a Comment