வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: தாயன்பும் கடமை உணர்வும்.. நெகிழ வைக்கும் புகைப்படம்!
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Monday, October 29, 2018

தாயன்பும் கடமை உணர்வும்.. நெகிழ வைக்கும் புகைப்படம்!கடமை உணர்வோடும், தாயன்போடும் இருக்கும் பெண் போலீஸ் ஒருவரின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

நாட்டை காக்கும் பணிகளில் ஈடுபடும் பெண்களானாலும் வீட்டைக் காப்பதிலும் அவர்கள் தூண்களாகவே இருக்கின்றனர். வீட்டில் குழந்தையை கவனித்துக் கொள்ளும் பெண்கள் பணிகளிலும் கெட்டிக்காரர்களாகவே செயல்படுகின்றனர். தற்போது இணையத்தில் பெண் போலீசார் ஒருவரின் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.


உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த ஆய்வாளர் நவ்நீத் சேக்ரா என்பவர் இந்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதில், பெண் போலீசார் ஒருவர் தன் பணியை நாற்காலியில் அமர்ந்தபடி தன் பணியில் ஈடுபட்டுள்ளார். அவர் அருகில் 1 வயதிற்கும் குறைவான அவரின் குழந்தை நிம்மதியாக தூங்குகிறது. இந்த படத்தை பார்க்கும் எவரும் அவ்வளவு எளிதில் இதனை கடந்து சென்றுவிடமாட்டார்கள். ஒருமுறைக்கு இருமுறை அதனை பார்ப்பார்கள்.


அந்தளவிற்கு நெஞ்சை நெகிழ வைக்கும் புகைப்படமாக இது உள்ளது. தேச உணர்வும், தாயுணர்வும் ஒரு சேர அமையப் பெற்ற புகைப்படம். தற்போது இந்த புகைப்படத்தை பலரும் தங்களது சமூக வலைத்தள பக்கத்தில் தற்போது ஷேர் செய்து வருகின்றனர்.


அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


No comments:

Post a Comment