வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: காலையில் கண் விழித்து பார்த்தால்.. பொண்டாட்டியை காணோமே.. அப்படியே ஷாக்கான ராஜேஷ்!
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Friday, October 12, 2018

காலையில் கண் விழித்து பார்த்தால்.. பொண்டாட்டியை காணோமே.. அப்படியே ஷாக்கான ராஜேஷ்!காலையில் கண் விழித்து பார்த்தால்.. பொண்டாட்டியை காணோமே.. அப்படியே ஷாக்கான ராஜேஷ்!

கொடைக்கானல்: புதுமாப்பிள்ளை ராஜேஷின் நிலைமை இப்படி ஆகும் என்று யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். ராஜேஷூம்தான்!! உடுமலைப்பேட்டையை சேர்ந்த ராஜேஷ் என்பவருக்கு 23 வயதான ஒரு இளம்பெண்ணுடன் 2 வாரத்துக்கு முன்னாடிதான் திருமணம் நடைபெற்றது. இதனால் இரு வீட்டிலும் மணமக்களை ஹனிமூனுக்காக கொடைக்கானலுக்கு அனுப்பி வைத்தார்கள். 2 நாட்களுக்கு முன்பு கொடைக்கானல் வந்த ஜோடி, அண்ணாசாலையில் ஒரு ரூம் எடுத்து தங்கினார்கள்.
(தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!

மனைவியை காணோம் 2 நாட்களுக்கும் கொடைக்கானலை சுற்றி பார்த்து ஜாலியாக திரிந்தார்கள். இந்நிலையில், காலையில் மாப்பிள்ளை கண்விழித்து பார்த்தால் பக்கத்தில் மனைவியை காணோம். இதனால் ஷாக் ஆன ராஜேஷ் ஓட்டல் முழுவதும் மனைவியை தேடினார். அங்கிருந்தோரிடம் எல்லாம் விசாரித்து பார்த்தார். எந்த தகவலும் கிடைக்கவில்லை.. மனைவியும் கிடைக்கவில்லை!பெற்றோருக்கு தகவல் அதனால் மாமியார் வீட்டுக்கு போன் போன் செய்து பதட்டத்துடனும், பயத்துடனுடம் விவரத்தை சொன்னார். அவர்களும் பயந்து போய் சொந்தக்காரர்கள் நண்பர்கள் வீடுகளில் தேட ஆரம்பித்தனர். என்றாலும் புதுமாப்பிள்ளைக்கு பயம் போகவே இல்லை. மனைவிக்கு என்ன ஆனதோ என்று கவலைப்பட்டு கொண்டே இருந்தார். புது இடம் என்றாலும் கொடைக்கானல் முழுவதும் தேட ஆரம்பித்தார்.
விசாரணை ஆரம்பம் எதற்கோ போலீசில் ஒரு புகாரை தரலாம் என்று நினைத்து அதையும் செய்தார். போலீசாரும் வழக்கு பதிவு செய்து புதுமணப்பெண்ணை தேட ஆரம்பித்தனர். கூடவே பெற்றோரை அழைத்து விசாரணையும் நடத்தினர். விசாரணையில் உண்மை நிலவரம் அனைவருக்குமே தெரிய வர ஆரம்பித்தது. புதுமணப்பெண் ரமேஷ் என்பவரை உயிருக்குயிராக விரும்பி வந்துள்ளார்.


வற்புறுத்தி திருமணம் இந்த காதல் சமாச்சாரம் வீட்டுக்கு தெரியவரவே, அவசர அவசரமாக மாப்பிள்ளை தேட ஆரம்பித்து ராஜேஷை அந்த பெண்ணுக்கு கல்யாணம் செய்து வைத்துள்ளனர். ஆனாலும் அந்த பெண்ணால் ரமேஷை மறக்க முடியவில்லை. அதனால் திருமணம் முடிந்தாலும் ரமேஷிடம் போனில் பேசியும், அழுதவாறும் இருந்திருக்கிறார். பிறகு ஹனிமூனுக்கு கொடைக்கானல் போக போவதாக ரமேஷிடம் காதலி சொல்லி உள்ளார்


ரமேஷ் - மணப்பெண் அதனால் ரமேஷ் கொடைக்கானலுக்கே வந்துவிட்டார். ஹோட்டலில் தங்கியிருந்த புதுப்பெண்ணையும் அழைத்து கொண்டு எஸ்கேப் ஆகிவிட்டார். இந்த தகவல்கள் அனைத்தும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ள. இதையடுத்து, மாயமான இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர். புது மாப்பிள்ளையுடன் ஹனிமூன் வந்த புதுப்பெண், தன் காதலனுடன் சேர்ந்து திடீரென எஸ்கேப் ஆனது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


No comments:

Post a Comment